Chapter 7

Kannan as a toddler - (தொடர் சங்கிலிகை)

தளர்நடைப் பருவம்
Kannan as a toddler - (தொடர் சங்கிலிகை)
Raising a child who doesn't know how to walk is a mother's duty, and it's a mother's joy to see them take their first steps. Kanna, you are indeed a great walker and you walk so beautiful. Everyone says so! Can you show that great walking skill to me? Place your tender feet on the ground and take steps like a baby elephant!" says Yashoda. Those who sing these songs with devotion will be blessed with a son as illustrious as Lord Krishna.
நடக்கத் தெரியாத குழந்தையை நடக்கச் செய்வதும், அது தடுமாறிக் கொண்டு நடந்து வருவதைக் கண்டு மகிழ்வதும் தாயின் செயல்! "கண்ணா, நீ யல்லனோ நடையழகன். உன்னைச் சதுர்கதி: என்று எல்லோரும் கூறுகிறார்களே! அந்த நடையழகை எனக்குக் காட்டமாட்டாயா? உன் மெல்லடித் தாமரைகளைத் தரைமீது மெல்ல வைத்து 'யானைக்குட்டி போல்' நடந்து வா!" என்கிறாள் யசோதை. இப்பாடல்களை ஆர்வத்தோடு பாடுவோர் கண்ணனைப் போன்று புகழ்மிக்க மகனைப் பெறுவார்கள்.
Verses: 86 to 96
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Getting devotees as children
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 1.7.1

86 தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப *
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல் *
உடன்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க *
தடந்தாளிணைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. (2)
86 ## தொடர் சங்கிலிகை சலார் பிலார் என்னத் * தூங்கு பொன்மணி ஒலிப்ப *
படு மும்மதப் புனல் சோர * வாரணம் பைய நின்று ஊர்வது போல் **
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப * உடை மணி பறை கறங்க *
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி * தளர்நடை நடவானோ (1)
86 ## tŏṭar caṅkilikai calār-pilār ĕṉṉat * tūṅku pŏṉmaṇi ŏlippa *
paṭu mummatap puṉal cora * vāraṇam paiya niṉṟu ūrvatu pol **
uṭaṉ kūṭik kiṇkiṇi āravārippa * uṭai maṇi paṟai kaṟaṅka *
taṭan tāl̤iṇai kŏṇṭu cārṅkapāṇi * tal̤arnaṭai naṭavāṉo (1)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

86. Like an elephant dripping with ichor, that ambles and trod with the chains on his feet making loud bangs, and the golden bells hanging on both sides ring won’t my child with the Sārnga bow walk as the bells of the anklets (kinkinis) on his feet ring loudly? Won’t He toddle with his lovely feet?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சார்ங்கபாணி சார்ங்கமென்னும் வில்லையுடையவன்; தொடர் இரும்புச்சங்கிலியின்; சங்கிலிகை வளையங்கள்; சலார் பிலார் என்ன சலார் - பிலார் என சப்திக்கவும்; பொன் தூங்கு பொன்கயிற்றில் தொங்குகின்ற; மணி ஒலிப்ப மணி ஒலிக்கவும்; படு மும்மத கசியும்; புனல் மூன்று விதமான மத நீர்; சோர பெருகிட; வாரணம் யானையானது; பைய நின்று மெள்ள நின்று நிதானமாக; ஊர்வது போல் நடந்து போவதுபோலே; கிண்கிணி சதங்கைகள்; உடன் கூடி ஒன்றோடொன்று சேர்ந்து; ஆரவாரிப்ப சப்திக்கவும்; உடைமணி அரைநாணில் கட்டிய மணிகள்; பறை கறங்க பறைபோல் ஒலிக்கவும்; கொண்டு ஒன்றுகொன்று ஒத்திருக்காக்கூடிய; தடந் தாளிணை தன் இரு பாதங்களாலும்; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
vāraṇam Like an elephant; ūrvatu pol that walks; paiya niṉṟu slowly and composedly; caṅkilikai with the rings of; tŏṭar the iron chain; calār pilār ĕṉṉa making louds sounds ('salar' and 'pilar'); maṇi ŏlippa and bells ringing; pŏṉ tūṅku from a golden string tied to the elephant; paṭu mummata dripping; puṉal three kinds of ichor; cora that overflows; kiṇkiṇi the anklets of; cārṅkapāṇi the One with a bow called 'Sharanga'; uṭaṉ kūṭi rubbed against each other; āravārippa to make sounds; uṭaimaṇi bells on the string tied on His waist; paṟai kaṟaṅka sounded like drums; kŏṇṭu with; taṭan tāl̤iṇai His two divine feet; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!

