Chapter 7

Yashoda wants to adorn Kannnan's hair with flower - (ஆனிரை மேய்க்க)

பூச் சூட்டல்
Yashoda wants to adorn Kannnan's hair with flower - (ஆனிரை மேய்க்க)
There are eight types of flowers mentioned to be offered to the Lord. Yashoda calls upon Krishna to adorn these flowers and bless everyone! If flowers are offered with devotion, everyone will live with fragrance (fame).
பகவானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய எட்டு வகையான மலர்கள் கூறப்படுகின்றன. இம்மலர்களை அணிந்து அருள வேண்டும் என்று அழைகிறாள் யசோதை! பக்தியோடு மலர் ஸமர்ப்பித்தால், எல்லோரும் மணம் (புகழ்) பெற்று வாழ்வர்.
Verses: 182 to 191
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will become beloved devotees of the Lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 2.7.1

182 ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய் *
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட *
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப *
தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2)
182 ## ஆனிரை மேய்க்க நீ போதி * அருமருந்து ஆவது அறியாய் *
கானகம் எல்லாம் திரிந்து * உன் கரிய திருமேனி வாட **
பானையில் பாலைப் பருகிப் * பற்றாதார் எல்லாம் சிரிப்ப *
தேனில் இனிய பிரானே * செண்பகப் பூச் சூட்ட வாராய் (1)
182 ## āṉirai meykka nī poti * arumaruntu āvatu aṟiyāy *
kāṉakam ĕllām tirintu * uṉ kariya tirumeṉi vāṭa **
pāṉaiyil pālaip parukip * paṟṟātār ĕllām cirippa *
teṉil iṉiya pirāṉe * cĕṇpakap pūc cūṭṭa vārāy (1)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

182. You go to graze the cattle. Don't you know that you are the finest remedy for all problems? You wander around the forest and your divine dark body becomes dull. You steal milk from others' pots and people who don’t like you see it and laugh at you. O dear child, you are sweeter than honey. Come, I will decorate your hair with champak (shenbaga) flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேனில் இனிய பிரானே! தேனை விட இனிய பிரானே!; பானையில் பானையில் உள்ள பச்சைப்; பாலைப் பருகி பாலைப் பருகி; உன் கரிய உன்னுடய கரிய; திருமேனி வாட மேனி வாடும்படி; கானகம் எல்லாம் திரிந்து காடெங்கும் அலைந்து; ஆநிரை மேய்க்க பசுக்களை மேய்க்க; போதி நீ போகிறாய்; பற்றாதார் எல்லாம் உன்னை விரும்பாதவர்கள் எல்லாரும்; சிரிப்ப உன்னைப் பரிகசிக்கிறார்கள்; அருமருந்து ஆவது நீ அருமருந்தா இருப்பதை; அறியாய் யாரும் அறிவதில்லை அவ்வாறு போகாமல்; செண்பகப் பூ செண்பகப் பூ; சூட்ட வாராய் சூட்டுகிறேன் வாராய்
teṉil iṉiya pirāṉe! Oh Lord, you are sweeter than honey!; pālaip paruki You drink the milk; pāṉaiyil kept in the pots; kāṉakam ĕllām tirintu You wander around the forest; uṉ kariya and Your divine dark body; tirumeṉi vāṭa becomes dull; poti You go; ānirai meykka and graze the cows; paṟṟātār ĕllām those who dont like You; cirippa make fun of You; aṟiyāy people do not realize that; arumaruntu āvatu You are the only medicine for us; cūṭṭa vārāy please come I will decorate your hair with; cĕṇpakap pū with champak (shenbaga) flowers

PAT 2.7.2

183 கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும் கண்கள் *
உருவுடையாய்! உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்! *
திருவுடையாள்மணவாளா! திருவரங்கத்தேகிடந்தாய்! *
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்.
183 கரு உடை மேகங்கள் கண்டால் * உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் *
உரு உடையாய் உலகு ஏழும் * உண்டாக வந்து பிறந்தாய் **
திரு உடையாள் மணவாளா * திருவரங்கத்தே கிடந்தாய் *
மருவி மணம் கமழ்கின்ற * மல்லிகைப் பூச் சூட்ட வாராய் (2)
183 karu uṭai mekaṅkal̤ kaṇṭāl * uṉṉaik kaṇṭāl ŏkkum kaṇkal̤ *
uru uṭaiyāy ulaku ezhum * uṇṭāka vantu piṟantāy **
tiru uṭaiyāl̤ maṇavāl̤ā * tiruvaraṅkatte kiṭantāy *
maruvi maṇam kamazhkiṉṟa * mallikaip pūc cūṭṭa vārāy (2)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

