Kaṇṇiṇuṇchiṛuthāmbu

கண்ணிநுண்சிறுத்தாம்பு

Kaṇṇiṇuṇchiṛuthāmbu
The author of this Prabandham, Madhurakavi āzhvār, is like the dawn that appears before the sunrise, which is Nammazhvar. During the time when Lord Krishna, who incarnated for the sake of devotees, was present in this world, Madhurakavi āzhvār did not follow Krishna but instead embraced the divine feet of Nammazhvar, who explained the deeper meanings + Read more
இந்தப் பிரபந்தத்தின் கர்த்தாவாகிய மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் என்னும் சூரியன் உதயமாவதற்கு முன் தோன்றிய அருணோதயம் ஆவார். பக்தர்களுக்காகவே அவதாரம் செய்த ஸ்ரீ கிருஷ்ணன், பூவுலகில் விபவத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில், அவரை விட்டுவிட்டு, எளிதில் பொருள் அறிய முடியாத வேதத்தின் உட்பொருளை + Read more
Group: 1st 1000
Verses: 937 to 947
Glorification: Namm Āzhvār (நம்மாழ்வார்)
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

KCT 1

937 கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணியபெருமாயன் * என்னப்பனில் *
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் *
அண்ணிக்கும்அமுதூறும் என்னாவுக்கே. (2)
937 ## கண்ணி நுண் சிறுத் தாம்பினால் * கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் * என் அப்பனில் **
நண்ணித் தென் குருகூர் * நம்பி என்றக்கால் *
அண்ணிக்கும் அமுது ஊறும் * என் நாவுக்கே (1)
937 ## kaṇṇi nuṇ ciṟut tāmpiṉāl * kaṭṭu uṇṇap
paṇṇiya pĕru māyaṉ * ĕṉ appaṉil **
naṇṇit tĕṉ kurukūr * nampi ĕṉṟakkāl *
aṇṇikkum amutu ūṟum * ĕṉ nāvukke (1)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 8-22, 11-54, 18-55

Simple Translation

937. I praise the god, the divine Māyan, my father, who (damodara) was tied by Yashodā with a small rope. If I approach the place where the Nambi of south Kuruhur stays and say his name, nectar will spring from my tongue.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணி நுண் பல முடிச்சுக்களையுடைய நுண்ணிய; சிறு தாம்பினால் சிறிய கயிற்றினால்; கட்டு உண்ண யசோதை தன்னைக் கட்டும்படி; பண்ணிய பெரு செய்து கொண்ட பெரிய; மாயன் மாயனான; என் அப்பனில் என் கண்ணனை விட்டு; நண்ணி நெருங்கிய; தென் குருகூர் தென் குருகூர் நம்பியாகிய; நம்பி நம்மாழ்வார்; என்றக்கால் என்று சொன்ன அந்த கணமே; என் நாவுக்கே தாழ்ந்த என் ஒருவனுடைய நாவுக்கே; அண்ணிக்கும் மிக இனிதாயிருக்கும்; அமுது ஊறும் அம்ருதம் ஊறும்
kaṇṇi rough surfaced (which will hurt the body when tied around); nuṇ sūkshma (thin – that will blend into the body); chiṛu small (that is not sufficient in length); thāmbināl with the string/rope; kattuṇṇap paṇṇiya one who facilitated mother yasŏdhā to tie him; peru māyan one who has wonderful abilities; en appanil leaving behind my master who is the sarvĕsvaran (supreme lord); naṇṇi approached (āzhvār) and taking shelter of him; then kurukūr nambi enṛakkāl while reciting the name of nammāzhvār who is the leader of kurukūr (āzhvārthirunagari) which is in the south side (of bhāratha dhĕsam); aṇṇikkum it is very sweet; en nāvukkĕ only for my tongue; amuthūṛum it will be nectarean