PAT 1.7.2

87 செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல *
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக *
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன் *
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ.
87 செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும் * சிறுபிறை முளைப் போல *
நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே * நளிர் வெண்பல் முளை இலக **
அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட * அனந்தசயனன் *
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன் * தளர்நடை நடவானோ (2)
87 cĕkkariṭai nuṉikkŏmpil toṉṟum * ciṟupiṟai mul̤aip pola *
nakka cĕn tuvarvāyt tiṇṇai mīte * nal̤ir vĕṇpal mul̤ai ilaka **
akkuvaṭam uṭuttu āmaittāli pūṇṭa * aṉantacayaṉaṉ *
takka mā maṇivaṇṇaṉ vācutevaṉ * tal̤arnaṭai naṭavāṉo (2)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

87. The small white teeth in his coral mouth shines like the crescent moon in the red sky. He blissfully rests on the snake bed. He is ornamented with a chain made of shell on his waist and a turtle-shaped pendant. Won't the sapphire-colored Kannan, the child of Vasudeva toddle?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செக்கரிடை செவ்வானத்தில்; நுனிக்கொம்பில் கொம்பின் நுனியிலே; தோன்றும் காணப்படுகிற; சிறுபிறை சிறிய பிறைச்சந்திரனாகிய; முளை போல முளையைப்போல; நக்க செந்துவர் வாய் சிரித்த சிவந்த வாயின்; திண்ணை மீதே உதட்டின் மீது; நளிர் வெண்பல் குளிர்ந்த வெண்மையாகிய பல்லின்; முளை இலக முளைகள் தோன்ற; அக்குவடம் உடுத்து சங்குமணி வடத்தைத் தரித்து; ஆமைத் தாலி ஆமை வடிவ ஆபரணத்தை; பூண்ட கழுத்திலணிந்து; அனந்தசயனன் அனந்தாழ்வான்மேலே சயனிப்பவனும்; தக்க மா அழகிய பெரிய; மணிவண்ணன் நீலமணி போன்ற நிறமுடைய; வாசுதேவன் ஸ்ரீவஸூதேவர் புத்திரன் கண்ணன்; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
mul̤ai ilaka the tips; nal̤ir vĕṇpal of His cool white teeth; tiṇṇai mīte adjacent to the lips; nakka cĕntuvar vāy of His red smiling mouth; mul̤ai pola that is like a bud; ciṟupiṟai looked like a small crescent moon; toṉṟum seen; nuṉikkŏmpil in the; cĕkkariṭai red sky; aṉantacayaṉaṉ the One who rests on the snake bed; akkuvaṭam uṭuttu wearing the conch-like waist chain; āmait tāli with tortoise-shaped ornament; pūṇṭa hanging around His neck; vācutevaṉ Krishna, the son of Vasudeva; takka mā who is beautiful and large; maṇivaṇṇaṉ with a sapphire-like hue; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!

PAT 1.7.3

88 மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய் *
பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும் *
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்தினில்காறையொடும் *
தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ.
88 மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் * சூழ் பரிவேடமுமாய்ப் *
பின்னல் துலங்கும் அரசிலையும் * பீதகச் சிற்றாடையொடும் **
மின்னில் பொலிந்த ஓர் கார்முகில் போலக் * கழுத்தினில் காறையொடும் *
தன்னில் பொலிந்த இருடிகேசன் * தளர்நடை நடவானோ (3)
88 miṉṉuk kŏṭiyum or vĕṇ tiṅkal̤um * cūzh pariveṭamumāyp *
piṉṉal tulaṅkum aracilaiyum * pītakac ciṟṟāṭaiyŏṭum **
miṉṉil pŏlinta or kārmukil polak * kazhuttiṉil kāṟaiyŏṭum *
taṉṉil pŏlinta iruṭikecaṉ * tal̤arnaṭai naṭavāṉo (3)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