183. Seeing the dark clouds, is like seeing your beautiful body. You have beautiful eyes. You were born to create the seven worlds. You are the beloved of Lakshmi, the goddess of wealth and you rest on the Kaveri river in Srirangam. Come to me and I will decorate your hair with jasmine flowers that spread their fragrance everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரு உடை மேகங்கள் நீர்கொண்ட மேகங்களை; கண்டால் கண்டால்; உன்னை உன்னை; கண்டால் ஒக்கும் பார்ப்பது போல்; கண்கள் உரு குளிர்ச்சி தரும் கண்ணழகு; உடையாய்! கொண்டவனே!; உலகு ஏழும் ஏழுலகமும்; உண்டாக வந்து ஸத்தாகும்படி ஸ்ருஷ்டித்து வந்து; பிறந்தாய்! பிறந்தாய்!; திரு உடையாள் திருவுடைய லக்ஷ்மியின்; மணவாளா! மணவாளா!; திருவரங்கத்தே திருவரங்கத்திலே; கிடந்தாய்! சயனித்திருப்பவனே!; மருவி மணம் கமழ்கின்ற நீங்காத மணம் கமழ்கின்ற; மல்லிகை மல்லிகை; பூச்சூட்ட பூவை நான் சூட்ட; வாராய் வருவாய்
kaṇṭāl when I see; karu uṭai mekaṅkal̤ the dark clouds; kaṇṭāl ŏkkum its like seeing; uṉṉai You; uṭaiyāy! You have; kaṇkal̤ uru beautiful divine eyes; piṟantāy! You were born; uṇṭāka vantu to create; ulaku eḻum the seven worlds; maṇavāl̤ā! You are the beloved of; tiru uṭaiyāl̤ Lakshmi, the goddess of wealth; kiṭantāy! You rest in; tiruvaraṅkatte Sri Rangam; vārāy please come; pūccūṭṭa so that I can decorate your hair with; mallikai jasmine floweres; maruvi maṇam kamaḻkiṉṟa that emanates everlasting fragrance

PAT 2.7.3

184 மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு *
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி *
நிச்சலும்தீமைகள்செய்வாய்! நீள்திருவேங்கடத்துஎந்தாய்! *
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய்.
184 மச்சொடு மாளிகை ஏறி * மாதர்கள்தம் இடம் புக்கு *
கச்சொடு பட்டைக் கிழித்து * காம்பு துகில் அவை கீறி **
நிச்சலும் தீமைகள் செய்வாய் * நீள் திருவேங்கடத்து எந்தாய் *
பச்சைத் தமனகத்தோடு * பாதிரிப் பூச் சூட்ட வாராய் (3)
184 maccŏṭu māl̤ikai eṟi * mātarkal̤tam iṭam pukku *
kaccŏṭu paṭṭaik kizhittu * kāmpu tukil avai kīṟi **
niccalum tīmaikal̤ cĕyvāy * nīl̤ tiruveṅkaṭattu ĕntāy *
paccait tamaṉakattoṭu * pātirip pūc cūṭṭa vārāy (3)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

184. O You climb up to the patios of the palaces, enter the girls' chambers, tear their breast bands and silk blouses. Is that all? You grab the border of their saris and tear them, giving them trouble every day. You stay in the lofty Thiruvenkatam hills. Come to me and I will decorate your hair with Trumpet (yellow snake) flowers and Artemisia pallen springs.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மச்சொடு மாளிகைகளின்; மாளிகை ஏறி மாடிகளில் ஏறி; மாதர்கள் தம் தாய்மார்கள் இருக்கிற; இடம் புக்கு இடத்திற்குப் போய்; கச்சொடு பட்டை அவர்களின் பட்டாடைகளைக்; கிழித்து கிழித்து; காம்பு கரையுடன் கூடிய; துகில் அவை கீறி சேலைகளைப் பிய்த்து; நிச்சலும் நாள்தோறும்; தீமைகள் செய்வாய்! தீம்புகள் செய்பவனே!; நீள் திருவேங்கடத்து உயர்ந்த வேங்கடமலையில்; அப்பனே! இருக்கும் பெருமானே!; பச்சைத் தமனகத்தோடு மருக்கொழுந்து தவனத்துடன்; பாதிரிப்பூ பாதிரிப் பூவை; சூட்ட வாராய் சூட்டிக் கொள்ள வருவாய்!
iṭam pukku You climb up; māl̤ikai eṟi to the patios; maccŏṭu of the palaces; mātarkal̤ tam where women reside; kiḻittu and tore; kaccŏṭu paṭṭai their clothes; tukil avai kīṟi rip up their sarees; kāmpu and blouses; tīmaikal̤ cĕyvāy! You touble them; niccalum everyday; appaṉe! You reside in; nīl̤ tiruveṅkaṭattu the lofty Thiruvenkatam hills; cūṭṭa vārāy come and I will decorate You with; paccait tamaṉakattoṭu artemisia pallens and; pātirippū trumpet (yellow snake) flowers

