PT 10.7.1

ஆய்ச்சியர்களே! நான் என் செய்வேன்?

1908 மானமுடைத்துஉங்களாயர்குலம்
அதனால்பிறர்மக்கள்தம்மை *
ஊனமுடையனசெய்யப்பெறாயென்று
இரப்பன்உரப்பகில்லேன் *
நானுமுரைத்திலேன்நந்தன்பணித்திலன்
நங்கைகாள்! நானென்செய்கேன்? *
தானும்ஓர்கன்னியும்கீழையகத்துத்
தயிர்கடைகின்றான்போலும். (2)
1908 māṉam uṭaittu uṅkal̤ āyar kulam
ataṉāl * piṟar makkal̤-tammai *
ūṉam uṭaiyaṉa cĕyyap pĕṟāy ĕṉṟu *
irappaṉ urappakilleṉ **
nāṉum uraittileṉ nantaṉ paṇittilaṉ *
naṅkaikāl̤ nāṉ ĕṉ cĕykeṉ? *
tāṉum or kaṉṉiyum kīzhai akattut *
tayir kaṭaikiṉṟāṉ polum-1

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1908. Yashodā says, “Our cowherd clan is respected by all. If my son does something wrong, I can only upbraid him gently, saying, ‘You shouldn’t hurt other children. ’ I can’t scold him. His father Nandan won’t say anything either. O young friend, what can I do? It seems he goes to the corner house on this street to churn yogurt with a young girl. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உங்கள் ஆயர் குலம் உங்கள் ஆயர் குலம்; மானம் மானத்தோடும் பெருமையோடும்; உடைத்து அதனால் வாழ்ந்தமையால்; பிறர் அயலாருடைய; மக்கள் தம்மை பெண்பிள்ளைகளிடத்திலே; ஊனம் உடையன இழிவான செயல்களை; செய்யப் பெறாய் என்று செய்யாதே என்று; இரப்பன் வேண்டிக் கொள்வேனேயன்றி; உரப்பகில்லேன் வீண் பேச்சு பேசுபவளில்லை; நானும் நான் கடிந்து; உரைத்திலேன் பேசுபவளும் இல்லை; நந்தன் நந்தகோபரும்; பணித்திலன் ஒன்று சொல்லமாட்டார்; நங்கைகாள்! மரியாதைக்குரிய பெண்களே!; நான் என் செய்கேன்? நான் என்ன செய்வேன்?; தானும் கண்ணன் தானும்; ஓர் கன்னியும் ஒரு கன்னிப் பெண்ணும்; கீழை அகத்து கீழை வீட்டில்; தயிர் தயிர்; கடைகின்றான் போலும் கடைகிறான் போலும்