88. He, Rishikesā, the bright one, wears a chain that shines like lightning, his waist is decorated with an arasilai ornament that shines like the white moon, he wears a silk dress and his dark cloud-like neck is adorned with the bright golden karai ornament that shines like lightning. He looks beautiful. Won’t He toddle?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னுக் கொடியும் மின்னல் கொடியும்; ஓர் வெண் திங்களும் வெண்மையான சந்திரனும்; சூழ் பரிவேடமுமாய் சுத்தி இருக்ககூடிய ஒளியும்; பின்னல் இடுப்பில் பொற்பின்னலும் அரசிலை ஆபரணமும்; துலங்கும் பளிச்சிடும்; பீதக பீதாம்பரம் என்னும்; சிற்றாடையொடும் சிறிய வஸ்திரமும்; மின்னில் பொலிந்தது மின்னலின் பொலிவுக்கு; ஓர் கார்முகில் போல ஒத்த காளமேகம் போல; கழுத்தினில் கழுத்திலணிந்த; காறையொடும் காறையென்னும் ஆபரணத்தோடும் கூடிய; தன்னில் தன் இயற்கை அழகாலேயே; பொலிந்த விளங்குகிற; இருடீகேசன் இருஷீகேசன்; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
miṉṉuk kŏṭiyum the lightening; or vĕṇ tiṅkal̤um and the white moon; cūḻ pariveṭamumāy with the bright light that exists around; tulaṅkum who is sporting; ciṟṟāṭaiyŏṭum a small garment; pītaka called peethamparam (a type of attire); piṉṉal along with arasilai ornament that decorates Kannan's waist; iruṭīkecaṉ Rishikesā (another name for Krishna); pŏlinta known; taṉṉil for His natural beauty; kāṟaiyŏṭum wears a karai ornament; kaḻuttiṉil around His neck; or kārmukil pola that looks like dark cloud which matches; miṉṉil pŏlintatu the luster of the lightening; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!

PAT 1.7.4

89 கன்னல்குடம்திறந்தாலொத்தூறிக் கணகணசிரித்துவந்து *
முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன் *
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான் *
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ.
89 கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறிக் * கணகண சிரித்து உவந்து *
முன் வந்து நின்று முத்தம் தரும் * என் முகில்வண்ணன் திருமார்வன் **
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து * என்னைத் தளிர்ப்பிக்கின்றான் *
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே * தளர்நடை நடவானோ (4)
89 kaṉṉal kuṭam tiṟantāl ŏttu ūṟik * kaṇakaṇa cirittu uvantu *
muṉ vantu niṉṟu muttam tarum * ĕṉ mukilvaṇṇaṉ tirumārvaṉ **
taṉṉaip pĕṟṟeṟkut taṉvāy amutam tantu * ĕṉṉait tal̤irppikkiṉṟāṉ *
taṉ ĕṟṟu māṟṟalar talaikal̤ mīte * tal̤arnaṭai naṭavāṉo (4)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

89. Like the sugarcane juice that drips through the holes of a pot, from His mouth drips saliva, as he laughs aloud. He is the One who always keeps Lakshmi on His chest. He, the dark-hued Lord, kisses me, who begot Him, with the nectar from His mouth. Won’t He toddle on his enemies’ heads and conquer them?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கன்னற் குடம் கரும்பு ரஸ குடத்தில்; திறந்தால் பொத்தல் விழுந்தால் சாறு பொழிவதைப் போல; ஒத்து ஊறி வாயிலிருந்து நீர் சுரந்து வடிய; கணகண சிரித்து கலகலவென்று சிரித்து; உவந்து மகிழ்ந்து; முன்வந்து நின்று என் முன்னே வந்து நின்று; முத்தம் தரும் என் எனக்கு முத்தம் கொடுக்கும்; முகில்வண்ணன் மேகம் போன்ற கருத்த நிறத்தன்; திருமார்வன் மஹாலக்ஷ்மியை தன் மார்பிலுடையவன்; தன்னைப் பெற்றேற்கு தன்னைப் பெற்ற எனக்கு; தன் வாய் அமுதம் தன்னுடைய அதர அமிர்தத்தை; தந்து கொடுத்து; என்னை தளிர்ப்பிக்கின்றான் என்னை மகிழ்விக்கிறான்; தன் எற்று மாற்றலர் தன்னை எதிர்க்கிற சத்ருக்களுடைய; தலைகள் மீதே தலைகளின் மேலே அடியிட்டு; தளர் நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
tiṟantāl like the juice spilling from a hole; kaṉṉaṟ kuṭam in a pot with sugarcane juice; ŏttu ūṟi the saliva drips from His mouth; kaṇakaṇa cirittu who laughs uproariously; uvantu and joyfully; muṉvantu niṉṟu He came and stood before me; muttam tarum ĕṉ and gave me a kiss; tirumārvaṉ the One with Mahalakshmi on His chest; mukilvaṇṇaṉ with the skin color of a dark coud; taṉṉaip pĕṟṟeṟku to me who is a mother to Him; tantu He gives me; taṉ vāy amutam the nectar that flows from His mouth; ĕṉṉai tal̤irppikkiṉṟāṉ and brings me joy; talaikal̤ mīte He steps on the head of; taṉ ĕṟṟu māṟṟalar the enemies who opposes Him; tal̤ar naṭai naṭavāṉo! wont He toddle!

