Chapter 6

Yashoda asks a crow to bring a grazing stick for Kannan - (வேலிக் கோல்)

கோல் கொண்டுவா எனல்
Yashoda asks a crow to bring a grazing stick for Kannan - (வேலிக் கோல்)

Krishna's mother combed his hair. She went inside to bring some good flowers to adorn his hair. The young cowherds were taking the cows to graze. Krishna saw this and longed to go too! He searched for a stick to drive the calves. He asked his mother and cried. "Oh dear! The crow just took it away! Crow! Bring the stick for Krishna!" she called out to the crow, managing to keep Krishna stay. This is an experience!

கண்ணன் தலையை வாரிக்கொண்டான். மலர் சூட்ட நல்ல மலர் கொண்டுவர உள்ளே சென்றாள் தாய். மாடு கன்றுகளை மேய்க்க ஆயர் சிறுவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டான் கண்ணன். தானும் செல்ல துடித்தான்! கன்று மேய்க்கும் கொம்பு எங்கே என்று தேடினான். தாயைக் கேட்கிறான். அழுகிறான். "அடடா!

+ Read more
Verses: 172 to 181
Grammar: Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā / கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will get good children and live happily
  • PAT 2.6.1
    172 ## வேலிக் கோல் வெட்டி * விளையாடு வில் ஏற்றி *
    தாலிக் கொழுந்தைத் * தடங்கழுத்தில் பூண்டு **
    பீலித் தழையைப் * பிணைத்துப் பிறகிட்டு *
    காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா *
    கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா (1)
  • PAT 2.6.2
    173 கொங்கும் குடந்தையும் * கோட்டியூரும் பேரும் *
    எங்கும் திரிந்து * விளையாடும் என்மகன் **
    சங்கம் பிடிக்கும் * தடக்கைக்குத் தக்க * நல்
    அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா *
    அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா (2)
  • PAT 2.6.3
    174 கறுத்திட்டு எதிர்நின்ற * கஞ்சனைக் கொன்றான் *
    பொறுத்திட்டு எதிர்வந்த * புள்ளின் வாய் கீண்டான் **
    நெறித்த குழல்களை * நீங்க முன் ஓடி *
    சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா *
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா (3)
  • PAT 2.6.4
    175 ஒன்றே உரைப்பான் * ஒரு சொல்லே சொல்லுவான் *
    துன்று முடியான் * துரியோதனன் பக்கல் **
    சென்று அங்குப் பாரதம் * கையெறிந்தானுக்கு *
    கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா *
    கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா (4)
  • PAT 2.6.5
    176 சீர் ஒன்று தூதாய்த் * துரியோதனன் பக்கல் *
    ஊர் ஒன்று வேண்டிப் * பெறாத உரோடத்தால் **
    பார் ஒன்றிப் பாரதம் * கைசெய்து பார்த்தற்குத் *
    தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா *
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா (5)
  • PAT 2.6.6
    177 ஆலத்து இலையான் * அரவின் அணை மேலான் *
    நீலக் கடலுள் * நெடுங்காலம் கண்வளர்ந்தான் **
    பாலப் பிராயத்தே * பார்த்தற்கு அருள்செய்த *
    கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா *
    குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா (6)
  • PAT 2.6.7
    178 பொன்திகழ் * சித்திரகூடப் பொருப்பினில் *
    உற்ற வடிவில் * ஒரு கண்ணும் கொண்ட ** அக்
    கற்றைக் குழலன் * கடியன் விரைந்து உன்னை *
    மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா *
    மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா (7)
  • PAT 2.6.8
    179 மின்னிடைச் சீதை பொருட்டா * இலங்கையர் *
    மன்னன் மணிமுடி * பத்தும் உடன் வீழ **
    தன் நிகர் ஒன்று இல்லாச் * சிலை கால் வளைத்து இட்ட *
    மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா *
    வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா (8)
  • PAT 2.6.9
    180 தென் இலங்கை மன்னன் * சிரம் தோள் துணிசெய்து *
    மின் இலங்கும் பூண் * விபீடண நம்பிக்கு **
    என் இலங்கும் நாமத்து அளவும் * அரசு என்ற *
    மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா *
    வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா (9)
  • PAT 2.6.10
    181 ## அக்காக்காய் நம்பிக்குக் * கோல் கொண்டு வா என்று *
    மிக்காள் உரைத்த சொல் * வில்லிபுத்தூர்ப் பட்டன் **
    ஒக்க உரைத்த * தமிழ் பத்தும் வல்லவர் *
    மக்களைப் பெற்று * மகிழ்வர் இவ் வையத்தே (10)