PAT 2.7.9

வடபத்ரசாயிக்குக் கருமுகைப் பூ

190 அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய் *
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள் மணவாளா! *
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்! *
கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய்.
190 aṇṭattu amararkal̤ cūzha * attāṇiyul̤ aṅku iruntāy *
tŏṇṭarkal̤ nĕñcil uṟaivāy * tūmalarāl̤ maṇavāl̤ā **
uṇṭiṭṭu ulakiṉai ezhum * or ālilaiyil tuyil kŏṇṭāy *
kaṇṭu nāṉ uṉṉai ukakkak * karumukaip pūc cūṭṭa vārāy (9)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

190. Although in heaven you stay in the assembly of gods, you live in the hearts of your devotees on the earth. You, the beloved of Lakshmi, swallowed all the seven worlds and rest on the banyan leaf. Come and I will decorate your hair with jaminum sambac flowers blooming with big buds, and I will see you and be happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்டத்து வானுலகத்தில்; அத்தாணியுள் அருகிலிருக்கும்; அமரர்கள் சூழ தேவர்கள் சூழ; அங்கு இருந்தாய்! அங்கு இருந்தாய்; தொண்டர்கள் தொண்டர்களின்; நெஞ்சில் நினைவில்; உறைவாய்! வாசம் செய்வாய்; தூமலராள் தூய மலரில் பிறந்த பிராட்டியின்; மணவாளா! மணாளா!; உலகினை ஏழும் ஏழுலகினை; உண்டிட்டு உண்டபின்; ஓர் ஆலிலையில் ஓர் ஆலிலையின் மீது; துயில் கொண்டாய்! கண் வளர்ந்தாய்!; உன்னை கண்டு உன்னை கண்டு; நான் உகக்க நான் மகிழ; கருமுகைப் பூ கருமுகைப் பூவை; சூட்ட வாராய் சூட்டிட வருவாய்
aṅku iruntāy! You stay; aṇṭattu in the heaven; attāṇiyul̤ close; amararkal̤ cūḻa to the assembly of gods; uṟaivāy! You remain; nĕñcil in the hearts; tŏṇṭarkal̤ of Your devotees; maṇavāl̤ā! You are the beloved to; tūmalarāl̤ lotus born goddess Lakshmi; uṇṭiṭṭu after comsuming; ulakiṉai eḻum all the seven worlds; tuyil kŏṇṭāy! you rested; or ālilaiyil on a banyan leaf; uṉṉai kaṇṭu for me to see You; nāṉ ukakka and be happy; cūṭṭa vārāy come to me and I will decorate You with; karumukaip pū jaminum sambac