PAT 1.7.5

90 முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட *
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல் *
பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும் *
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ.
90 முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் * மொடுமொடு விரைந்து ஓட *
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன் * பெயர்ந்து அடியிடுவது போல் **
பன்னி உலகம் பரவி ஓவாப் * புகழ்ப் பலதேவன் என்னும் *
தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான் * தளர்நடை நடவானோ (5)
90 muṉ nal or vĕl̤l̤ip pĕrumalaik kuṭṭaṉ * mŏṭumŏṭu viraintu oṭa *
piṉṉait tŏṭarntatu or karumalaik kuṭṭaṉ * pĕyarntu aṭiyiṭuvatu pol **
paṉṉi ulakam paravi ovāp * pukazhp palatevaṉ ĕṉṉum *
taṉ nampi oṭap piṉ kūṭac cĕlvāṉ * tal̤arnaṭai naṭavāṉo (5)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

90. As the little Kannan runs swiftly behind his elder brother Baladeva who is praised by the whole world, he looks like a dark baby mountain running swiftly behind a large silver mountain. Won't the little child running behind his good brother toddle?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் நல் ஓர் முன்பு ஒரு அழகிய; வெள்ளி பெருமலை பெரிய வெள்ளிமலை; குட்டன் ஈன்ற குட்டி; மொடுமொடு திடுதிடென்று; விரைந்து ஓட வேகமாக ஓட; பின்னை அதைப்பிடிக்க பின்; தொடர்ந்தது ஓர் தொடர்ந்து ஓடிய ஓர் ஒப்பற்ற; கருமலைக் குட்டன் கருத்த மலை ஈன்ற குட்டி போல்; பெயர்ந்து இடம் பெயர்ந்து; அடியிடுவதுபோல் நகர்ந்து ஓடுவது போல; பன்னி உலகம் பரவி உலகம் அனைத்தும் சேர்ந்து துதித்தாலும்; ஒவாப் புகழ் எல்லை காணமுடியாத கீர்த்தியையுடையவனாய்; தன் நம்பி ஓட தமயனான பலராமன்; தன்னுடைய தமையன் முன்னே ஓடிக்கொண்டிருக்க; பின் கூடச் செல்வான் பின்னே உடன் சென்ற பெருமான்; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
muṉ nal or once a beautiful; kuṭṭaṉ boy (Balarama) who looked like he was giving birth; vĕl̤l̤i pĕrumalai by a big silver mountain; mŏṭumŏṭu suddenly; viraintu oṭa ran fast; piṉṉai and to catch him from behind; karumalaik kuṭṭaṉ a child (Kannan) who looked like a dark mountain; pĕyarntu that uprooted; aṭiyiṭuvatupol and moved places; tŏṭarntatu or He ran continously; paṉṉi ulakam paravi even if praised by the entire world; ŏvāp pukaḻ He is the One with limitless fame; taṉ nampi oṭa the brother Balarama; taṉṉuṭaiya tamaiyaṉ ran ahead of Him; piṉ kūṭac cĕlvāṉ the Lord who went behind him; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!