KCT 2

938 நாவினால்நவிற்று இன்பமெய்தினேன் *
மேவினேன் அவன்பொன்னடிமெய்ம்மையே *
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி *
பாவினின்னிசை பாடித்திரிவனே.
938 நாவினால் நவிற்று * இன்பம் எய்தினேன் *
மேவினேன் * அவன் பொன்னடி மெய்ம்மையே **
தேவு மற்று அறியேன் * குருகூர் நம்பி *
பாவின் இன்னிசை * பாடித் திரிவனே (2)
938 nāviṉāl naviṟṟu * iṉpam ĕytiṉeṉ *
meviṉeṉ * avaṉ pŏṉṉaṭi mĕymmaiye **
tevu maṟṟu aṟiyeṉ * kurukūr nampi *
pāviṉ iṉṉicai * pāṭit tirivaṉe (2)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

938. I praise him with my tongue and relish it. I yearn for the golden feet of Nambi of Thirukkuruhur and I know no other god but Nambi of Thirukuruhur. I wander and sing sweet songs about him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாவினால் நாவினால் நம்மாழ்வாரை; நவிற்று தோத்திரம் பண்ணி; இன்பம் ஆனந்தம்; எய்தினேன் அடைந்தேன்; அவன் ஆழ்வாருடைய; பொன்னடி அழகிய பொன் போன்ற திருவடிகளை; மெய்ம்மையே! உண்மையாகவே; மேவினேன் இறைஞ்சினேன்; தேவு ஆழ்வாரையன்றி தெய்வம்; மற்று வேறொன்று; அறியேன் அறியமாட்டேன்; குருகூர் திருநகரியிலிருக்கும்; நம்பி அவ்வாழ்வாருடைய; பாவின் பாசுரங்களின்; இன்னிசை இனிய இசையையே; பாடித் திரிவனே பாடித் திரிவேன்
nāvināl with my tongue; naviṝu reciting; inbam joy; eythinĕn attained; mĕvinĕn fully surrendered; avan his; ponnadi golden feet; meymmaiyĕ truly/eternally; dhĕvu ṅod; māṝaṛiyĕn do not know any other; kurukūr nambi leader of āzhvārthirunagari (thirukkurukūr) who is filled with auspicious qualities; pāvin pāsurams, songs; innisai sweet music; pādi singing along; thiruvanĕ roam around

KCT 3

939 திரிதந்தாகிலும் தேவபிரானுடை *
கரியகோலத் திருவுருக்காண்பன்நான் *
பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கா
ளுரியனாய் * அடியேன்பெற்ற நன்மையே.
939 திரிதந்து ஆகிலும் * தேவபிரான் உடை *
கரிய கோலத் * திருவுருக் காண்பன் நான் **
பெரிய வண் குருகூர் * நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் * அடியேன் பெற்ற நன்மையே (3)
939 tiritantu ākilum * tevapirāṉ uṭai *
kariya kolat * tiruvuruk kāṇpaṉ nāṉ **
pĕriya vaṇ kurukūr * nakar nampikku āl̤
uriyaṉāy * aṭiyeṉ pĕṟṟa naṉmaiye (3)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

939. Even if I have to wander all over, I will go to rich Thirukkuruhur and see the dark, beautiful form of the divine god. If I go there and become a devotee of Nambi that will be the most wonderful thing I could ever have.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரிதந்து ஆழ்வாரை விட்டு; ஆகிலும் அகலும்படி நேரிட்டாலும்; தேவபிரான் உடை எம்பெருமானுடைய; கரிய கோல நீலமேகம்போன்ற கறுத்த; திருவுரு திருமேனியை; காண்பன் நான் நான் வணங்குவேன்; பெரிய வண் பெருமையுடைய; குருகூர் நகர் குருகூர் நகரில் இருக்கும்; நம்பிக்கு ஆழ்வாருடைய; ஆள் உரியனாய் தாஸனாயிருக்கும் பேறு; பெற்ற பெற்றதே; அடியேன் நன்மையே என்னுடைய பாக்யம்
thirithanthāgilum even if ī slipped (giving up nammāzhvār); dhĕvapirānudai emperumān who is the master of nithyasūris; kariya blackish (like clouds); kŏlam beautiful; thiruvuru divine form; nān kāṇban ī will see (worship); periya vaṇ kurukūr nambikku to nammāzhvār who is born in āzhvārthirunagari that is great and magnanimous; uriya āl̤ āy being true servitor for him alone; adiyĕn peṝa nanmai please see the benediction ī have received

