PT 10.7.3

வெண்ணெயை விழுங்கி உறங்குகின்றானே!

1910 தெள்ளியவாய்ச்சிறியான்நங்கைகாள்!
உறிமேலைத்தடாநிறைந்த *
வெள்ளிமலையிருந்தாலொத்தவெண்ணெயை
வாரிவிழுங்கியிட்டு *
கள்வனுறங்குகின்றான்வந்துகாண்மின்கள்
கையெல்லாம்நெய், வயிறு
பிள்ளைபரமன்று * இவ்வேழுலகும்கொள்ளும்
பேதையேன்என்செய்கேனோ?
1910 tĕl̤l̤iya vāyc ciṟiyāṉ naṅkaikāl̤ *
uṟimelait taṭā niṟainta *
vĕl̤l̤i malai iruntāl ŏtta vĕṇṇĕyai *
vāri vizhuṅkiyiṭṭu **
kal̤vaṉ uṟaṅkukiṉṟāṉ vantu kāṇmiṉkal̤ *
kai ĕllām nĕy * vayiṟu
pil̤l̤ai param aṉṟu iv ezh ulakum kŏl̤l̤um *
petaiyeṉ ĕṉ cĕykeṉo?-3

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1910. A cowherd woman says, “O lovely Yashodā, he is a little boy and he smiles sweetly. I keep a pot full of butter in the uri, but he has grabbed and swallowed it all, as much as a silver hill. He is a thief. Come and see him as he sleeps. All his hands are smeared with butter. His stomach is big enough to hold all the seven worlds, so it isn’t hard for him to keep all that butter in his stomach. I am ignorant! What can I do? What can I do?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நங்கைகாள்! பெண்களே!; தெள்ளிய வாய் தெளிந்த வாயையுடைய; சிறியான் கண்ணன்; உறிமேலை உறியின் மேலை; தடா நிறைந்த குடம் நிறைய; வெள்ளி மலை ஒத்த வெள்ளி மலையை போல்; வெண்ணெயை இருந்தால் இருந்த வெண்ணையை; வாரி விழுங்கியிட்டு வாரி விழுங்கிவிட்டு; கள்வன் கள்ளத் தூக்கம்; உறங்குகின்றான் தூங்குகின்றான்; வந்து காண்மின்கள் வந்து பாருங்கள்; கை எல்லாம் நெய் கை முழுவதும் நெய்மயம்; வயிறு வயிறு; பிள்ளை பிள்ளைப் பருவத்துக்கு; பரம் அன்று ஏற்றதாக இல்லை; இவ் ஏழ் உலகும் ஏழு உலகங்களும்; கொள்ளும் இவன் வயிற்றில் கொள்ளுமோ?; பேதையேன் அறிவற்றவளான நான்; என் செய்கேனோ? என்ன செய்வேன்?