Chapter 1

The birth of Kannan - (வண்ண மாடங்கள்)

கண்ணன் திருவவதாரம்
The birth of Kannan - (வண்ண மாடங்கள்)
At the house of Nanda Maharāj, the residents of Vrindavan are jubilantly celebrating the birth of the Supreme Lord Kannan
You can celebrate your birthday any way you want. How is Kannan's birthday celebrated! This is how those immersed in devotion and beyond act! Who is baby Kannan? Each devotee praises Him in different ways! But only one thing is certain! He alone is worthy to be praised in many ways by many!
பிறந்த நாளை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். கண்ணன் பிறந்த நாள் எப்படிக் கொண்டாடப்படுகிறது! பக்தியின் எல்லையைக் கடந்தவர்களின் செயல் இப்படித்தான் இருக்கும்! குழந்தை கண்ணன் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகக் கூறிப் புகழ்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி! பலரும் பல வகையாகப் புகழ்வதற்கு ஏற்ற தகுதியுடையவன் அவன் ஒருவனே!

(ஸ்ரீ பெரியாழ்வார் -பொங்கும் பிரிவால் –3-6- வரை அவனை தானே ரஷிக்கும் பாவனையால் சேஷத்வ பாரதந்தர்ய யாதாத்ம்ய -மங்களா சாசனம் -பண்ணிக் கொண்டே இன்றும் நித்ய திரு மஞ்சனம் -ஆழ்வார்கள் அனைவருக்கும் நித்யமாகவே நடக்கும் – பல்லாண்டு கைத்தல சேவை -முதல் இரண்டு பாசுரங்கள் -சாதிப்பார் அரையர் இதுவே

+ Read more
Verses: 13 to 22
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Removing all the sins
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 1.1.1

13 வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் *
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் *
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட *
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2)
13 ## வண்ண மாடங்கள் சூழ் * திருக்கோட்டியூர் *
கண்ணன் கேசவன் * நம்பி பிறந்தினில் (பிறந்த+இன்+இல்) **
எண்ணெய் சுண்ணம் * எதிரெதிர் தூவிட *
கண்ணன் முற்றம் * கலந்து அளறு ஆயிற்றே (1)
13 ## vaṇṇa māṭaṅkal̤ cūzh * tirukkoṭṭiyūr *
kaṇṇaṉ kecavaṉ * nampi piṟantiṉil (piṟanta+iṉ+il) **
ĕṇṇĕy cuṇṇam * ĕtirĕtir tūviṭa *
kaṇṇaṉ muṟṟam * kalantu al̤aṟu āyiṟṟe (1)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

13. Kesavan, the Almighty incarnated as Kannan, was born in Thirukkottiyur filled with beautiful palaces. All cowherds sprinkled oil and turmeric powder mixed with fragrance on each other in joy. The front yards of the houses turned muddy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வண்ண மாடங்கள் அழகிய மாடங்களால்; சூழ் சூழப்பட்ட; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரில்; கேசவன் கேசவன் என்ற பெயருடைய; நம்பி நாயகன்; கண்ணன் ஸ்ரீகிருஷ்ணன்; இன் இல் நந்தகோபனுடைய இனிய திருமாளிகையில்; பிறந்து அவதரித்து அதனால் ஆய்ப்பாடியில் உள்ளவர்கள்; எண்ணெய் எண்ணெயும்; சுண்ணம் மஞ்சள் பொடியையும்; எதிரெதிர் ஒருவருக்கொருவர்; தூவிட எதிர்த்துத் தூவ; கண் நல் முற்றம் விசாலமான விக்ஷணாமான முற்றம்; கலந்து எண்ணெயும் மஞ்சள் பொடியையும் சேர்த்து; அளறு ஆயிற்றே சேறாகி விட்டது
iṉ il in the delightful divine abode of Nandagopan; nampi Lord; kaṇṇaṉ Sri Krishna; kecavaṉ named as Kesavan; tirukkoṭṭiyūr in Thirukkottiyoor; cūḻ filled with; vaṇṇa māṭaṅkal̤ Beautiful palaces; piṟantu incarnated, hence people at Āyarpādi; tūviṭa threw; ĕṇṇĕy oil and; cuṇṇam turmeric powder; ĕtirĕtir among each other; kalantu mixed with oil and turmeric powder; kaṇ nal muṟṟam expansive and beautiful yard; al̤aṟu āyiṟṟe turned muddy

