PT 10.7.14

இவற்றைப் பாடினோர்க்குத் துன்பமே இல்லை

1921 அன்னநடைமடவாய்ச்சிவயிறடித்து அஞ்ச
அருவரைபோல *
மன்னுகருங்களிற்றாருயிர்வவ்விய
மைந்தனை, மாகடல்சூழு *
கன்னிநன்மாமதிள்மங்கையர்காவலன்
காமருசீர்க்கலிகன்றி *
இன்னிசைமாலைகளீரேழும்வல்லவர்க்கு
ஏதும்இடரில்லையே. (2)
1921 ## aṉṉa naṭai maṭa āycci vayiṟu aṭittu
añca * aru varaipol *
maṉṉu karuṅ kal̤iṟṟu ār uyir vavviya *
maintaṉai mā kaṭal cūzh **
kaṉṉi nal mā matil̤ maṅkaiyar kāvalaṉ *
kāmaru cīrk kalikaṉṟi *
iṉ icai mālaikal̤ īr ezhum vallavarkku *
etum iṭar illaiye-14

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1921. Kaliyan the chief of rich lovely Thirumangai surrounded with strong walls and the wide ocean composed fourteen sweet musical pāsurams on the lord who killed the angry elephant Kuvalayābeedam as large as a mountain. The poet describes how the cowherdess Yasodha, her walk as gentle as a swan’s, worries about him. If devotees learn and recite these pāsurams they will have no troubles in life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்ன நடை அன்னம் போன்ற நடையையும்; மட ஆய்ச்சி மடமைக் குணமுமுடைய யசோதை; வயிறு அடித்து வயிற்றில் அடித்துக்கொண்டு; அஞ்ச பயப்படும்படியாக; அரு வரைபோல மன்னு பெரிய மலைபோலிருந்த; கருங் களிற்று குவலயாபீட கரிய யானையின்; ஆருயிர் வவ்விய அருமையான உயிரை அபகரித்த; மைந்தனை கண்ணனைக் குறித்து; மா கடல் சூழ் பெரிய கடலால் சூழ்ந்த; கன்னி நல் பெரிய; மா மதிள் மதிள்களை உடைய; மங்கையர் காவலன் திருமங்கை மன்னன்; காமரு சீர்க் கல்யாண குணங்களையுடைய; கலிகன்றி திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; இன்னிசை மாலைகள் இன்னிசை மாலைகளான; ஈரேழும் இப்பதினான்கு பாசுரங்களையும்; வல்லவர்க்கு ஓத வல்லவர்க்கு; ஏதும் இடர் இல்லையே! துன்பமேதும் இல்லை