PAT 1.7.4

என் திரு மார்வன்

89 கன்னல்குடம்திறந்தாலொத்தூறிக் கணகணசிரித்துவந்து *
முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன் *
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான் *
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ.
89 kaṉṉal kuṭam tiṟantāl ŏttu ūṟik * kaṇakaṇa cirittu uvantu *
muṉ vantu niṉṟu muttam tarum * ĕṉ mukilvaṇṇaṉ tirumārvaṉ **
taṉṉaip pĕṟṟeṟkut taṉvāy amutam tantu * ĕṉṉait tal̤irppikkiṉṟāṉ *
taṉ ĕṟṟu māṟṟalar talaikal̤ mīte * tal̤arnaṭai naṭavāṉo (4)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

89. Like the sugarcane juice that drips through the holes of a pot, from His mouth drips saliva, as he laughs aloud. He is the One who always keeps Lakshmi on His chest. He, the dark-hued Lord, kisses me, who begot Him, with the nectar from His mouth. Won’t He toddle on his enemies’ heads and conquer them?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கன்னற் குடம் கரும்பு ரஸ குடத்தில்; திறந்தால் பொத்தல் விழுந்தால் சாறு பொழிவதைப் போல; ஒத்து ஊறி வாயிலிருந்து நீர் சுரந்து வடிய; கணகண சிரித்து கலகலவென்று சிரித்து; உவந்து மகிழ்ந்து; முன்வந்து நின்று என் முன்னே வந்து நின்று; முத்தம் தரும் என் எனக்கு முத்தம் கொடுக்கும்; முகில்வண்ணன் மேகம் போன்ற கருத்த நிறத்தன்; திருமார்வன் மஹாலக்ஷ்மியை தன் மார்பிலுடையவன்; தன்னைப் பெற்றேற்கு தன்னைப் பெற்ற எனக்கு; தன் வாய் அமுதம் தன்னுடைய அதர அமிர்தத்தை; தந்து கொடுத்து; என்னை தளிர்ப்பிக்கின்றான் என்னை மகிழ்விக்கிறான்; தன் எற்று மாற்றலர் தன்னை எதிர்க்கிற சத்ருக்களுடைய; தலைகள் மீதே தலைகளின் மேலே அடியிட்டு; தளர் நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
tiṟantāl like the juice spilling from a hole; kaṉṉaṟ kuṭam in a pot with sugarcane juice; ŏttu ūṟi the saliva drips from His mouth; kaṇakaṇa cirittu who laughs uproariously; uvantu and joyfully; muṉvantu niṉṟu He came and stood before me; muttam tarum ĕṉ and gave me a kiss; tirumārvaṉ the One with Mahalakshmi on His chest; mukilvaṇṇaṉ with the skin color of a dark coud; taṉṉaip pĕṟṟeṟku to me who is a mother to Him; tantu He gives me; taṉ vāy amutam the nectar that flows from His mouth; ĕṉṉai tal̤irppikkiṉṟāṉ and brings me joy; talaikal̤ mīte He steps on the head of; taṉ ĕṟṟu māṟṟalar the enemies who opposes Him; tal̤ar naṭai naṭavāṉo! wont He toddle!