PAT 1.1.2

14 ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் *
நாடுவார்நம்பிரான் எங்குற்றானென்பார் *
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று *
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.
14 ஓடுவார் விழுவார் * உகந்து ஆலிப்பார் *
நாடுவார் நம்பிரான் * எங்குற்றான் என்பார் **
பாடுவார்களும் * பல்பறை கொட்ட நின்று *
ஆடுவார்களும் * ஆயிற்று ஆய்ப்பாடியே (2)
14 oṭuvār vizhuvār * ukantu ālippār *
nāṭuvār nampirāṉ * ĕṅkuṟṟāṉ ĕṉpār **
pāṭuvārkal̤um * palpaṟai kŏṭṭa niṉṟu *
āṭuvārkal̤um * āyiṟṟu āyppāṭiye (2)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

14. (Thirukkottiyur) On hearing the birth of the divine child, The cowherds ran, fell to the ground and shouted in great joy. They searched for the baby and asked everyone, “Where is our dear Kannan?” They beat the drums, sang, danced and joy spread everywhere at Gokulam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஆய்ப்பாடி திருவாய்பாடியானது; ஓடுவார் ஓடுவார்களும்; விழுவார் சேற்றிலே வழுக்கி விழுபவர்களும்; உகந்து ஆலிப்பார் மகிழ்ந்து கோஷிப்பார்களும்; நாடுவார் பிள்ளையைத் தேடுவார்களும்; நம்பிரான் நம்முடைய கண்ணன்; எங்குத்தான் எங்கே தான்; என்பார் இருக்கிறான் என்பாரும்; பாடுவார்களும் பாடுபவர்களும்; பல்பறை பல வித வாத்தியங்கள்; கொட்ட முழங்க; நின்று அதற்கு ஏற்ப; ஆடுவார்களும் கூத்தாடுவாருமாக; ஆயிற்று ஆயிற்று
āyppāṭi Āyarpādi residents; oṭuvār ran and; viḻuvār some fell on wet mud; ukantu ālippār rejoiced and expressed happiness; nāṭuvār they searched for the newborn child; ĕṉpār they ask; ĕṅkuttāṉ where is; nampirāṉ our Krishna; pāṭuvārkal̤um some sang; kŏṭṭa some played; palpaṟai many different types of musical instruments; āyiṟṟu some; āṭuvārkal̤um danced; niṉṟu to the tunes

PAT 1.1.3

15 பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில் *
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார் *
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் * திரு
வோணத்தான் உலகாளுமென்பார்களே.
15 பேணிச் சீர் உடைப் * பிள்ளை பிறந்தினில் *
காணத் தாம் புகுவார் * புக்குப் போதுவார் **
ஆண் ஒப்பார் * இவன் நேர் இல்லை காண் *
திருவோணத்தான் * உலகு ஆளும் என்பார்களே (3)
15 peṇic cīr uṭaip * pil̤l̤ai piṟantiṉil *
kāṇat tām pukuvār * pukkup potuvār **
āṇ ŏppār * ivaṉ ner illai kāṇ *
tiruvoṇattāṉ * ulaku āl̤um ĕṉpārkal̤e (3)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

15. (Thirukkottiyur) On the birth of the glorious child protected from evil forces, cowherds entered with love into Yashodā’s house. Those who thronged said, "Among all men, He is incomparable! His birth star is Thiruvonam and He will rule the world. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
சீருடை நற்குணம் மிக்க; பிள்ளை பிள்ளை கிருஷ்ணன்; பேணி கம்சன் கண் படாதபடி; பிறந்தினில் பிறந்தவனைக் காத்து வந்ததால்; தாம் ஆய்ப்பாடி ஆயர்கள்; காண பிள்ளையைக்காண ஆசைப்பட்டு; புகுவார் உள்ளே நுழைவாரும்; புக்கு உள்ளேபோய் பார்த்து; போதுவார் திரும்புவாரும்; ஆணொப்பார் இவன் இவனுக்கு ஈடான ஆண்; நேர் இல்லை காண் யாரும் இல்லை; திரு வோணத்தான் திருவோணத்தில் அவதரித்தவன்; உலகு ஆளும் உலகங்களையெல்லாம் ஆள்வான்; என்பார்களே என்று சொல்லலானார்கள்
pil̤l̤ai Krishna; cīruṭai Who has abundance of virtues; piṟantiṉil the newborn child was protected; peṇi from Kamsan; tām devoted cowherd tribe; kāṇa to see the child; pukuvār entered mother Yashodā’s house; pukku went in and saw; potuvār and came out with the feeling; āṇŏppār that He is incomparable among men; ner illai kāṇ and no one is there to match Him; ĕṉpārkal̤e they proclaim; tiru voṇattāṉ that He who incarnated on Thiruvonam; ulaku āl̤um will rule the world

