PT 10.7.4

ஆய்ச்சியர்களால் வாழவே முடியாதோ?

1911 மைந்நம்புவேல்கண்நல்லாள்
முன்னம்பெற்றவளைவண்ணநன்மாமேனி *
தன்னம்பிநம்பியும்இங்குவளர்ந்தது
அவன்இவைசெய்தறியான் *
பொய்ந்நம்பிபுள்ளுவன்கள்வம்பொதியறை
போகின்றவாதவழ்ந்திட்டு *
இந்நம்பிநம்பியா ஆய்ச்சியர்க்குய்வில்லை
என்செய்கேன்? என்செய்கேனோ?
1911 mainnampu vel kaṇ nallāl̤ * muṉṉam pĕṟṟa
val̤ai vaṇṇa nal mā meṉi *
taṉ nampi nampiyum iṅku val̤arntatu *
avaṉ ivai cĕytaṟiyāṉ **
pŏyn nampi pul̤l̤uvaṉ kal̤vam * pŏti aṟai
pokiṉṟavā tavazhntiṭṭu *
in nampi nampiyā āycciyarkku uyvu illai *
ĕṉ cĕykeṉ? ĕṉ cĕykeṉo?-4

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1911. A cowherd woman says, “BalaRāman was born to a mother with spear-like eyes that were darkened with kohl. He and his brother Kannan were raised in the cowherd village together, but he doesn’t do naughty things like Kannan. Kannan tells lies, steals things and crawls and acts as if he knew nothing about it. Is he really a sweet child? We cowherd women cannot escape his tricks. What can I do? What can I do? ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மைந்நம்பு மையணிந்த; வேல் வேல் போன்ற; கண் கண்களையுடைய; நல்லாள் யசோதை; பெற்ற பெற்ற; வளை சங்குபோல்; வண்ண வெண்ணிறமுள்ள; நல் மா மிகச்சிறந்த; மேனி சரீரத்தையுடைய; தன் நம்பி நம்பியும் பலராமனும்; முன்னம் இங்கு முன்பு இங்கு; வளர்ந்தது வளர்ந்தவன் தான்; அவன் அந்த பலராமன்; இவை செய்து இப்படித் தீம்புகளை; அறியான் செய்ததில்லை; பொய்ந் நம்பி பொய்யே வடிவான; புள்ளுவன் வஞ்சகனாய் கள்ளத் தனத்திற்கு; கள்வம் கொள்கலனாயிருப்பவனான கண்ணன்; பொதி அறை அடைந்த அறையில்; தவழ்ந்திட்டு தான் ஒன்றும் அறியாதவன் போல்; போகின்றவா தவழ்ந்து போகின்றான்; இந் நம்பி இப்படிப்பட்ட கள்ளத்தனம்; நம்பியா உள்ள கண்ணனோடு; ஆய்ச்சியர்க்கு ஆய்ச்சியர்களுக்கு; உய்வு இல்லை உய்ய வழி இல்லை; என் செய்கேன்? என் செய்கேன்?; என் செய்கேனோ? என் செய்கேனோ?