PT 10.7.9

சகடம் உதைத்தவனை அதட்ட அஞ்சுவேன்

1916 ஈடும்வலியுமுடைய
இந்நம்பிபிறந்தஎழுதிங்களில் *
ஏடலர்கண்ணியினானைவளர்த்தி
யமுனைநீராடப்போனேன் *
சேடன்திருமறுமார்வன்கிடந்து
திருவடியால் * மலைபோல்
ஓடும்சகடத்தைச்சாடியபின்னை
உரப்புவது அஞ்சுவேனே.
1916 īṭum valiyum uṭaiya * in nampi
piṟanta ĕzhu tiṅkal̤il *
eṭu alar kaṇṇiyiṉāṉai val̤artti *
yamuṉai nīrāṭap poṉeṉ **
ceṭaṉ tiru maṟu mārvaṉ * kiṭantu
tiruvaṭiyāl * malaipol
oṭum cakaṭattaic cāṭiya piṉṉai *
urappuvatu añcuvaṉe-9

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1916. Yashodā says, “Seven months after my dear son was born, when I had put my strong, matchless child to sleep on a bed soft as a flower and gone to bathe in the Yamuna river, he killed Sakatāsuran with his divine feet when he came as a cart that was large as a mountain. He rests on Adisesha on the ocean and Lakshmi stays on his faultless chest. I am afraid of scolding him after he did such a heroic deed. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈடும் வலியும் தேஹபலமும் மிடுக்கும்; உடைய இந் நம்பி உடைய இப்பிள்ளை; பிறந்த ஏழு பிறந்த ஏழாவது; திங்களில் மாதத்தில்; ஏடு அலர் இதழ் விரியாத பூமாலை அணிந்த; கண்ணியினானை கண்ணனை; வளர்த்தி குளிப்பாட்டி தூங்க வைத்துவிட்டு; யமுனை யமுனையில்; நீராடப் போனேன் நீராடப் போனேன்; சேடன் மிக இளம்பிள்ளையான கண்ணன்; திரு திருமகளையும்; மறு ஸ்ரீவத்ஸம் என்னும் ஒரு மருவையும்; மார்வன் கிடந்து மார்பிலுடையவனான இவன்; திருவடியால் திருவடியால்; மலை போல மலை போல; ஓடும் சகடத்தை ஓடி வந்த அசுரனான வண்டியை; சாடிய பின்னை முறித்து தூளாக்கிய பின்; உரப்புவது அஞ்சுவனே கடிந்து பேச அஞ்சுகிறேன்