KCT 4

940 நன்மையால்மிக்க நான்மறையாளர்கள் *
புன்மையாகக் கருதுவராதலின் *
அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும்
தன்மையான் * சடகோப னென்நம்பியே.
940 நன்மையால் மிக்க * நான்மறையாளர்கள் *
புன்மை ஆகக் * கருதுவர் ஆதலில் **
அன்னையாய் அத்தனாய் * என்னை ஆண்டிடும்
தன்மையான் * சடகோபன் என் நம்பியே (4)
940 naṉmaiyāl mikka * nāṉmaṟaiyāl̤arkal̤ *
puṉmai ākak * karutuvar ātalil **
aṉṉaiyāy attaṉāy * ĕṉṉai āṇṭiṭum
taṉmaiyāṉ * caṭakopaṉ ĕṉ nampiye (4)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-17, 9-30

Simple Translation

940. The excellent, orthodox Vediyars skilled in the four Vedās do not think I am a good person, but Sadagopan Nambi accepts me and he is my mother, my chief and my ruler.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நன்மையால் மிக்க நற்குணங்கள் நிறைந்த; நான்மறையாளர்கள் வேதங்களை அறிந்த வைதிகர்கள்; புன்மை ஆக என்னைத் தாழ்ந்தவனாக; கருதுவர் ஆதலின் கருதுவார்கள் ஆகையால்; அன்னையாய் அத்தனாய் தாயாகவும் தந்தையாகவும்; என்னை ஆண்டிடும் என்னை ஆளும்; தன்மையான் நற்குணங்களுடைய; சடகோபன் நம்மாழ்வாரையே; என் நம்பியே என் தலைவராக நான் ஏற்கிறேன்
nanmaiyāl mikka filled with virtues; nāl maṛai āl̤argal̤ vaidhikas who are experts in the 4 vĕdhams; ennai me (this dhāsa/servitor); punmai āga karuthuvar āthalil ignoring me due to me being an embodiment of lowly qualities; annai āy being a mother; aththan āy being a father; ennai āṇdidum thanmaiyān having the quality of accepting me as his servitor; satakŏpan nammāzhvār; en nambi my master

KCT 5

941 நம்பினேன் பிறர்நன்பொருள்தன்னையும் *
நம்பினேன் மடவாரையும்முன்னெல்லாம் *
செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்
கன்பனாய் * அடியேன் சதிர்த்தேனின்றே.
941 நம்பினேன் * பிறர் நன்பொருள் தன்னையும் *
நம்பினேன் * மடவாரையும் முன் எலாம் **
செம்பொன் மாடத் * திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் * அடியேன் சதிர்த்தேன் இன்றே (5)
941 nampiṉeṉ * piṟar naṉpŏrul̤ taṉṉaiyum *
nampiṉeṉ * maṭavāraiyum muṉ ĕlām **
cĕmpŏṉ māṭat * tiruk kurukūr nampikku
aṉpaṉāy * aṭiyeṉ catirtteṉ iṉṟe (5)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

