PAT 2.7.6

மல்லர்களை அழித்தவனுக்குப் புன்னைப் பூ

187 எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்காண்நம்பி!
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்! *
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு *
பொருதுவருகின்றபொன்னே! புன்னைப்பூச்சூட்டவாராய்.
187 ĕrutukal̤oṭu pŏruti * etum ulopāy kāṇ nampī *
karutiya tīmaikal̤ cĕytu * kañcaṉaik kālkŏṭu pāyntāy **
tĕruviṉkaṇ tīmaikal̤ cĕytu * cikkĕṉa mallarkal̤oṭu *
pŏrutu varukiṉṟa pŏṉṉe * puṉṉaip pūc cūṭṭa nī vārāy (6)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

187. O, best among men! You fought with bulls ( to marry Nappinnai) You knew the evil deeds of Kamsan and killed him with your ploys, and you fought with the wrestlers and defeated them. You teased the cowherd girls on the streets. You are precious as gold! Come and I will decorate your hair with oil-nut flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எருதுகளோடு ஏழு ரிஷபங்களுடன்; பொருதி மோதினவனும்; ஏதும் உலோபாய்! எவ்வித பற்றும் இலாதவனாக; காண் நம்பி இருந்தாய் நம்பிரானே!; கருதிய கம்சன் செய்ய; தீமைகள் நினைத்த தீமைகளை; செய்து அவனுக்கே செய்து; கஞ்சனைக் கால்கொடு அந்தக் கம்சனை காலால்; பாய்ந்தாய் தாக்கியவனே!; தெருவின் கண் வீதியிலே வந்த வஞ்சகர்களை; தீமைகள் செய்து அழித்து; மல்லர்களோடு சாணூரமுஷ்டிகரெனும் மல்லர்களோடு; சிக்கென நிரந்தரமாக; பொருது போரிட வருகின்ற; பொன்னே! என் தங்கமே!; புன்னைப் பூ புன்னை மலர்; சூட்ட வாராய் சூட்டிக் கொள்ள வருவாய்!
pŏruti You defeated; ĕrutukal̤oṭu the seven bulls; kāṇ, nampi my Lord, You; etum ulopāy! remained without any desire; cĕytu You defeated; karutiya Kamsan who wanted; tīmaikal̤ to do evil deeds to You; pāyntāy You hit; kañcaṉaik kālkŏṭu that Kamsan with Your legs; tīmaikal̤ cĕytu You also; tĕruviṉ kaṇ killed the wicked people who came on the streets; pŏṉṉe! You are precious as gold; pŏrutu who fought; cikkĕṉa and defeated; mallarkal̤oṭu the wrestlers; cūṭṭa vārāy come and I will decorate You with; puṉṉaip pū oil-nut flowers