PAT 1.7.10

செங்கண்மால் கேசவன்

95 திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் * தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர *
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் * சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ.
95 tirai nīrc cantira maṇṭalam pola * cĕṅkaṇmāl kecavaṉ * taṉ
tiru nīr mukattut tulaṅku cuṭṭi * tikazhntu ĕṅkum puṭaipĕyara **
pĕru nīrt tirai ĕzhu kaṅkaiyilum * pĕriyator tīrtta palam
taru nīr * ciṟuccaṇṇam tul̤l̤am corat * tal̤arnaṭai naṭavāṉo (10)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

95. When Kesavan with beautiful eyes that shine on his moon-like face, toddles, his chutti ornament glitters and swings like the shadow of the moon in rippling water. The small drops of saliva dripping from his mouth give boons to his devotees even more than the water of the Ganges that showers drops from its rolling waves. Won’t he toddle?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரை நீர் அலை வீசும் கடலின் நடுவில்தோன்றிய; செங்கண்மால் சிவந்த கண்களையுடைய கேசவன்; சந்திர மண்டலம் போல் சந்திர மண்டலம் போல்; தன் திரு நீர் முகத்து தன் அழகிய முகத்திலே; துலங்கு சுட்டி விளங்குகின்ற சுட்டியானது; திகழ்ந்து எங்கும் எல்லாவிடத்திலும் பிரகாசித்திட; புடைபெயர இங்குமங்கும் ஆடவும்; பெரு நீர்த் சிறந்த தீர்த்தமாகிய; திரை எழு அலைகள் எழும்பும்; கங்கையிலும் கங்கையை விட; பெரியதோர் தீர்த்த பலம் அதிக தீர்த்த பலம்; தரு நீர் தரும் நீர்; சிறுச்சண்ணம் சிறிய சண்ண நீர்; துள்ளம் சோர துளிகளாகச் சொட்டவும்; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
tirai nīr appeared in the midst of the sea with waves; cĕṅkaṇmāl Lord Krishna, the One with red eyes; cantira maṇṭalam pol that shines like a moon; taṉ tiru nīr mukattu in His beautiful face; tulaṅku cuṭṭi the chutti ornament of His forehead; puṭaipĕyara dances here and there; tikaḻntu ĕṅkum and is radiant in every direction; ciṟuccaṇṇam the saliva; tul̤l̤am cora that drips from His mouth; taru nīr gives; pĕriyator tīrtta palam greater sancitity; kaṅkaiyilum more than Ganges; pĕru nīrt the most scared water body; tirai ĕḻu with waves rising; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!