941. Before, I believed in the wealth of others and beautiful women, but today I have become a friend and devotee of Nambi of Thirukkuruhur, filled with pure golden palaces, and I dance there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியேன் அடியேன் என்ற பணிவைப் பெற்ற நான்; முன் எலாம் முன்பெல்லாம்; பிறர் மற்றவர்கள் தானமாக; நன்பொருள் கொடுத்த பொருள்களை; தன்னையும் நம்பினேன் விரும்பினேன்; மடவாரையும் மற்ற பெண்களையும்; நம்பினேன் நம்பினேன் ஆனால்; இன்றே இப்போதோவெனில்; செம்பொன் செம்பொன்னாலான; மாட மாடங்களையுடைய; திருக் குருகூர் குருகூர் நம்பியான; நம்பிக்கு நம்மாழ்வாருக்கு; அன்பனாய் அடியவனாய் கைங்கர்யம்; சதிர்த்தேன் செய்யும் பக்தனானேன்
adiyĕn ī (who have become reformed to call myself dhāsan/servitor); mun elām previously (before being blessed by nammāzhvār); piṛar others; nal porul̤ thannaiyum good properties/objects; nambinĕn desired (for them); (piṛar) madavāraiyum women (who are married to others); nambinĕn desired; inṛu But today; sempon mādam (having) beautiful balconies built using gold; thiru kurukūr nambikku leader of āzhvārthirunagari; anban āy become a devotee; sadhirththĕn attained greatness

KCT 6

942 இன்றுதொட்டும் எழுமையும்எம்பிரான் *
நின்றுதன்புகழ் ஏத்தவருளினான் *
குன்றமாடத் திருக்குருகூர்நம்பி *
என்றுமென்னை இகழ்விலன்காண்மினே.
942 இன்று தொட்டும் * எழுமையும் எம்பிரான் *
நின்று தன் புகழ் * ஏத்த அருளினான் **
குன்ற மாடத் * திருக் குருகூர் நம்பி *
என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே (6)
942 iṉṟu tŏṭṭum * ĕzhumaiyum ĕmpirāṉ *
niṉṟu taṉ pukazh * etta arul̤iṉāṉ **
kuṉṟa māṭat * tiruk kurukūr nampi *
ĕṉṟum ĕṉṉai * ikazhvu ilaṉ kāṇmiṉe (6)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

942. My dear god gave his grace so I could praise his fame from today for the next seven births. Nambi of Thirukkuruhur, filled with hills that look like large palaces, will not disgrace me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன்று தொட்டும் இன்று முதலாக; எழுமையும் வரும் காலங்களிலெல்லாம்; எம்பிரான் ஆழ்வார் மேலுள்ள பக்தி; நின்று நிலைக்கப்பெற்று; தன் புகழ் ஆழ்வாருடைய புகழை; ஏத்த துதிக்கும்படி; அருளினான் ஆழ்வார் அருளினார்; திருக்குருகூர் திருக்குருகூருக்கு; நம்பி தலைவரான ஆழ்வார்; என்றும் என்னை எக்காலத்திலும் என்னை; இகழ்வு இலன் இகழமாட்டார்; காண்மினே அறிவீர்கள் இது உண்மை
inṛu thottum from today; ezhumaiyum all of the future; ninṛu being faithful with full conviction; thanpugazh nammāzhvār’s greatness; ĕththa to glorify; em pirān arul̤inān my swamy (master) nammāzhvār blessed; kunṛam mādam balconies which look tall like mountains; thirukkurukūr nambi leader of āzhvārthirunagari; enṛum forever; ennai in my case; igazhvu ilan would not ignore or give up on me; kāṇmin you see for yourself

KCT 7

943 கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான் *
பண்டைவல்வினை பாற்றியருளினான் *
எண்டிசையும் அறியவியம்புகேன் *
ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.
943 கண்டு கொண்டு என்னைக் * காரிமாறப் பிரான் *
பண்டை வல் வினை * பாற்றி அருளினான் **
எண் திசையும் * அறிய இயம்புகேன் *
ஒண் தமிழ்ச் * சடகோபன் அருளையே (7)
943 kaṇṭu kŏṇṭu ĕṉṉaik * kārimāṟap pirāṉ *
paṇṭai val viṉai * pāṟṟi arul̤iṉāṉ **
ĕṇ ticaiyum * aṟiya iyampukeṉ *
ŏṇ tamizhc * caṭakopaṉ arul̤aiye (7)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