PAT 1.1.4

16 உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார் *
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார் *
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து * எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே.
16 உறியை முற்றத்து * உருட்டி நின்று ஆடுவார் *
நறுநெய் பால் தயிர் * நன்றாகத் தூவுவார் **
செறி மென் கூந்தல் * அவிழத் திளைத்து *
எங்கும் அறிவு அழிந்தனர் * ஆய்ப்பாடி ஆயரே (4)
16 uṟiyai muṟṟattu * uruṭṭi niṉṟu āṭuvār *
naṟunĕy pāl tayir * naṉṟākat tūvuvār **
cĕṟi mĕṉ kūntal * avizhat til̤aittu *
ĕṅkum aṟivu azhintaṉar * āyppāṭi āyare (4)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

16. (Thirukkottiyur) The women of Aipādi, Mathura took the uri, rolled the pots in front of their houses and danced. The fragrant ghee, milk and yogurt spilled all over and they were filled with frenzied joy and their thick soft hair became loose.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஆய்ப்பாடி ஆயர் ஆய்ப்பாடியிலுள்ள கோபர்கள்; உறியை உறிகளை; முற்றத்து உருட்டி நின்று முற்றத்தில் உருட்டிவிட்டு; ஆடுவார் கூத்தாடுபவரானார்கள்; நறுநெய் மணமிக்க நெய்; பால் தயிர் பால் தயிர் முதலியவற்றை; நன்றாக தாராளமாகத்; தூவுவார் தானம் அளிப்பவரானார்கள்; செறிமென் நெருங்கி மெத்தென்று படிந்திருக்கிற; கூந்தல் தலைமுடி; அவிழத் அவிழ்ந்து கலையும்படியாக; திளைத்து நாட்டியமாடி; எங்கும் ஆயர்பாடி முழுதும்; அறிவு அழிந்தனர் உன்மத்தமானார்கள்
āyppāṭi āyar women in the cowherd tribe; uṟiyai took the uri; muṟṟattu uruṭṭi niṉṟu and rolled the pots; āṭuvār started to dance; naṟunĕy sweet-smelling ghee; pāl tayir milk, curd, etc; naṉṟāka abundantly; tūvuvār spilt over; cĕṟimĕṉ their dense and soft; kūntal hair; aviḻat became loose and scattered; til̤aittu danced; aṟivu aḻintaṉar they lost their mind in frenzy; ĕṅkum in the entire Aiyarpadi

PAT 1.1.5

17 கொண்டதாளுறி கோலக்கொடுமழு *
தண்டினர் பறியோலைச்சயனத்தர் *
விண்டமுல்லை அரும்பன்னபல்லினர் *
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.
17 கொண்ட தாள் உறி * கோலக் கொடுமழுத்
தண்டினர் * பறியோலைச் சயனத்தர் **
விண்ட முல்லை * அரும்பு அன்ன பல்லினர் *
அண்டர் மிண்டிப் * புகுந்து நெய்யாடினார் (5)
17 kŏṇṭa tāl̤ uṟi * kolak kŏṭumazhut
taṇṭiṉar * paṟiyolaic cayaṉattar **
viṇṭa mullai * arumpu aṉṉa palliṉar *
aṇṭar miṇṭip * pukuntu nĕyyāṭiṉār (5)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