PAT 1.7.6

91 ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த *
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து *
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து *
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ.
91 ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் * உள்ளடி பொறித்து அமைந்த *
இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல் * இலச்சினை பட நடந்து **
பெருகாநின்ற இன்ப வெள்ளத்தின்மேல் * பின்னையும் பெய்து பெய்து *
கரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை * தளர்நடை நடவானோ (6)
91 ŏru kālil caṅku ŏru kālil cakkaram * ul̤l̤aṭi pŏṟittu amainta *
iru kāluṅ kŏṇṭu aṅku aṅku ĕzhutiṉāṟpol * ilacciṉai paṭa naṭantu **
pĕrukāniṉṟa iṉpa-vĕl̤l̤attiṉmel * piṉṉaiyum pĕytu pĕytu *
karu kārk kaṭalvaṇṇaṉ kāmar tātai * tal̤arnaṭai naṭavāṉo (6)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

91. He has on his right foot the sign of the conch and on his left foot the sign of the discus (chakra) and when he walks with his two feet, he leaves the marks of the chakra and the conch on the ground. He toddles and gives me a flood of the joy again and again. Won’t the dark ocean-colored One, the father of Kama, toddle?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒருகாலில் சங்கு ஒருகாலில் சங்கும்; ஒரு காலில் சக்கரம் ஒரு காலில் சக்கரமும்; உள்ளடி பாதங்களின் உட்புறத்திலே; பொறித்து ரேகையின் வடிவத்தோடு; அமைந்த பொருந்தியிருக்கப் பெற்ற; இரு காலும் கொண்டு இரண்டு பாதங்களினாலும்; அங்கு அங்கு அடிவைத்த அவ்விடங்களில் எல்லாம்; எழுதினாற்போல் சித்தரித்ததுபோல; இலச்சினைபட நடந்து முத்திரை படியும்படி அடிவைத்த; பெருகாநின்ற அவனது வடிவழகைக் கண்டு பூரிக்கிற; இன்ப வெள்ளத்தின் மேல் இன்பவெள்ளத்துக்கு மேலே; பின்னையும் மேலும் ஆனந்தத்தைப்; பெய்து பெய்து பொழிந்து கொண்டு; கரு கார் கடல்வண்ணன் கருத்த குளிர்ந்த கடல்வண்ணன்; காமர் தாதை காமதேவனின் தந்தையான இவன்; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
ŏrukālil caṅku Kannan has conch in one foor; ŏru kālil cakkaram and discus on one foot; pŏṟittu in the form of imprints; ul̤l̤aṭi on the soles; iru kālum kŏṇṭu with those two feet; amainta that has those imprints; aṅku aṅku in places where he walked; ilacciṉaipaṭa naṭantu He left the foot prints of conch and dicus; ĕḻutiṉāṟpol as depicted; iṉpa vĕl̤l̤attiṉ mel beyond the blissul state when; pĕrukāniṉṟa seeing and enjoying his divine beauty; pĕytu pĕytu He showers; piṉṉaiyum more happiness; karu kār kaṭalvaṇṇaṉ this Lord with dark cloud like complexion; kāmar tātai the Father of Kamadhenu; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!

PAT 1.7.7

92 படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல் *
இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று *
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென *
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ.
92 படர் பங்கைய மலர்வாய் நெகிழப் * பனி படு சிறுதுளி போல் *
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி * இற்று இற்று வீழநின்று **
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல் * உடை மணி கணகணென *
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி * தளர்நடை நடவானோ (7)
92 paṭar paṅkaiya malarvāy nĕkizhap * paṉi paṭu ciṟutul̤i pol *
iṭaṅ kŏṇṭa cĕvvāy ūṟi ūṟi * iṟṟu iṟṟu vīzhaniṉṟu **
kaṭuñ cek kazhuttiṉ maṇikkural pol * uṭai maṇi kaṇakaṇĕṉa *
taṭan tāl̤iṇai kŏṇṭu cāraṅkapāṇi * tal̤arnaṭai naṭavāṉo (7)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

