PAT 1.7.9

திருவிக்கிரமன் வேழக்கன்று

94 வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல் *
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து *
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே *
தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ.
94 vĕṇ puzhuti mel pĕytukŏṇṭu al̤aintatu or * vezhattiṉ karuṅkaṉṟu pol *
tĕṇ puzhutiyāṭit tirivikkiramaṉ * ciṟu pukarpaṭa viyarttu **
ŏṇ potu alarkamalac ciṟukkāl uṟaittu * ŏṉṟum novāme *
taṇ potu kŏṇṭa taviciṉ mīte * tal̤arnaṭai naṭavāṉo (9)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

94. Throwing white dirt on his body, like a dark elephant calf Thrivikraman plays throwing mud on himself His body glitters with sweat drops. Won’t he toddle on the cool soft flower-covered earth without hurting his small feet that are like freshly blooming lotuses. Won’t he toddle?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெண் புழுதிமேல் வெளுத்த புழுதியை தன்மேல்; பெய்து கொண்டு படிய விட்டுக்கொண்டு; அளைந்தது அளைந்து; ஓர் வேழத்தின் ஓர் கருத்த யானையின்; கருங்கன்று போல் குட்டி போல; தெண் புழுதி ஆடி தெளிவான புழுதியிலே விளையாடிய; திரிவிக்கிரமன் திரிவிக்கிரமன்; சிறு புகர்பட பிரகாசமாகவும் சிறிது பளபளக்க; வியர்த்து வியர்த்துப் போய்; ஒண் போது அழகிய தாமரை; அலர் கமல மொக்கு விகசித்தது போன்ற; சிறுக்கால் உறைத்து சிறிய பாதங்கள் உறுத்த; ஒன்றும் நோவாமே சிறிதும் நோவாதபடி; தண் போது கொண்ட குளிர்ந்த புஷ்பங்களுடைய; தவிசின் மீதே மெத்தையின்மேலே; தளர்நடை நடவானோ! அழகிய இளம் நடை நடவானோ!
pĕytu kŏṇṭu He throws; vĕṇ puḻutimel white dirt on His body; al̤aintatu and roams; karuṅkaṉṟu pol like a baby of; or veḻattiṉ a dark elephant; tirivikkiramaṉ Tiruvikrama; tĕṇ puḻuti āṭi plays in the clear soil; viyarttu His sweat drops; ciṟu pukarpaṭa sparkels brightly; ŏṉṟum novāme without causing any pain to; ciṟukkāl uṟaittu His small feet; alar kamala that are like a blooming bud of; ŏṇ potu a beautiful lotus; taviciṉ mīte on the bed; taṇ potu kŏṇṭa of cool flowers; tal̤arnaṭai naṭavāṉo! wont He toddle!