17. (Thirukkottiyur) The cowherds have tightly woven pots, sharp mazhu weapons. They hold staffs for grazing the cows and beds made from filaments of screw-pine flowers to lie on. Their teeth glitter like blossoming jasmine flowers. (When they heard that the divine child was born) They joined happily together, laughed and smeared oil on themselves and embraced each other in joy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கொண்ட தாள் நெருங்கிப் பின்னப்பட்ட; உறி உறிகளையும்; கோல அழகிய; கொடு கூர்மையான; மழு மழு மற்றும்; தண்டினர் தடிகளை கொண்டவர்; பறியோலை தாழைமடல் ஓலை; சயனத்தர் படுக்கையில் சயனிப்பவராய்; விண்ட மலர்ந்த; முல்லை அரும்பு அன்ன முல்லை அரும்பு போன்ற; பல்லினர் பற்களையுடையவர்களான; அண்டர் இடையர்கள்; மிண்டிப் புகுந்து நெருங்கிப்புகுந்து; நெய்யாடினார் எண்ணெய் தேய்த்த உடலோடு தழுவினர்
taṇṭiṉar the cowherds had staffs; kŏṇṭa tāl̤ tightly woven; uṟi pots; kola beautiful; kŏṭu and sharp; maḻu mazhu weapons; cayaṉattar they sleep on beds made of; paṟiyolai filaments of screw-pine flower; palliṉar their teeth; viṇṭa blossomed; mullai arumpu aṉṉa like jasmine buds; aṇṭar the cow herds; miṇṭip pukuntu came together and; nĕyyāṭiṉār smeared oil on themselves and embraced each other

PAT 1.1.6

18 கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர் *
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் *
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட *
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே.
18 கையும் காலும் நிமிர்த்துக் * கடார நீர் *
பைய ஆட்டிப் * பசுஞ் சிறு மஞ்சளால் **
ஐய நா வழித்தாளுக்கு * அங்காந்திட *
வையம் ஏழும் கண்டாள் * பிள்ளை வாயுளே (6)
18 kaiyum kālum nimirttuk * kaṭāra nīr *
paiya āṭṭip * pacuñ ciṟu mañcal̤āl **
aiya nā vazhittāl̤ukku * aṅkāntiṭa *
vaiyam ezhum kaṇṭāl̤ * pil̤l̤ai vāyul̤e (6)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

18. (Thirukkottiyur) Yashodā, the blessed mother massaged the baby’s hands and legs and gently poured fresh turmeric water on His body from the pot and bathed Him. When she cleaned His lovely tongue, she saw all the seven worlds inside the infant's mouth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கையும் காலும் கையையும் காலையும்; நிமிர்த்துக் நிமிர்த்து; கடார நீர் கடாரத்தில் காய்ச்சின தீர்தத்திலே; பசுஞ் சிறு மஞ்சளால் சிறிய பசு மஞ்சளால்; பைய ஆட்டிப் பாங்காக நீராட்டி; ஐய நா மெல்லிய நாக்கை; வழித்தாளுக்கு வழித்த தாய்க்கு; அங்காந்திட கண்ணன் வாயைத் திறக்க; பிள்ளைவாயுளே பிள்ளையின் வாயினுள்ளே; வையம் ஏழும் ஏழுலகங்களையும்; கண்டாள் பார்த்தாள்
paiya āṭṭip mother Yashoda gave Krishna a bath; kaṭāra nīr with water boiled in a kettle; pacuñ ciṟu mañcal̤āl containing fresh turmeric; nimirttuk stretched; kaiyum kālum His hands and feet; aṅkāntiṭa when Krishna opens his mouth for His; vaḻittāl̤ukku mother to clean; aiya nā His slender tongue; kaṇṭāl̤ She saw; vaiyam eḻum all the seven worlds; pil̤l̤aivāyul̤e in the mouth of the child

PAT 1.1.7

19 வாயுள்வையகம்கண்ட மடநல்லார் *
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் *
பாயசீருடைப் பண்புடைப்பாலகன் *
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.
19 வாயுள் வையகம் கண்ட * மடநல்லார் *
ஆயர் புத்திரன் அல்லன் * அருந்தெய்வம் **
பாய சீர் உடைப் * பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று * மகிழ்ந்தனர் மாதரே (7)
19 vāyul̤ vaiyakam kaṇṭa * maṭanallār *
āyar puttiraṉ allaṉ * aruntĕyvam **
pāya cīr uṭaip * paṇpu uṭaip pālakaṉ
māyaṉ ĕṉṟu * makizhntaṉar mātare (7)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