PAT 2.7.4

185 தெருவின்கண்நின்று இளவாய்ச்சிமார்களைத் தீமைசெய்யாதே *
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற *
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே *
உருவமழகியநம்பீ! உகந்திவைசூட்டநீவாராய்.
185 தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத் * தீமை செய்யாதே *
மருவும் தமனகமும் சீர் * மாலை மணம் கமழ்கின்ற **
புருவம் கருங்குழல் நெற்றி * பொலிந்த முகில் கன்று போலே *
உருவம் அழகிய நம்பீ * உகந்து இவை சூட்ட நீ வாராய் (4)
185 tĕruviṉkaṇ niṉṟu il̤a āycci mārkal̤ait * tīmai cĕyyāte *
maruvum tamaṉakamum cīr * mālai maṇam kamazhkiṉṟa **
puruvam karuṅkuzhal nĕṟṟi * pŏlinta mukil kaṉṟu pole *
uruvam azhakiya nampī * ukantu ivai cūṭṭa nī vārāy (4)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

185. Don’t stand on the street and bother the young cowherd girls. O dear child, you have the color of the dark cloud. You are like a small calf with beautiful eyebrows, glistening dark hair and a shining forehead. The fragrance of your thulasi garland spreads everywhere. Come happily and I will I decorate your hair with the garland of maruvu and Artemisia pallen springs.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெருவின் கண் நின்று தெருவிலே நின்றுகொண்டு; இள ஆய்ச்சிமார்களை ஆய்ச்சி சிறுமியரிடம்; தீமை செய்யாதே தீம்பு செய்யாதே; மருவும் தமனகமும் மருக்கொழுந்து தவனத்துடன்; சீர் மாலை அழகிய மாலையின்; மணம் கமழ்கின்ற மணம் கமழும்; புருவம் புருவங்களையும்; கருங்குழல் நெற்றி கருநிற கூந்தலையும்; பொலிந்த பொலிவான; முகிற் கன்று போலே மேகக் கன்று போன்ற; உருவம் அழகிய நம்பீ! உருவ அழகனே!; உகந்து இவை உவப்புடன் இவற்றைச்; சூட்ட நீ வாராய் சூட்டிக் கொள்ள நீ வாராய்
tīmai cĕyyāte dont bother; il̤a āyccimārkal̤ai the young cowherd girls; tĕruviṉ kaṇ niṉṟu on the street; puruvam You have eyebrows with; maṇam kamaḻkiṉṟa the fragrance of; cīr mālai beautiful garland; maruvum tamaṉakamum with maruvu and Artemisia pallen springs; mukiṟ kaṉṟu pole You are like a small calf; pŏlinta shining; karuṅkuḻal nĕṟṟi with dark hair; uruvam aḻakiya nampī! oh, the beauty of Your form!; ukantu ivai come happily; cūṭṭa nī vārāy I will decorate You with flowers

PAT 2.7.5

186 புள்ளினைவாய்பிளந்திட்டாய்! பொருகரியின் கொம்பொசித்தாய்! *
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்! *
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன் *
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய்.
186 புள்ளினை வாய் பிளந்திட்டாய் * பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் *
கள்ள அரக்கியை மூக்கொடு * காவலனைத் தலை கொண்டாய் **
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க * அஞ்சாது அடியேன் அடித்தேன் *
தெள்ளிய நீரில் எழுந்த * செங்கழுநீர் சூட்ட வாராய் (5)
186 pul̤l̤iṉai vāy pil̤antiṭṭāy * pŏru kariyiṉ kŏmpu ŏcittāy *
kal̤l̤a arakkiyai mūkkŏṭu * kāvalaṉait talai kŏṇṭāy **
al̤l̤i nī vĕṇṇĕy vizhuṅka * añcātu aṭiyeṉ aṭitteṉ *
tĕl̤l̤iya nīril ĕzhunta * cĕṅkazhunīr cūṭṭa vārāy (5)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

