PAT 2.7.8

அணியரங்கனுக்கு இருவாட்சிப் பூ

189 சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்! *
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்! *
ஆமாறறியும்பிரானே! அணியரங்கத்தேகிடந்தாய்! *
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய்! இருவாட்சிப்பூச்சூட்டவாராய்.
189 cīmālikaṉ avaṉoṭu * tozhamai kŏl̤l̤avum vallāy *
cāmāṟu avaṉai nī ĕṇṇic * cakkarattāl talai kŏṇṭāy **
āmāṟu aṟiyum pirāṉe * aṇi araṅkatte kiṭantāy *
emāṟṟam ĕṉṉait tavirttāy * iruvāṭcip pūc cūṭṭa vārāy (8)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

189. You befriended the Asura Thirumālihan and cut off his head with your discus (chakra) O lord, you are omniscient and you rest on the Kaveri river in beautiful Srirangam. Don’t cheat me. Come and I will decorate your hair with Arabian jasmine flowers.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீமாலிகன் அவனோடு சீமாலிகன் என்ற அசுரனோடு; தோழமை நட்பாகவும்; கொள்ளவும் வல்லாய்! இருக்கவும் வல்லவனே!; சாமாறு அவனை அவன் மடிந்திடுமாறு; நீ எண்ணி நீ கருதி; சக்கரத்தால் சக்கரத்தால் அவன்; தலை கொண்டாய்! தலையை பறித்தவனே!; ஆமாறறியும் பின்னால் வருவதை அறியும்; பிரானே! பிரானே!; அணியரங்கத்தே திருவரங்கத்தில்; கிடந்தாய்! சயனித்தவனே!; ஏமாற்றம் என்னை என் ஏக்கத்தை; தவிர்த்தாய்! விலக்கினவனே!; இருவாட்சிப் பூ இருவாட்சிப் பூவை; சூட்டவாராய் சூட்டிட வாராய்
kŏl̤l̤avum vallāy! You have the ability; toḻamai to befriend; cīmālikaṉ avaṉoṭu the Asura Thirumālihan; cāmāṟu avaṉai to kill him; nī ĕṇṇi You; cakkarattāl used Your discus; talai kŏṇṭāy! and cut off his head; pirāṉe! Oh Lord; āmāṟaṟiyum You know the future; kiṭantāy! You reside in; aṇiyaraṅkatte Sri Rangam; tavirttāy! You ended; emāṟṟam ĕṉṉai my longing; cūṭṭavārāy come and I will decorate You with; iruvāṭcip pū Arabian jasmine flowers