PT 10.7.5

கண்ணன் தீம்புகள் வளர்கின்றனவே!

1912 தந்தைபுகுந்திலன்நான்இங்கிருந்திலேன்
தோழிமார் ஆருமில்லை *
சந்தமலர்க்குழலாள்
தனியேவிளையாடுமிடம்குறுகி *
பந்துபறித்துத்துகில்பற்றிக்கீறிப்
படிறன்படிறுசெய்யும் *
நந்தன்மதலைக்கிங்கென்கடவோம்? நங்காய்!
என்செய்கேன்? என்செய்கேனோ?
1912 tantai pukuntilaṉ nāṉ iṅku iruntileṉ *
tozhimār ārum illai *
canta malark kuzhalāl̤ * taṉiye
vil̤aiyāṭum iṭam kuṟuki **
pantu paṟittut tukil paṟṟik kīṟip *
paṭiṟaṉ paṭiṟucĕyyum *
nantaṉ matalaikku iṅku ĕṉ kaṭavom? naṅkāy *
ĕṉ cĕykeṉ? ĕṉ cĕykeṉo?-5

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1912. A cowherd woman says, “One day before his father had returned, when I wasn’t at home and my friends weren’t around, he went near where my girl was playing, her fragrant hair decorated with beautiful flowers, and grabbed the ball she was playing with and took her clothes and did naughty things. What wrong have we done to Nandan’s son? O, friend, what can I do? What can I do?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நங்காய்! யசோதையே!; தந்தை இப்பெண்களின் தந்தை; புகுந்திலன் வீடு வந்து சேரவில்லை; நான் இங்கு நானும்; இருந்திலேன் வீட்டிலில்லை; தோழிமார் தோழியரும்; ஆரும் இல்லை ஒருவருமில்லை; சந்த மலர் மணம் மிக்க பூஅணிந்த; குழலாள் கூந்தலையுடைய என்மகள்; தனியே விளையாடும் தனியே; விளையாடும் விளையாடும்; இடம் குறுகி இடத்தில் சென்று; பந்து அவள் கையிலிருந்த பந்தை; பறித்து பிடுங்கி; துகில் பற்றிக் கீறி ஆடைகளையும் கிழித்து; படிறு செய்யும் தீம்புகளைச் செய்யும்; படிறன் தூர்த்தனாகிய; நந்தன் மதலைக்கு கண்ணன் விஷயத்திலே; இங்கு நாங்கள் செய்வதறியாமல்; என் கடவோம்? திகைக்கிறோம்; என் செய்கேன்? என் செய்கேனோ?