186. You split open the beak of Bānasuran who came in the form of a heron, broke the tusk of the elephant, Kuvalayāpeedam, cut off the nose of the cunning Surpanakha, and cut down the heads of the king Rāvanan, you took gobs of butter and swallowed them. yet I, without fear beat you. Come and I will decorate your hair with a garland of red waterlily flowers that bloom in clear water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புள்ளினை பறவை உருவில் வந்த பகாசுரனின்; வாய் பிளந்திட்டாய்! வாயைக்கிழித்துப் போட்டவனே!; பொரு தாக்க வந்த; கரியின் குவலயாபீடமென்னும் யானையின்; கொம்பு ஒசித்தாய்! கொம்பைப் பறித்தவனே!; கள்ள வஞ்சனை நோக்கோடு வந்த; அரக்கியை சூர்ப்பணகையின்; மூக்கொடு மூக்கையும்; காவலனை அவளின் காவலன் ராவணனின்; தலை கொண்டாய்! தலயையும் பறித்தவனே!; அள்ளி நீ வெண்ணெய் நீ வெண்ணெயை அள்ளி; விழுங்க விழுங்கியபோது; அஞ்சாது அடியேன் சிறிதும் அஞ்சாமல்; அடித்தேன் அடித்தேன்; தெள்ளிய நீரில் எழுந்த தெளிவான நீரிலே மலர்ந்த; செங்கழுநீர் பூ செங்கழுநீர் பூ; அரக்கியை சூட்ட வாராய் சூட்டிக் கொள்ள வாராய்
vāy pil̤antiṭṭāy! You split open; pul̤l̤iṉai the beaks of Bānasuran who as heron; kŏmpu ŏcittāy! You broke the tusk; kariyiṉ of the elephant Kuvalayāpeedam; pŏru that came to attack You; talai kŏṇṭāy! You cut the; mūkkŏṭu the nose of; arakkiyai Surpanakha; kal̤l̤a who came with evil intentions; kāvalaṉai and the heads of her brother; al̤l̤i nī vĕṇṇĕy when You; viḻuṅka ate lot of butter; añcātu aṭiyeṉ without any fear; aṭitteṉ I beat You; arakkiyai cūṭṭa vārāy let me decorate You with; cĕṅkaḻunīr pū red waterlily flowers that; tĕl̤l̤iya nīril ĕḻunta bloom in clear water

PAT 2.7.6

187 எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்காண்நம்பி!
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்! *
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு *
பொருதுவருகின்றபொன்னே! புன்னைப்பூச்சூட்டவாராய்.
187 எருதுகளோடு பொருதி * ஏதும் உலோபாய் காண் நம்பீ *
கருதிய தீமைகள் செய்து * கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் **
தெருவின்கண் தீமைகள் செய்து * சிக்கென மல்லர்களோடு *
பொருது வருகின்ற பொன்னே * புன்னைப் பூச் சூட்ட நீ வாராய் (6)
187 ĕrutukal̤oṭu pŏruti * etum ulopāy kāṇ nampī *
karutiya tīmaikal̤ cĕytu * kañcaṉaik kālkŏṭu pāyntāy **
tĕruviṉkaṇ tīmaikal̤ cĕytu * cikkĕṉa mallarkal̤oṭu *
pŏrutu varukiṉṟa pŏṉṉe * puṉṉaip pūc cūṭṭa nī vārāy (6)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