19. (Thirukkottiyur) The virtuous women who saw the world in the baby's mouth, were amazed. They praised him, saying, “He is not a cowherd. He is the supreme lord, an epitome of virtues, accessible to all, a wonderful child - really the Māyan!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வாயுள் பிள்ளையின் வாயினுள்ளே; வையகம் கண்ட உலகங்களைப்பார்த்த; மடநல்லார் குணவதிகளான; மாதர் கோபிகைகள்; ஆயர் புத்திரன் இவன் கோபகுமாரன்; அல்லன் அல்லன்; அருந்தெய்வம் பெறுதற்கரிய தெய்வம்; பாய சீர் உடை பரம்பின புகழையுடையவனும்; பண்பு உடை எளிமையான குணமுடையவனும்; பாலகன் (இந்த) சிறுப்பிள்ளையானவன்; மாயன் ஆச்சர்யமான எம்பெருமான்; என்று என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக்கொண்டு; மகிழ்ந்தனர் ஆனந்தித்தார்கள்
maṭanallār the virtuous; mātar gopikas; vaiyakam kaṇṭa who saw the worlds; vāyul̤ within the child’s mouth; allaṉ realized that He is not; āyar puttiraṉ the prince of the cowherd tribe; aruntĕyvam but the gracious Lord; pāya cīr uṭai an epitome of virtues; paṇpu uṭai at the same time very accessible; pālakaṉ and they rejoiced

PAT 1.1.8

20 பத்துநாளும்கடந்த இரண்டாநாள் *
எத்திசையும் சயமரம்கோடித்து *
மத்தமாமலை தாங்கியமைந்தனை *
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே.
20 பத்து நாளும் கடந்த * இரண்டாம் நாள் *
எத் திசையும் * சயமரம் கோடித்து **
மத்த மா மலை * தாங்கிய மைந்தனை *
உத்தானம் செய்து * உகந்தனர் ஆயரே (8)
20 pattu nāl̤um kaṭanta * iraṇṭām nāl̤ *
ĕt ticaiyum * cayamaram koṭittu **
matta mā malai * tāṅkiya maintaṉai *
uttāṉam cĕytu * ukantaṉar āyare (8)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

20. (Thirukkottiyur) On the twelfth day of the birth, the cowherds planted poles of victory in all directions. They carried the baby, the one who held the mountain with elephants (Govardhanāgiri) in his finger and they rejoiced.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பத்து நாளும் கடந்த பத்து நாளும் கடந்த; இரண்டாம் நாள் பன்னிரண்டாம் நாள் நாமகர்ண தினத்திலே; எத் திசையும் எல்லா திசைகளிலும்; சயமரம் ஜய சூசகமான தோரணங்களைக்; கோடித்து கட்டி அலங்கரித்து; மத்தமா மலை யானைகள் உள்ள மலையைத்; தாங்கிய மைந்தனை தூக்கிய பிரானை; ஆயர் உத்தானம் செய்து ஆயர்கள் கையில் வைத்து; உகந்தனர் மகிழ்ந்தனர்
pattu nāl̤um kaṭanta ten days have passed; iraṇṭām nāl̤ and on the twelfth Naamakarana day; cayamaram victory poles; koṭittu were planted; ĕt ticaiyum in all directions; āyar uttāṉam cĕytu placed Him on their hands; tāṅkiya maintaṉai the One who lifted; mattamā malai the mountain with elephants (Govardhanāgiri); ukantaṉar and the cowherds rejoiced

PAT 1.1.9

21 கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும் *
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும் *
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும் *
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்.
21 கிடக்கில் தொட்டில் * கிழிய உதைத்திடும் *
எடுத்துக் கொள்ளில் * மருங்கை இறுத்திடும் **
ஒடுக்கிப் புல்கில் * உதரத்தே பாய்ந்திடும் *
மிடுக்கு இலாமையால் * நான் மெலிந்தேன் நங்காய் (9)
21 kiṭakkil tŏṭṭil * kizhiya utaittiṭum *
ĕṭuttuk kŏl̤l̤il * maruṅkai iṟuttiṭum **
ŏṭukkip pulkil * utaratte pāyntiṭum *
miṭukku ilāmaiyāl * nāṉ mĕlinteṉ naṅkāy (9)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

