PT 10.7.2

வெண்ணெயும் பாலும் கண்ணன் உண்டுவிட்டானே!

1909 காலையெழுந்துகடைந்தஇம்மோர்விற்கப் போகின்றேன்
கண்டேபோனேன் *
மாலைநறுங்குஞ்சிநந்தன்மகனல்லால்
மற்றுவந்தாரும்இல்லை *
மேலையகத்துநங்காய்! வந்துகாண்மின்கள்
வெண்ணெயேயன்று * இருந்த
பாலும்பதின்குடம்கண்டிலேன்
பாவியேன்என்செய்கேன்? என்செய்கேனோ?
1909 ## kālai ĕzhuntu kaṭainta im mor viṟkap
pokiṉṟeṉ * kaṇṭe poṉeṉ *
mālai naṟuṅ kuñci nantaṉ makaṉ allāl *
maṟṟu vantārum illai **
melai akattu naṅkāy vantu kāṇmiṉkal̤ *
vĕṇṇĕye aṉṟu irunta *
pālum patiṉ kuṭam kaṇṭileṉ * pāviyeṉ
ĕṉ cĕykeṉ? ĕṉ cĕykeṉo?-2

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1909. A cowherdess says, “O dear Yashodā! I got up early and went to sell the churned buttermilk, looking for people to buy it, but I didn’t see anyone except the son of Nandan with hair that was decorated with fragrant flowers. Come and look, my beautiful friend from the last house on the street. I don’t see the butter and the ten pots of milk that I had, and I’m worried. What should I do? What should I do?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காலை எழுந்து காலை எழுந்து; கடைந்த கடைந்த; இம் மோர் விற்க இந்த மோரை விற்க; போகின்றேன் போகின்றேன்; கண்டே கண்ணன் எதிரே வருவதைப் பார்த்து; போனேன் பயந்தே போனேன்; மாலை பூமாலையோடும்; நறுங் குஞ்சி மணம் மிக்க முடியோடும்; நந்தன் மகன் கண்ணனை; அல்லால் தவிர என் வீட்டுக்கு; மற்று மற்றொருவரும்; வந்தாரும் இல்லை வரவில்லை; மேலை அகத்து மேலை வீட்டு; நங்காய்! யசோதையே; வந்து இங்கே வந்து கண்ணன் செய்வதை; காண்மின்கள் பாருங்கள்; வெண்ணெயே அன்று வெண்ணையைத் தவிர; பதின் குடம் பத்துக் குடங்களில்; இருந்த பாலும் வைத்திருந்த பாலும்; கண்டிலேன் காணவில்லை; பாவியேன் பாவியான நான்; என் செய்கேன்? என் செய்கேன்?; என் செய்கேனோ? என் செய்கேனோ?