187. O, best among men! You fought with bulls ( to marry Nappinnai) You knew the evil deeds of Kamsan and killed him with your ploys, and you fought with the wrestlers and defeated them. You teased the cowherd girls on the streets. You are precious as gold! Come and I will decorate your hair with oil-nut flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எருதுகளோடு ஏழு ரிஷபங்களுடன்; பொருதி மோதினவனும்; ஏதும் உலோபாய்! எவ்வித பற்றும் இலாதவனாக; காண் நம்பி இருந்தாய் நம்பிரானே!; கருதிய கம்சன் செய்ய; தீமைகள் நினைத்த தீமைகளை; செய்து அவனுக்கே செய்து; கஞ்சனைக் கால்கொடு அந்தக் கம்சனை காலால்; பாய்ந்தாய் தாக்கியவனே!; தெருவின் கண் வீதியிலே வந்த வஞ்சகர்களை; தீமைகள் செய்து அழித்து; மல்லர்களோடு சாணூரமுஷ்டிகரெனும் மல்லர்களோடு; சிக்கென நிரந்தரமாக; பொருது போரிட வருகின்ற; பொன்னே! என் தங்கமே!; புன்னைப் பூ புன்னை மலர்; சூட்ட வாராய் சூட்டிக் கொள்ள வருவாய்!
pŏruti You defeated; ĕrutukal̤oṭu the seven bulls; kāṇ, nampi my Lord, You; etum ulopāy! remained without any desire; cĕytu You defeated; karutiya Kamsan who wanted; tīmaikal̤ to do evil deeds to You; pāyntāy You hit; kañcaṉaik kālkŏṭu that Kamsan with Your legs; tīmaikal̤ cĕytu You also; tĕruviṉ kaṇ killed the wicked people who came on the streets; pŏṉṉe! You are precious as gold; pŏrutu who fought; cikkĕṉa and defeated; mallarkal̤oṭu the wrestlers; cūṭṭa vārāy come and I will decorate You with; puṉṉaip pū oil-nut flowers

PAT 2.7.7

188 குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே! *
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா! *
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்! *
குடந்தைக்கிடந்தஎம்கோவே! குருக்கத்திப்பூச்சூட்டவாராய்.
188 குடங்கள் எடுத்து ஏற விட்டுக் * கூத்தாட வல்ல எம் கோவே *
மடம் கொள் மதிமுகத்தாரை * மால்செய்ய வல்ல என் மைந்தா **
இடந்திட்டு இரணியன் நெஞ்சை * இரு பிளவு ஆக முன் கீண்டாய் *
குடந்தைக் கிடந்த எம் கோவே * குருக்கத்திப் பூச் சூட்ட வாராய் (7)
188 kuṭaṅkal̤ ĕṭuttu eṟa viṭṭuk * kūttāṭa valla ĕm kove *
maṭam kŏl̤ matimukattārai * mālcĕyya valla ĕṉ maintā **
iṭantiṭṭu iraṇiyaṉ nĕñcai * iru pil̤avu āka muṉ kīṇṭāy *
kuṭantaik kiṭanta ĕm kove * kurukkattip pūc cūṭṭa vārāy (7)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

188. O! our king! You throw pots into the sky and dance the kudakkuthu with them. O my son, you bewitch beautiful girls, with faces as lovely as the moon. You split open Hiranyan's chest into two pieces with your claws. O beloved lord of Kumbakonam(Kudandai), Come and I will decorate your hair with hiptage flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குடங்கள் எடுத்து பல குடங்களை எடுத்து; ஏறவிட்டு வானை நோக்கி எறிந்து; கூத்தாட வல்ல கூத்தாடும் திறமைசாலியான; எம் கோவே! எங்கள் மன்னா!; மடங்கொள் மென்மையான; மதி முகத்தாரை சந்திரவதன மாதரை; மால்செய்ய வல்ல மயக்கவல்ல; என் மைந்தா! எனது புத்திரனே!; இடந்திட்டு வலுவாக அழுத்தி; இரணியன் நெஞ்சை இரணியன் நெஞ்சை; இருபிளவாக இரண்டு பிளவாக; முன் கீண்டாய்! முன்பு கிழித்தாய்!; குடந்தைக் கிடந்த குடந்தையில் பள்ளி கொள்ளுகிற; எம் கோவே! என்னரசே!; குருக்கத்திப் பூ குருக்கத்திப் பூச்; சூட வாராய் சூட்டிட வருவாய்
eṟaviṭṭu into the sky, You threw; kuṭaṅkal̤ ĕṭuttu many pots; ĕm kove! Oh my King!; kūttāṭa valla You dance the kudakkuthu; mālcĕyya valla You bewitch; maṭaṅkŏl̤ gentle; mati mukattārai beautiful girls, with faces as lovely as the moon; ĕṉ maintā! my Son!; iṭantiṭṭu by pressing hard; muṉ kīṇṭāy! once You tore; irupil̤avāka and split into two; iraṇiyaṉ nĕñcai the chest of Hiranyan; ĕm kove! my King!; kuṭantaik kiṭanta You reside in Kumbakonam(Kudandai); cūṭa vārāy come and I will decorate You with; kurukkattip pū hiptage flowers