943. My chief Māran the son of Kāri accepted me and made my bad karmā go away. I will tell the people of all the eight directions of the grace I have received from Sadagopan, the wonderful Tamil poet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காரிமாறன் காரிமாறன் குமாரரான; பிரான் நம்மாவார்; என்னை என்னிடம் பேரன்பு காட்டி; கண்டு கொண்டு ஆதரித்து; பண்டை என்னிடம் இருந்த; வல்வினை கொடிய பாபங்களை; பாற்றி அழியும்படி; அருளினான் அருளினான் ஆதலால்; ஒண் தமிழ் தெள்ளிய தமிழில் பாடிய; சடகோபன் நம்மாழ்வாரின்; அருளையே கருணையை பாசுரங்களை; எண் திசையும் எட்டுத் திக்கில் உள்ளவர்களும்; அறிய அறியும்படி; இயம்புகேன் புகழ்ந்து பரப்புவேன்
pirān being parama upakāraka (one who does great favours); kāri māṛan auspicious son of poṛkāri; ennai me (who do not understand his glories); kaṇdu blessed by his divine glance/vision; koṇdu engaged me in his service; paṇdai valvinai strong sins which were following me since time immemorial; pāṝi arul̤inān mercifully drove them away; (āthalāl) oṇdamizh satakŏpan arul̤aiyĕ (thus) mercy of nammāzhvār who is the abode (source) of beautiful thamizh pāsurams (poems); eṇ dhisaiyum to the people of eight directions (everywhere); aṛiya to make them know; iyambukĕn will speak

KCT 8

944 அருள்கொண்டாடும் அடியவரின்புற *
அருளினான் அவ்வருமறையின்பொருள் *
அருள்கொண்டு ஆயிரமின்தமிழ்பாடினான் *
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே.
944 அருள் கொண்டாடும் * அடியவர் இன்புற *
அருளினான் * அவ் அரு மறையின் பொருள் **
அருள்கொண்டு * ஆயிரம் இன் தமிழ் பாடினான் *
அருள் கண்டீர் * இவ் உலகினில் மிக்கதே (8)
944 arul̤ kŏṇṭāṭum * aṭiyavar iṉpuṟa *
arul̤iṉāṉ * av aru maṟaiyiṉ pŏrul̤ **
arul̤kŏṇṭu * āyiram iṉ tamizh pāṭiṉāṉ *
arul̤ kaṇṭīr * iv ulakiṉil mikkate (8)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

944. He sang a thousand sweet Tamil pāsurams through the grace of god and described the meaning of the divine Vedās so that his devotees praise the blessings that he received from the god. His giving his blessing is the best thing in the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அருள் கடவுளின் அருளை; கொண்டாடும் கொண்டாடும்; அடியவர் இன்புற பக்தர்கள் மகிழ்ச்சியடைய; அவ் அரு அந்த அருமையான; மறையின் பொருள் வேதத்தின் உட்பொருள்களை; அருளினான் அருளிச்செய்தவராயும்; இன் தமிழ் இனிய தமிழிலே; ஆயிரம் ஆயிரம் பாசுரங்களாக; அருள் கொண்டு திருவாய்மொழியை; பாடினான் அருளிச்செய்தவராயும் ஆழ்வாருடைய; அருள் கண்டீர் கிருபை ஒன்று மாத்திரமன்றோ; இவ் உலகினில் இந்த உலகினில்; மிக்கதே நிலைத்து நிற்கிறது
arul̤ koṇdādum glorifying bhagavān’s mercy; adiyavar bhakthas – devotees; inbuṛa to relish; a aru maṛaiyin porul̤ essence of that rare (difficult to acquire/learn) vĕdham; arul̤inān he blessed; arul̤ koṇdu with great mercy; in thamizh in beautiful thamizh language; āyiram thiruvāimozhi 1000 pāsurams; pādinān compiled/sung; arul̤ kaṇdīr it is purely his mercy only; i ulaginil in this world; mikkathu is great (greater than anything else)

