PAT 2.7.5

கரியின் கொம்பை ஒடித்தவனுக்குச் செங்கழுநீர்

186 புள்ளினைவாய்பிளந்திட்டாய்! பொருகரியின் கொம்பொசித்தாய்! *
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்! *
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன் *
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய்.
186 pul̤l̤iṉai vāy pil̤antiṭṭāy * pŏru kariyiṉ kŏmpu ŏcittāy *
kal̤l̤a arakkiyai mūkkŏṭu * kāvalaṉait talai kŏṇṭāy **
al̤l̤i nī vĕṇṇĕy vizhuṅka * añcātu aṭiyeṉ aṭitteṉ *
tĕl̤l̤iya nīril ĕzhunta * cĕṅkazhunīr cūṭṭa vārāy (5)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

186. You split open the beak of Bānasuran who came in the form of a heron, broke the tusk of the elephant, Kuvalayāpeedam, cut off the nose of the cunning Surpanakha, and cut down the heads of the king Rāvanan, you took gobs of butter and swallowed them. yet I, without fear beat you. Come and I will decorate your hair with a garland of red waterlily flowers that bloom in clear water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புள்ளினை பறவை உருவில் வந்த பகாசுரனின்; வாய் பிளந்திட்டாய்! வாயைக்கிழித்துப் போட்டவனே!; பொரு தாக்க வந்த; கரியின் குவலயாபீடமென்னும் யானையின்; கொம்பு ஒசித்தாய்! கொம்பைப் பறித்தவனே!; கள்ள வஞ்சனை நோக்கோடு வந்த; அரக்கியை சூர்ப்பணகையின்; மூக்கொடு மூக்கையும்; காவலனை அவளின் காவலன் ராவணனின்; தலை கொண்டாய்! தலயையும் பறித்தவனே!; அள்ளி நீ வெண்ணெய் நீ வெண்ணெயை அள்ளி; விழுங்க விழுங்கியபோது; அஞ்சாது அடியேன் சிறிதும் அஞ்சாமல்; அடித்தேன் அடித்தேன்; தெள்ளிய நீரில் எழுந்த தெளிவான நீரிலே மலர்ந்த; செங்கழுநீர் பூ செங்கழுநீர் பூ; அரக்கியை சூட்ட வாராய் சூட்டிக் கொள்ள வாராய்
vāy pil̤antiṭṭāy! You split open; pul̤l̤iṉai the beaks of Bānasuran who as heron; kŏmpu ŏcittāy! You broke the tusk; kariyiṉ of the elephant Kuvalayāpeedam; pŏru that came to attack You; talai kŏṇṭāy! You cut the; mūkkŏṭu the nose of; arakkiyai Surpanakha; kal̤l̤a who came with evil intentions; kāvalaṉai and the heads of her brother; al̤l̤i nī vĕṇṇĕy when You; viḻuṅka ate lot of butter; añcātu aṭiyeṉ without any fear; aṭitteṉ I beat You; arakkiyai cūṭṭa vārāy let me decorate You with; cĕṅkaḻunīr pū red waterlily flowers that; tĕl̤l̤iya nīril ĕḻunta bloom in clear water