92. Like the cool honey that falls in drops from the blossoming lotus, saliva drips continually from His red lotus mouth, as he walks. The bells that decorate his dress ring 'cling clang' like the bells tied on the neck of a strong bull. Won’t He, with his Sārangam bow, toddle on his soft feet?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
படர் பங்கய மலர் படர்ந்திருக்கிற தாமரைப்பூ; வாய் நெகிழ மட்டவிழ்ந்து மலரும்போது வெளிப்படும்; பனி படு குளிர்ச்சியான மதுவானது; சிறுதுளி போல் சொட்டுச்சொட்டாக விழுவது போல்; இடங் கொண்ட பெருமை கொண்டுள்ள; செவ்வாய் தனது சிவந்த வாயினின்றும்; ஊறி ஊறி ஜலமானது இடைவிடாமற் சுரந்து; இற்று இற்று சொட்டு சொட்டாக; வீழ நின்று விழும்படி நின்று; கடுஞ் சேக் கழுத்தின் முரட்டு ரிஷபத்தின் கழுத்தின்; மணிக்குரல் போல் மணியினுடைய ஒலிபோலே; உடை மணி தனது இடுப்பில் கட்டியமணி; கணகணென கணகணவென்றொலிக்க; தடந் தாளினை கொண்டு பருத்த இரண்டு பாதங்களாலும்; சார்ங்கபாணி சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவனே!; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
paṉi paṭu like a cool nectar; vāy nĕkiḻa that emanates during the bnlooming of; paṭar paṅkaya malar a wide spread lotus; ciṟutul̤i pol falling as droplets; ūṟi ūṟi saliva drips from the mouth continously; cĕvvāy from his red mouth; iṭaṅ kŏṇṭa that is divine; vīḻa niṉṟu as He stands it dips; iṟṟu iṟṟu drop by drop; maṇikkural pol like the sound of a bell; kaṭuñ cek kaḻuttiṉ in the neck of a raging bull; uṭai maṇi the bell tied on His waist; kaṇakaṇĕṉa ring aloud; taṭan tāl̤iṉai kŏṇṭu He has two puffy feet; cārṅkapāṇi the One who carried the bow called saranga; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!

PAT 1.7.8

93 பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய *
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர *
மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின் *
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ.
93 பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே * அருவிகள் பகர்ந்தனைய *
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ * அணி அல்குல் புடை பெயர **
மக்கள் உலகினில் பெய்து அறியா * மணிக் குழவி உருவின் *
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன் * தளர்நடை நடவானோ (8)
93 pakkam karuñ ciṟuppāṟai mīte * aruvikal̤ pakarntaṉaiya *
akkuvaṭam izhintu eṟit tāzha * aṇi alkul puṭai pĕyara **
makkal̤ ulakiṉil pĕytu aṟiyā * maṇik kuzhavi uruviṉ *
takka mā maṇivaṇṇaṉ vācutevaṉ * tal̤arnaṭai naṭavāṉo (8)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

93. Just as the white waterfalls glitter on a black hill, He walks with the chain made of white shells swaying on his waist. He is Vāsudevan, the sapphire-colored Lord who is born as a marvelous child, people had never seen before. Won't He toddle?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பக்கம் கரும் கருத்த சிறிய; சிறுப்பாறை மீதே மலையின் பக்கத்தில்; அருவிகள் அருவிகளானவை; பகர்ந்தனைய பிரகாசிப்பது போலே; அக்குவடம் இடுப்பில் உள்ள சங்குமணியானது; இழிந்து தளர்ந்து; ஏறித் தாழ உயர்ந்தும் தாழ்ந்தும் பிரகாசிக்கவும்; அணி அல்குல் அழகிய இடுப்பு; புடை பெயர பக்கங்களிலே அசையவும்; மக்கள் உலகினில் உலகத்திலுள்ள மனிதர்கள்; பெய்து அறியா பெற்றறியாத; மணிக் குழவி அழகிய குழந்தை; உருவின் வடிவத்தை உடையவனும்; தக்க மா மணிவண்ணன் அழகிய நீலமணி வண்ணன்; வாசுதேவன் தேவ பிரான்; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
pakarntaṉaiya like shining; aruvikal̤ waterfalls that exist; ciṟuppāṟai mīte against a mountain backdrop; pakkam karum that is dark and small; akkuvaṭam conch bells that exists on His waist; iḻintu relaxes and; eṟit tāḻa shines while it goes up and down; puṭai pĕyara moving on ths sides of His; aṇi alkul beautiful hip; uruviṉ He posses the form of; maṇik kuḻavi Child so beauiful; pĕytu aṟiyā never seen before; makkal̤ ulakiṉil by humans in the world; vācutevaṉ the Lord; takka mā maṇivaṇṇaṉ who is like a bluegem; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!