KCT 9

945 மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்
நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான் *
தக்கசீர்ச் சடகோபனென்நம்பிக்கு * ஆள்
புக்ககாதல் அடிமைப்பயனன்றே.
945 மிக்க வேதியர் * வேதத்தின் உட்பொருள் *
நிற்கப் பாடி * என் நெஞ்சுள் நிறுத்தினான் **
தக்க சீர்ச் * சடகோபன் என் நம்பிக்கு * ஆட்
புக்க காதல் * அடிமைப் பயன் அன்றே (9)
945 mikka vetiyar * vetattiṉ uṭpŏrul̤ *
niṟkap pāṭi * ĕṉ nĕñcul̤ niṟuttiṉāṉ **
takka cīrc * caṭakopaṉ ĕṉ nampikku * āṭ
pukka kātal * aṭimaip payaṉ aṉṟe (9)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-20

Simple Translation

945. He described the meaning of the Vedās that the best Vediyars know and recite. My chief Sadagopan praised by all made me learn the Vedās. To be his devotee and to serve him is the greatest love I can receive.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மிக்க வேதியர் சிறந்த வைதிகர்களால் ஓதப்படும்; வேதத்தின் வேதத்தினுடைய; உட் பொருள் ஆழ்ந்த விளக்கத்தை; நிற்கப் நிலைத்து நிற்கும்படி; பாடி திருவாய்மொழியைப் பாடி; என் நெஞ்சுள் என் மனதில்; நிறுத்தினான் நிலை நிறுத்தினான்; தக்க சீர்ச் தகுதியான நற்குணங்களையுடைய; சடகோபன் சடகோபனென்ற நாமத்தையுடையரான; என் நம்பிக்கு அந்த ஆழ்வாருக்கு; ஆட்புக்க காதல் கைங்கர்யம் செய்வதற்கான விருப்பம்; அன்றே அப்போதே தோன்றியது; அடிமை ஆழ்வார் திருவடிகளில்; பயன் தோன்றிய பக்தியின் பயன் கைங்கர்யமே
mikka vĕdhiyar vĕdhaththin vĕdham that is recited by best vaidhikas; ul̤ porul̤ inner-meaning i.e., essence; niṛka to firmly establish; pādi sung thiruvāimozhi; en nenjul̤ in my heart; niṛuththinān planted it firmly (the essence of vĕdham or thiruvāimozhi) out of his grace; thakkasīr with fitting qualities; satakŏpan nammāzhvār; en nambikku for him (who is such complete person); āl̤ pukka to serve him; kāthal love/desire; anṛĕ that same moment; adimaippayan materialiśed such service as the goal

KCT 10

946 பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்
செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான் *
குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி *
முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே. (2)
946 ## பயன் அன்று ஆகிலும் * பாங்கு அலர் ஆகிலும் *
செயல் நன்றாகத் * திருத்திப் பணி கொள்வான் **
குயில் நின்று ஆர் பொழில் சூழ் * குருகூர் நம்பி *
முயல்கின்றேன் * உன்தன் மொய் கழற்கு அன்பையே (10)
946 ## payaṉ aṉṟu ākilum * pāṅku alar ākilum *
cĕyal naṉṟākat * tiruttip paṇi kŏl̤vāṉ **
kuyil niṉṟu ār pŏzhil cūzh * kurukūr nampi *
muyalkiṉṟeṉ * uṉtaṉ mŏy kazhaṟku aṉpaiye (10)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

