Chapter 8

Songs of a cowherd - (காதில் கடிப்பு)

ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்
Songs of a cowherd - (காதில் கடிப்பு)
These verses are structured as if an angry Gopi, upset by Krishna's mischief, speaks in a tone of feigned anger and complaint. The āzhvār captures this playful yet frustrated dialogue, showcasing the Gopi's emotions and her chiding words towards Krishna.
கண்ணன் செயல்களால் சினம் கொண்ட ஆய்ச்சி ஒருத்தி ஊடல் கொண்டு பேசுதல்போல் ஈண்டுப் பாசுரங்கள் அமைந்துள்ளன.
Verses: 1922 to 1931
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will not suffer the ocean of sorrow
  • PT 10.8.1
    1922 ## காதில் கடிப்பு இட்டுக் * கலிங்கம் உடுத்து *
    தாது நல்ல * தண் அம் துழாய்கொடு அணிந்து **
    போது மறுத்துப் * புறமே வந்து நின்றீர் *
    ஏதுக்கு? இது என்? * இது என்? இது என்னோ? 1
  • PT 10.8.2
    1923 துவர் ஆடை உடுத்து * ஒரு செண்டு சிலுப்பி *
    கவர் ஆக முடித்துக் * கலிக் கச்சுக் கட்டி **
    சுவர் ஆர் கதவின் புறமே * வந்து நின்றீர் *
    இவர் ஆர்? இது என்? * இது என்? இது என்னோ? 2
  • PT 10.8.3
    1924 கருளக் கொடி ஒன்று உடையீர் * தனிப் பாகீர் *
    உருளச் சகடம் அது * உறுக்கில் நிமிர்த்தீர் **
    மருளைக்கொடு பாடி வந்து * இல்லம் புகுந்தீர் *
    இருளத்து இது என்? * இது என்? இது என்னோ? 3
  • PT 10.8.4
    1925 நாமம் பலவும் உடை * நாரண நம்பீ *
    தாமத் துளவம் * மிக நாறிடுகின்றீர் **
    காமன் எனப் பாடி வந்து * இல்லம் புகுந்தீர் *
    ஏமத்து இது என்? * இது என்? இது என்னோ? 4
  • PT 10.8.5
    1926 சுற்றும் குழல் தாழச் * சுரிகை அணைத்து *
    மற்று பல * மா மணி பொன் கொடு அணிந்து **
    முற்றம் புகுந்து * முறுவல் செய்து நின்றீர் *
    எற்றுக்கு? இது என்? * இது என்? இது என்னோ? 5
  • PT 10.8.6
    1927 ஆன் ஆயரும் * ஆ நிரையும் அங்கு ஒழிய *
    கூன் ஆயது ஓர் * கொற்ற வில் ஒன்று கை ஏந்தி **
    போனார் இருந்தாரையும் * பார்த்துப் புகுதீர் *
    ஏனோர்கள் முன் என்? * இது என்? இது என்னோ? 6
  • PT 10.8.7
    1928 மல்லே பொருத திரள் * தோள் மணவாளீர் *
    அல்லே அறிந்தோம் * நும் மனத்தின் கருத்தை **
    சொல்லாது ஒழியீர் * சொன்னபோதினால் வாரீர் *
    எல்லே இது என்? * இது என்? இது என்னோ? 7
  • PT 10.8.8
    1929 புக்கு ஆடு அரவம் * பிடித்து ஆட்டும் புனிதீர் *
    இக் காலங்கள் * யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் **
    தக்கார் பலர் * தேவிமார் சால உடையீர் *
    எக்கே இது என்? * இது என்? இது என்னோ? 8
  • PT 10.8.9
    1930 ஆடி அசைந்து * ஆய் மடவாரொடு நீ போய் *
    கூடிக் குரவை பிணை * கோமளப் பிள்ளாய் **
    தேடித் திரு மா மகள் * மண்மகள் நிற்ப *
    ஏடி இது என்? * இது என்? இது என்னோ? 9
  • PT 10.8.10
    1931 ## அல்லிக் கமலக் கண்ணனை * அங்கு ஓர் ஆய்ச்சி *
    எல்லிப் பொழுது ஊடிய * ஊடல் திறத்தை **
    கல்லின் மலி தோள் * கலியன் சொன்ன மாலை *
    சொல்லித் துதிப்பார் அவர் * துக்கம் இலரே 10