(கீழே சாரங்க பாணி -ராமனோ இவன் இதில் வாசுதேவன் -வாசு தேவ புத்ரனோ -நந்தகோபன் குமாரன் அன்றோ )
செக்கர் இடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பறை முளைப் போல் நக்க செந்துவர் வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக அக்கு வடம் உடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன் தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர் நடை நடவானோ – 1-7 2-
பதவுரை
செக்கரிடை–செவ் வானத்திலே நுனி கொம்பில்-கொம்பின் நுனியிலே