PAT 2.7.8

189 சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்! *
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்! *
ஆமாறறியும்பிரானே! அணியரங்கத்தேகிடந்தாய்! *
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய்! இருவாட்சிப்பூச்சூட்டவாராய்.
189 சீமாலிகன் அவனோடு * தோழமை கொள்ளவும் வல்லாய் *
சாமாறு அவனை நீ எண்ணிச் * சக்கரத்தால் தலை கொண்டாய் **
ஆமாறு அறியும் பிரானே * அணி அரங்கத்தே கிடந்தாய் *
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் * இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் (8)
189 cīmālikaṉ avaṉoṭu * tozhamai kŏl̤l̤avum vallāy *
cāmāṟu avaṉai nī ĕṇṇic * cakkarattāl talai kŏṇṭāy **
āmāṟu aṟiyum pirāṉe * aṇi araṅkatte kiṭantāy *
emāṟṟam ĕṉṉait tavirttāy * iruvāṭcip pūc cūṭṭa vārāy (8)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

189. You befriended the Asura Thirumālihan and cut off his head with your discus (chakra) O lord, you are omniscient and you rest on the Kaveri river in beautiful Srirangam. Don’t cheat me. Come and I will decorate your hair with Arabian jasmine flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீமாலிகன் அவனோடு சீமாலிகன் என்ற அசுரனோடு; தோழமை நட்பாகவும்; கொள்ளவும் வல்லாய்! இருக்கவும் வல்லவனே!; சாமாறு அவனை அவன் மடிந்திடுமாறு; நீ எண்ணி நீ கருதி; சக்கரத்தால் சக்கரத்தால் அவன்; தலை கொண்டாய்! தலையை பறித்தவனே!; ஆமாறறியும் பின்னால் வருவதை அறியும்; பிரானே! பிரானே!; அணியரங்கத்தே திருவரங்கத்தில்; கிடந்தாய்! சயனித்தவனே!; ஏமாற்றம் என்னை என் ஏக்கத்தை; தவிர்த்தாய்! விலக்கினவனே!; இருவாட்சிப் பூ இருவாட்சிப் பூவை; சூட்டவாராய் சூட்டிட வாராய்
kŏl̤l̤avum vallāy! You have the ability; toḻamai to befriend; cīmālikaṉ avaṉoṭu the Asura Thirumālihan; cāmāṟu avaṉai to kill him; nī ĕṇṇi You; cakkarattāl used Your discus; talai kŏṇṭāy! and cut off his head; pirāṉe! Oh Lord; āmāṟaṟiyum You know the future; kiṭantāy! You reside in; aṇiyaraṅkatte Sri Rangam; tavirttāy! You ended; emāṟṟam ĕṉṉai my longing; cūṭṭavārāy come and I will decorate You with; iruvāṭcip pū Arabian jasmine flowers

PAT 2.7.9

190 அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய் *
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள் மணவாளா! *
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்! *
கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய்.
190 அண்டத்து அமரர்கள் சூழ * அத்தாணியுள் அங்கு இருந்தாய் *
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் * தூமலராள் மணவாளா **
உண்டிட்டு உலகினை ஏழும் * ஓர் ஆலிலையில் துயில் கொண்டாய் *
கண்டு நான் உன்னை உகக்கக் * கருமுகைப் பூச் சூட்ட வாராய் (9)
190 aṇṭattu amararkal̤ cūzha * attāṇiyul̤ aṅku iruntāy *
tŏṇṭarkal̤ nĕñcil uṟaivāy * tūmalarāl̤ maṇavāl̤ā **
uṇṭiṭṭu ulakiṉai ezhum * or ālilaiyil tuyil kŏṇṭāy *
kaṇṭu nāṉ uṉṉai ukakkak * karumukaip pūc cūṭṭa vārāy (9)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

