Chapter 7

Yashoda wants to adorn Kannnan's hair with flower - (ஆனிரை மேய்க்க)

பூச் சூட்டல்
Yashoda wants to adorn Kannnan's hair with flower - (ஆனிரை மேய்க்க)
There are eight types of flowers mentioned to be offered to the Lord. Yashoda calls upon Krishna to adorn these flowers and bless everyone! If flowers are offered with devotion, everyone will live with fragrance (fame).
பகவானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய எட்டு வகையான மலர்கள் கூறப்படுகின்றன. இம்மலர்களை அணிந்து அருள வேண்டும் என்று அழைகிறாள் யசோதை! பக்தியோடு மலர் ஸமர்ப்பித்தால், எல்லோரும் மணம் (புகழ்) பெற்று வாழ்வர்.
Verses: 182 to 191
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will become beloved devotees of the Lord
  • PAT 2.7.1
    182 ## ஆனிரை மேய்க்க நீ போதி * அருமருந்து ஆவது அறியாய் *
    கானகம் எல்லாம் திரிந்து * உன் கரிய திருமேனி வாட **
    பானையில் பாலைப் பருகிப் * பற்றாதார் எல்லாம் சிரிப்ப *
    தேனில் இனிய பிரானே * செண்பகப் பூச் சூட்ட வாராய் (1)
  • PAT 2.7.2
    183 கரு உடை மேகங்கள் கண்டால் * உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் *
    உரு உடையாய் உலகு ஏழும் * உண்டாக வந்து பிறந்தாய் **
    திரு உடையாள் மணவாளா * திருவரங்கத்தே கிடந்தாய் *
    மருவி மணம் கமழ்கின்ற * மல்லிகைப் பூச் சூட்ட வாராய் (2)
  • PAT 2.7.3
    184 மச்சொடு மாளிகை ஏறி * மாதர்கள்தம் இடம் புக்கு *
    கச்சொடு பட்டைக் கிழித்து * காம்பு துகில் அவை கீறி **
    நிச்சலும் தீமைகள் செய்வாய் * நீள் திருவேங்கடத்து எந்தாய் *
    பச்சைத் தமனகத்தோடு * பாதிரிப் பூச் சூட்ட வாராய் (3)
  • PAT 2.7.4
    185 தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத் * தீமை செய்யாதே *
    மருவும் தமனகமும் சீர் * மாலை மணம் கமழ்கின்ற **
    புருவம் கருங்குழல் நெற்றி * பொலிந்த முகில் கன்று போலே *
    உருவம் அழகிய நம்பீ * உகந்து இவை சூட்ட நீ வாராய் (4)
  • PAT 2.7.5
    186 புள்ளினை வாய் பிளந்திட்டாய் * பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் *
    கள்ள அரக்கியை மூக்கொடு * காவலனைத் தலை கொண்டாய் **
    அள்ளி நீ வெண்ணெய் விழுங்க * அஞ்சாது அடியேன் அடித்தேன் *
    தெள்ளிய நீரில் எழுந்த * செங்கழுநீர் சூட்ட வாராய் (5)
  • PAT 2.7.6
    187 எருதுகளோடு பொருதி * ஏதும் உலோபாய் காண் நம்பீ *
    கருதிய தீமைகள் செய்து * கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் **
    தெருவின்கண் தீமைகள் செய்து * சிக்கென மல்லர்களோடு *
    பொருது வருகின்ற பொன்னே * புன்னைப் பூச் சூட்ட நீ வாராய் (6)
  • PAT 2.7.7
    188 குடங்கள் எடுத்து ஏற விட்டுக் * கூத்தாட வல்ல எம் கோவே *
    மடம் கொள் மதிமுகத்தாரை * மால்செய்ய வல்ல என் மைந்தா **
    இடந்திட்டு இரணியன் நெஞ்சை * இரு பிளவு ஆக முன் கீண்டாய் *
    குடந்தைக் கிடந்த எம் கோவே * குருக்கத்திப் பூச் சூட்ட வாராய் (7)
  • PAT 2.7.8
    189 சீமாலிகன் அவனோடு * தோழமை கொள்ளவும் வல்லாய் *
    சாமாறு அவனை நீ எண்ணிச் * சக்கரத்தால் தலை கொண்டாய் **
    ஆமாறு அறியும் பிரானே * அணி அரங்கத்தே கிடந்தாய் *
    ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் * இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் (8)
  • PAT 2.7.9
    190 அண்டத்து அமரர்கள் சூழ * அத்தாணியுள் அங்கு இருந்தாய் *
    தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் * தூமலராள் மணவாளா **
    உண்டிட்டு உலகினை ஏழும் * ஓர் ஆலிலையில் துயில் கொண்டாய் *
    கண்டு நான் உன்னை உகக்கக் * கருமுகைப் பூச் சூட்ட வாராய் (9)
  • PAT 2.7.10
    191 ## செண்பக மல்லிகையோடு * செங்கழுநீர் இருவாட்சி *
    எண் பகர் பூவும் கொணர்ந்தேன் * இன்று இவை சூட்ட வா என்று **
    மண் பகர் கொண்டானை * ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை *
    பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன் * பட்டர்பிரான் சொன்ன பத்தே (10)