PT 10.7.12

நாகத்தோடு பிணங்கினாயே! அச்சமே இல்லையா?

1919 அச்சம்தினைத்தனையில்லையிப்பிள்ளைக்கு
ஆண்மையும்சேவகமும் *
உச்சியில்முத்திவளர்த்தெடுத்தேனுக்கு
உரைத்திலன்தானின்றுபோய் *
பச்சிலைப்பூங்கடம்பேறி
விசைகொண்டுபாய்ந்துபுக்கு * ஆயிரவாய்
நச்சழற்பொய்கையில்நாகத்தினோடு
பிணங்கிநீவந்தாய்போலும்.
1919 accam tiṉaittaṉai illai ip pil̤l̤aikku *
āṇmaiyum cevakamum *
ucciyil mutti val̤arttu ĕṭutteṉukku *
uraittilaṉ tāṉ iṉṟu poy **
paccilaip pūṅ kaṭampu eṟi * vicaikŏṇṭu
pāyntu pukku * āyira vāy
naccu azhal pŏykaiyil nākattiṉoṭu *
piṇaṅki nī vantāy polum-12

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1919. Yashodā says, “This child has no fear, even to the extent of a tiny millet seed. I raised him with manliness and braveness. I kissed him and gave him lots of love. I have never scolded him, but now he never tells me anything he does. He climbed on the blooming green Kadamba tree, jumped into the pond and fought and killed Kālingan, the snake that has a thousand poisonous tongues. Now he has come back. How can I scold him?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இப் பிள்ளைக்கு இந்த பிள்ளைக்கு; தினைத்தனை கொஞ்சம் கூட; அச்சம் இல்லை பயமில்லை; ஆண்மையும் ஆண்மையும்; சேவகமும் அதிகாரமும் வீர்யமும் தான் இருக்கிறது; உச்சியில் முத்தி உச்சிமோந்து; வளர்த்து எடுத்தேனுக்கு வளர்த்த என்னிடம்; தான் தான் செய்யப் போகும் செயல்களை; உரைத்திலன் எதையும் கூறுவதில்லை; இன்று போய் இன்று போய்; பச்சிலைப் பசுமையான இலைகளை உடைய; பூங் கடம்பு ஏறி பூத்திருக்கும் கடம்ப மரம் ஏறி; விசைகொண்டு வேகமாக; பொய்கையில் பொய்கையில்; பாய்ந்து புக்கு பாய்ந்து குதித்து; ஆயிர வாய் ஆயிரம் வாயாலும்; நச்சு அழல் விஷம் கக்குகின்ற; நாகத்தினோடு நாகத்தினோடு; பிணங்கி போர் செய்து; நீ வந்தாய் போலும்! நீ வந்தாயோ!