190. Although in heaven you stay in the assembly of gods, you live in the hearts of your devotees on the earth. You, the beloved of Lakshmi, swallowed all the seven worlds and rest on the banyan leaf. Come and I will decorate your hair with jaminum sambac flowers blooming with big buds, and I will see you and be happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்டத்து வானுலகத்தில்; அத்தாணியுள் அருகிலிருக்கும்; அமரர்கள் சூழ தேவர்கள் சூழ; அங்கு இருந்தாய்! அங்கு இருந்தாய்; தொண்டர்கள் தொண்டர்களின்; நெஞ்சில் நினைவில்; உறைவாய்! வாசம் செய்வாய்; தூமலராள் தூய மலரில் பிறந்த பிராட்டியின்; மணவாளா! மணாளா!; உலகினை ஏழும் ஏழுலகினை; உண்டிட்டு உண்டபின்; ஓர் ஆலிலையில் ஓர் ஆலிலையின் மீது; துயில் கொண்டாய்! கண் வளர்ந்தாய்!; உன்னை கண்டு உன்னை கண்டு; நான் உகக்க நான் மகிழ; கருமுகைப் பூ கருமுகைப் பூவை; சூட்ட வாராய் சூட்டிட வருவாய்
aṅku iruntāy! You stay; aṇṭattu in the heaven; attāṇiyul̤ close; amararkal̤ cūḻa to the assembly of gods; uṟaivāy! You remain; nĕñcil in the hearts; tŏṇṭarkal̤ of Your devotees; maṇavāl̤ā! You are the beloved to; tūmalarāl̤ lotus born goddess Lakshmi; uṇṭiṭṭu after comsuming; ulakiṉai eḻum all the seven worlds; tuyil kŏṇṭāy! you rested; or ālilaiyil on a banyan leaf; uṉṉai kaṇṭu for me to see You; nāṉ ukakka and be happy; cūṭṭa vārāy come to me and I will decorate You with; karumukaip pū jaminum sambac

PAT 2.7.10

191 செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி *
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று *
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை *
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2)
191 ## செண்பக மல்லிகையோடு * செங்கழுநீர் இருவாட்சி *
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் * இன்று இவை சூட்ட வா என்று **
மண் பகர் கொண்டானை * ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை *
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன் * பட்டர்பிரான் சொன்ன பத்தே (10)
191 ## cĕṇpaka mallikaiyoṭu * cĕṅkazhunīr iruvāṭci *
ĕṇ pakar pūvum kŏṇarnteṉ * iṉṟu ivai cūṭṭa vā ĕṉṟu **
maṇ pakar kŏṇṭāṉai * āycci makizhntu urai cĕyta im mālai *
paṇ pakar villiputtūrk koṉ * paṭṭarpirāṉ cŏṉṉa patte (10)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

191. Pattarpiran, the chief of Villiputhur composed pāsurams with music telling how the cowherdess Yashodā happily called her son, the king of the earth, to come so that she could decorate his hair with eight kinds of flowers that she brought that day.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செண்பக செண்பக; மல்லிகையோடு மல்லிகையோடு; செங்கழுநீர் செங்கழுநீர்; இருவாட்சி இருவாட்சி ஆகியவைகளை; எண் பகர் பூவும் எண்ணித் தேர்ந்தெடுத்த; பூவும் பூக்களையும்; கொணர்ந்தேன் கொணர்ந்தேன்; இன்று இவை இன்று இவற்றை; சூட்ட வா என்று சூட்டிட வா! என; மண் பகர் பூமியைக் கேட்டு; கொண்டானை பெற்றவனை; ஆய்ச்சி மகிழ்ந்து யசோதை மகிழ்ந்து; உரை செய்த இம்மாலை சொல்லியவற்றை; பண் பகர் பண் நிறைந்த பாசுரங்களாக; வில்லிபுத்தூர்க் கோன் வில்லிபுத்தூர்க் கோமான்; பட்டர் பிரான் பட்டர் பிரானான பெரியாழ்வார்; சொன்ன அருளிச்செய்தது; பத்தே இந்த பத்துப் பாசுரங்களே!
paṭṭar pirāṉ Periazhwar; villiputtūrk koṉ the chief of Villiputhur; cŏṉṉa composed; paṇ pakar these pāsurams with music; āycci makiḻntu that recalled mother Yashoda; urai cĕyta immālai desire; cūṭṭa vā ĕṉṟu to decorate; kŏṇṭāṉai Kannan, the One who was born; maṇ pakar as the King of the earth; ĕṇ pakar pūvum with carelfully picked; pūvum flowers such as; cĕṇpaka champak (shenbaga) flowers; mallikaiyoṭu jasmine flowers; cĕṅkaḻunīr red waterlily flowers and; iruvāṭci Arabian jasmine flowers; kŏṇarnteṉ that she brought; iṉṟu ivai today; patte These are those ten pasurams