PT 10.7.11

கண்ணபிரானே! இப்படியும் தீமை செய்யலாமோ?

1918 அங்ஙனம்தீமைகள் செய்வார்களோ?
நம்பீ! ஆயர்மடமக்களை *
பங்கயநீர்குடைந்தாடுகின்றார்கள்
பின்னேசென்றொளித்திருந்து *
அங்குஅவர்பூந்துகில்வாரிக்கொண்டிட்டு
அரவேரிடையார்இரப்ப *
மங்கைநல்லீர்! வந்துகொண்மினென்று
மரமேறியிருந்தாய்போலும்.
1918 aṅṅaṉam tīmaikal̤ cĕyvarkal̤o-
nampī * āyar maṭa makkal̤ai? *
paṅkaya nīr kuṭaintu āṭukiṉṟārkal̤ *
piṉṉe cĕṉṟu ŏl̤ittiruntu **
aṅku avar pūn tukil vārikkŏṇṭiṭṭu *
aravu er iṭaiyār irappa *
maṅkai nallīr vantu kŏṇmiṉ ĕṉṟu *
maram eṟi iruntāy polum-11

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1918. Yashodā says to Kannan, “ O lovely one! How could you do these naughty things? O Nambi, you hid and went behind the beautiful cowherd girls when they bathed in the pond where lotuses bloom and stole their fine clothes and climbed up a tree. When the lovely-waisted girls begged you for their clothes, you said, ‘Come, beautiful ones, come and take them from me, ’ and you stayed in the tree. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம்பீ! கண்ணா!; ஆயர் இடையர்களிடம் பயபக்தியுடன்; மட மக்களை இருக்கும் பெண்களிடம்; அங்ஙனம் தீமைகள் அப்படி தீமைகள்; செய்வர்களோ செய்யலாமோ?; பங்கய நீர் தாமரைப்பொய்கையில்; குடைந்து நீரில் மூழ்கி நீராட; ஆடுகின்றார்கள் போனவர்களின்; பின்னே சென்று பின்னால் சென்று; ஒளித்திருந்து ஒளிந்திருந்து; அங்கு அவர் அங்கு அவர்களுடைய; பூந்துகில் அழ்கிய சேலைகளை; வாரிக்கொண்டிட்டு வாரிக்கொண்டு போய்; அரவு ஏர் அரவு போன்ற நுண்ணிய; இடையார் இடையுடைய பெண்கள்; இரப்ப ஆடைகளை யாசிக்க; மங்கை நல்லீர்! அழகிய பெண்காள்!; வந்து கொண்மின் வந்து பெற்றுகொள்ளுங்கள்; என்று மரம் ஏறி என்று மரம் ஏறி; இருந்தாய் போலும் இருந்தாயே!