முன்னலோர் வெள்ளிப் பெரு மலை குட்டன் மோடு மோடு விரைந்தோடே பின்னை தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல் பன்னி உலகம் பரவி யோவாப் புகழ் பல தேவன் என்னும் தன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ -1 7-5 –
பதவுரை
முன்–முன்னே நல்–அழகிய ஓர்–ஒப்பற்ற வெள்ளி பெருமலை–பெரிய வெள்ளி மலை பெற்ற குட்டன்–குட்டி மொடு மொடு–திடு திடென்று விரைந்து–வேகங்கொண்டு ஓட–ஓடிக்