PAT 1.7.9

94 வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல் *
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து *
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே *
தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ.
94 வெண் புழுதி மேல் பெய்துகொண்டு அளைந்தது ஓர் * வேழத்தின் கருங்கன்று போல் *
தெண் புழுதியாடித் திரிவிக்கிரமன் * சிறு புகர்பட வியர்த்து **
ஒண் போது அலர்கமலச் சிறுக்கால் உறைத்து * ஒன்றும் நோவாமே *
தண் போது கொண்ட தவிசின் மீதே * தளர்நடை நடவானோ (9)
94 vĕṇ puzhuti mel pĕytukŏṇṭu al̤aintatu or * vezhattiṉ karuṅkaṉṟu pol *
tĕṇ puzhutiyāṭit tirivikkiramaṉ * ciṟu pukarpaṭa viyarttu **
ŏṇ potu alarkamalac ciṟukkāl uṟaittu * ŏṉṟum novāme *
taṇ potu kŏṇṭa taviciṉ mīte * tal̤arnaṭai naṭavāṉo (9)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

94. Throwing white dirt on his body, like a dark elephant calf Thrivikraman plays throwing mud on himself His body glitters with sweat drops. Won’t he toddle on the cool soft flower-covered earth without hurting his small feet that are like freshly blooming lotuses. Won’t he toddle?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெண் புழுதிமேல் வெளுத்த புழுதியை தன்மேல்; பெய்து கொண்டு படிய விட்டுக்கொண்டு; அளைந்தது அளைந்து; ஓர் வேழத்தின் ஓர் கருத்த யானையின்; கருங்கன்று போல் குட்டி போல; தெண் புழுதி ஆடி தெளிவான புழுதியிலே விளையாடிய; திரிவிக்கிரமன் திரிவிக்கிரமன்; சிறு புகர்பட பிரகாசமாகவும் சிறிது பளபளக்க; வியர்த்து வியர்த்துப் போய்; ஒண் போது அழகிய தாமரை; அலர் கமல மொக்கு விகசித்தது போன்ற; சிறுக்கால் உறைத்து சிறிய பாதங்கள் உறுத்த; ஒன்றும் நோவாமே சிறிதும் நோவாதபடி; தண் போது கொண்ட குளிர்ந்த புஷ்பங்களுடைய; தவிசின் மீதே மெத்தையின்மேலே; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
pĕytu kŏṇṭu He throws; vĕṇ puḻutimel white dirt on His body; al̤aintatu and roams; karuṅkaṉṟu pol like a baby of; or veḻattiṉ a dark elephant; tirivikkiramaṉ Tiruvikrama; tĕṇ puḻuti āṭi plays in the clear soil; viyarttu His sweat drops; ciṟu pukarpaṭa sparkels brightly; ŏṉṟum novāme without causing any pain to; ciṟukkāl uṟaittu His small feet; alar kamala that are like a blooming bud of; ŏṇ potu a beautiful lotus; taviciṉ mīte on the bed; taṇ potu kŏṇṭa of cool flowers; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!

PAT 1.7.10

95 திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் * தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர *
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் * சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ.
95 திரை நீர்ச் சந்திர மண்டலம் போல * செங்கண்மால் கேசவன் * தன்
திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி * திகழ்ந்து எங்கும் புடைபெயர **
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் * பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் * சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் * தளர்நடை நடவானோ (10)
95 tirai nīrc cantira maṇṭalam pola * cĕṅkaṇmāl kecavaṉ * taṉ
tiru nīr mukattut tulaṅku cuṭṭi * tikazhntu ĕṅkum puṭaipĕyara **
pĕru nīrt tirai ĕzhu kaṅkaiyilum * pĕriyator tīrtta palam
taru nīr * ciṟuccaṇṇam tul̤l̤am corat * tal̤arnaṭai naṭavāṉo (10)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