946. Nambi will accept anyone as his devotee whether or not he receives benefit from him, even if he is not his friend. The Nambi Thirukkuruhur surrounded by beautiful groves where cuckoo birds sing will change him and accept him, and keep him with him. I am striving to receive the love of Nambi, worshipping his ankleted feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பயன் அன்று பிறர் திருந்துவதால் தமக்கொரு; ஆகிலும் பயனில்லாமற் போனாலும்; பாங்கு அலர் அவர்கள் திருந்த பாங்காக; ஆகிலும் அமையாமற் போனாலும்; குயில் நின்று ஆர் குயில் கூவும்; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; குருகூர் நம்பி குருகூரிலிருக்கும் ஆழ்வாரே!; செயல் தம் செய்கையாலே; நன்றாகத் திருத்தி அவர்களை நன்றாகத் திருத்தி; பணி கொள்வான் ஆட்கொள்வான்; அவன் மொய் கழற்கு அவர் சிறந்த திருவடிகளில்; அன்பையே பக்தி ஏற்பட்டு கைங்கர்யம்; முயல்கின்றேன் செய்வதற்கே முயற்சி செய்கின்றேன்
payan anṛu āgilum though there is no personal gain (by reforming others); pāngu allar āgilum though (they are) not fit to be reformed; seyal by (his) deeds; nanṛāgath thiruththi reformed through strong instructions; paṇi kol̤vān engage (them) in service; kuyil ninṛu āl pozhil sūzh kurukūr (living in) āzhvārthirunagari which is surrounded by groves (gardens, etc) that are filled with the sounds of cuckoo; nambi! ŏh nammāzhvār!; un than your; moy kazhaṛku unto the (your) best divine feet; anbaiyĕ to develop affection only; muyalginṛĕn trying

KCT 11

947 அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன் * தென்குருகூர் நகர்நம்பிக்கு *
அன்பனாய் மதுரகவிசொன்னசொல்
நம்புவார்பதி * வைகுந்தம் காண்மினே. (2)
947 ## அன்பன் தன்னை * அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் * தென் குருகூர் நகர் நம்பிக்கு **
அன்பனாய் * மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி * வைகுந்தம் காண்மினே (11)
947 ## aṉpaṉ taṉṉai * aṭaintavarkaṭku ĕllām
aṉpaṉ * tĕṉ kurukūr nakar nampikku **
aṉpaṉāy * maturakavi cŏṉṉa cŏl
nampuvār pati * vaikuntam kāṇmiṉe (11)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

947. Nambi of south Thirukuruhur, our friend, is the friend of all who approach him. If devotees believe in Madhurakavi’s words, they will see Vaikuntam and abide there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்பன் தன்னை எம்பெருமானை; அடைந்தவர்கட்கு எல்லாம் அடைந்த பக்தர்கள் பால்; அன்பன் பகவத் பக்தியையுடையவரான; தென் குருகூர் நகர் தென் குருகூர் நகர்; நம்பிக்கு நம்மாழ்வாரிடத்தில் பக்தி உள்ளவர்களுக்கு; அன்பனாய் மதுரகவி பக்தனான மதுரகவி; சொன்ன அருளிச்செய்த; சொல் கண்ணினுற்சிறுத்தாம்பு; பதி என்னும் பிரபந்தத்தை; நம்புவார் அனுஷ்டிப்பவர்களுக்கு; வைகுந்தம் காண்மினே இருப்பிடம் வைகுந்தமே
anban thannai that emperumān who is āsritha pakshapāthi (who is partial towards his devotees); adainthavarkatku ellām to all bhāgavathas who surrendered unto him (bhagavān); anban one who is devoted; thenkurukūr nagar nambikku to nammāzhvār (who is the leader of beautiful āzhvārthirunagari); anban āy being devoted to; madhurakavi sonna sol this dhivya prabandham which is spoken by madhurakavi āzhvār; nambuvār one who is faithful (that this is their refuge); pathi residing place; vaikuntham kāṇmin (see it to be) paramapadham