21. (Thirukkottiyur) Yashodā sighed, “If I put Him in the cradle, He kicks and tears the cloth. If I hold Him in my hands, He hurts my waist. If I embrace Him tightly, He kicks my stomach. I lack the strength anymore to manage Him. I am tired, my friends!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நங்காய்! ஸ்தீரிகளே!; கிடக்கில் தொட்டிலில் கிடக்கையில்; தொட்டில் கிழிய தொட்டில் சிதிலமாகும்படி; உதைத்திடும் உதைக்கிறான்; எடுத்துக் கொள்ளில் இடுப்பில் எடுத்துக்கொண்டால்; மருங்கை இறுத்திடும் இடுப்பை முறிக்கிறான்; ஒடுக்கிப் கைகால்களைகட்டி பிடித்து; புல்கில் மார்பில் அணைத்துக்கொண்டால்; உதரத்தே வயிற்றில்; பாய்ந்திடும் பாய்கிறான்; மிடுக்கு இச்சேஷ்டைகளைப் பொறுக்கும் சக்தி; இலாமையால் இவனுக்கு இல்லாமையால் அதை எண்ணி; நான் மெலிந்தேன் நான் மிகவும் இளைத்துப்போனேன்
naṅkāy! oh women!; kiṭakkil while in the cradle; utaittiṭum He kicks; tŏṭṭil kiḻiya and breaks the cradle; ĕṭuttuk kŏl̤l̤il when carried in the waist; maruṅkai iṟuttiṭum He hurts my waist; pulkil if I embrance Him tightly by my chest; ŏṭukkip by holding His hands and legs; pāyntiṭum He jumps and kicks; utaratte my belly; nāṉ mĕlinteṉ I am tired when; ilāmaiyāl I think about my inability to; miṭukku handle His naughtiness

PAT 1.1.10

22 செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர் *
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை *
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த * இப்
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2)
22 ## செந்நெல் ஆர் வயல் சூழ் * திருக்கோட்டியூர் *
மன்னு நாரணன் * நம்பி பிறந்தமை **
மின்னு நூல் * விட்டுசித்தன் விரித்த *
இப் பன்னு பாடல் வல்லார்க்கு * இல்லை பாவமே (10)
22 ## cĕnnĕl ār vayal cūzh * tirukkoṭṭiyūr *
maṉṉu nāraṇaṉ * nampi piṟantamai **
miṉṉu nūl * viṭṭucittaṉ viritta *
ip paṉṉu pāṭal vallārkku * illai pāvame (10)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

22. Vishnuchithan, wearing a shining sacred thread, composed hymns (pāsurams) that describe the birth of omnipresent Nārāyanan, Purushothaman of Thirukkottiyur, surrounded by flourishing paddy fields. Those who recite these pāsurams will be absolved of their sins.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
செந்நெல் செந்நெல் தானியம்; ஆர் வயல் நிறைந்திருக்கிற கழனிகளால்; சூழ் சூழப்பட்ட; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரிலே; மன்னு நித்யவாஸம் பண்ணுகிற; நாரணன் நாராயணன்; நம்பி பிரான்; பிறந்தமை அவதரித்த பிரகாரத்தை; மின்னு நூல் பூணூலையுடைய; விட்டுசித்தன் பெரியாழ்வார்; விரித்த விரித்துரைத்த; இப்பன்னு பாடல் இப்பாசுரங்களை; வல்லார்க்கு கற்றவர்களுக்கு; பாவம் இல்லை பாபம் இல்லாது போகும்
viṭṭucittaṉ Periyāzhvār, who; miṉṉu nūl wears the sacred third; viritta expounded; ippaṉṉu pāṭal these pasurams; piṟantamai that describes the birth of; nampi Lord; nāraṇaṉ Narayana; maṉṉu who dwells eternally; tirukkoṭṭiyūr in Thirukkottiyur; cūḻ that is surrounded; ār vayal by fields of; cĕnnĕl red paddy; vallārkku those who learn them; pāvam illai will be absolved of their sins