95. When Kesavan with beautiful eyes that shine on his moon-like face, toddles, his chutti ornament glitters and swings like the shadow of the moon in rippling water. The small drops of saliva dripping from his mouth give boons to his devotees even more than the water of the Ganges that showers drops from its rolling waves. Won’t he toddle?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரை நீர் அலை வீசும் கடலின் நடுவில்தோன்றிய; செங்கண்மால் சிவந்த கண்களையுடைய கேசவன்; சந்திர மண்டலம் போல் சந்திர மண்டலம் போல்; தன் திரு நீர் முகத்து தன் அழகிய முகத்திலே; துலங்கு சுட்டி விளங்குகின்ற சுட்டியானது; திகழ்ந்து எங்கும் எல்லாவிடத்திலும் பிரகாசித்திட; புடைபெயர இங்குமங்கும் ஆடவும்; பெரு நீர்த் சிறந்த தீர்த்தமாகிய; திரை எழு அலைகள் எழும்பும்; கங்கையிலும் கங்கையை விட; பெரியதோர் தீர்த்த பலம் அதிக தீர்த்த பலம்; தரு நீர் தரும் நீர்; சிறுச்சண்ணம் சிறிய சண்ண நீர்; துள்ளம் சோர துளிகளாகச் சொட்டவும்; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
tirai nīr appeared in the midst of the sea with waves; cĕṅkaṇmāl Lord Krishna, the One with red eyes; cantira maṇṭalam pol that shines like a moon; taṉ tiru nīr mukattu in His beautiful face; tulaṅku cuṭṭi the chutti ornament of His forehead; puṭaipĕyara dances here and there; tikaḻntu ĕṅkum and is radiant in every direction; ciṟuccaṇṇam the saliva; tul̤l̤am cora that drips from His mouth; taru nīr gives; pĕriyator tīrtta palam greater sancitity; kaṅkaiyilum more than Ganges; pĕru nīrt the most scared water body; tirai ĕḻu with waves rising; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!

PAT 1.7.11

96 ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை *
தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை *
வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார் *
மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே (2).
96 ## ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய * அஞ்சனவண்ணன் தன்னை *
தாயர் மகிழ ஒன்னார் தளரத் * தளர்நடை நடந்ததனை **
வேயர் புகழ் விட்டுசித்தன் * சீரால் விரித்தன உரைக்கவல்லார் *
மாயன் மணிவண்ணன் தாள் பணியும் * மக்களைப் பெறுவர்களே (11)
96 ## āyar kulattiṉil vantu toṉṟiya * añcaṉavaṇṇaṉ taṉṉai *
tāyar makizha ŏṉṉār tal̤arat * tal̤arnaṭai naṭantataṉai **
veyar pukazh viṭṭucittaṉ * cīrāl virittaṉa uraikkavallār *
māyaṉ maṇivaṇṇaṉ tāl̤ paṇiyum * makkal̤aip pĕṟuvarkal̤e (11)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

96. The famous poet Vishnuchithan of the Veyar clan described how the dark-colored lord born in the cowherd tribe toddled giving joy to his mother and making his enemies tremble. Those devotees who recite these pāsurams of Vishnuchithan will beget children who worship the feet of the dark jewel-like Māyan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயர் குலத்தினில் ஆயர் குலத்தில்; வந்து தோன்றிய அவதரித்த; அஞ்சன வண்ணன் மை போன்ற கரு நிறக் கண்ணன்; தன்னை தன்னைக் கண்டு; தாயர் மகிழ தாய்மார்கள் மகிழவும்; ஒன்னார் தளர விரோதிகள் வருந்தவும்; தளர்நடை நடந்ததனை தளர்நடை நடந்ததை; வேயர் புகழ் வேயர்களின் புகழ்மிக்க; விட்டுசித்தன் பெரியாழ்வார்; சீரால் பாசுரங்களாக; விரித்தன அருளிச்செய்தவைகளை; உரைக்க வல்லார் சொல்ல வல்லவர்கள்; மாயன் மணி வண்ணன் கண்ணபெருமானின்; தாள் பணியும் திருவடிகளைத் தொழும்; மக்களை பெறுவர்களே மக்களைப் பெறுவார்கள்
viṭṭucittaṉ Periyāzhvār; veyar pukaḻ of the famous of the Veyar clan; virittaṉa who graciously gave; cīrāl these divine hymns; tāyar makiḻa described how His mother rejoice; taṉṉai by seeing; añcaṉa vaṇṇaṉ dark-colored Krishna; tal̤arnaṭai naṭantataṉai toddle; vantu toṉṟiya who incarnated in; āyar kulattiṉil the cowherd tribe; ŏṉṉār tal̤ara and made His enemies tremble; uraikka vallār thos who recite these verses; makkal̤ai pĕṟuvarkal̤e will beget children; tāl̤ paṇiyum who will worship the holy feet of; māyaṉ maṇi vaṇṇaṉ Lord Kannan