PAT 1.7.3

இருடீகேசன்

88 மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய் *
பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும் *
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்தினில்காறையொடும் *
தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ.
88 miṉṉuk kŏṭiyum or vĕṇ tiṅkal̤um * cūzh pariveṭamumāyp *
piṉṉal tulaṅkum aracilaiyum * pītakac ciṟṟāṭaiyŏṭum **
miṉṉil pŏlinta or kārmukil polak * kazhuttiṉil kāṟaiyŏṭum *
taṉṉil pŏlinta iruṭikecaṉ * tal̤arnaṭai naṭavāṉo (3)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

88. He, Rishikesā, the bright one, wears a chain that shines like lightning, his waist is decorated with an arasilai ornament that shines like the white moon, he wears a silk dress and his dark cloud-like neck is adorned with the bright golden karai ornament that shines like lightning. He looks beautiful. Won’t He toddle?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னுக் கொடியும் மின்னல் கொடியும்; ஓர் வெண் திங்களும் வெண்மையான சந்திரனும்; சூழ் பரிவேடமுமாய் சுத்தி இருக்ககூடிய ஒளியும்; பின்னல் இடுப்பில் பொற்பின்னலும் அரசிலை ஆபரணமும்; துலங்கும் பளிச்சிடும்; பீதக பீதாம்பரம் என்னும்; சிற்றாடையொடும் சிறிய வஸ்திரமும்; மின்னில் பொலிந்தது மின்னலின் பொலிவுக்கு; ஓர் கார்முகில் போல ஒத்த காளமேகம் போல; கழுத்தினில் கழுத்திலணிந்த; காறையொடும் காறையென்னும் ஆபரணத்தோடும் கூடிய; தன்னில் தன் இயற்கை அழகாலேயே; பொலிந்த விளங்குகிற; இருடீகேசன் இருஷீகேசன்; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
miṉṉuk kŏṭiyum the lightening; or vĕṇ tiṅkal̤um and the white moon; cūḻ pariveṭamumāy with the bright light that exists around; tulaṅkum who is sporting; ciṟṟāṭaiyŏṭum a small garment; pītaka called peethamparam (a type of attire); piṉṉal along with arasilai ornament that decorates Kannan's waist; iruṭīkecaṉ Rishikesā (another name for Krishna); pŏlinta known; taṉṉil for His natural beauty; kāṟaiyŏṭum wears a karai ornament; kaḻuttiṉil around His neck; or kārmukil pola that looks like dark cloud which matches; miṉṉil pŏlintatu the luster of the lightening; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!