Your browser does not support the audio element.
audio
291 பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும் *
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள் *
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும் *
வட்டவார்குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.
814 நன்றிருந்துயோகநீதி நண்ணுவார்கள்சிந்தையுள் *
சென்றிருந்துதீவினைகள் தீர்த்ததேவதேவனே! *
குன்றிருந்தமாடநீடு பாடகத்தும்ஊரகத்தும் *
நின்றிருந்து, வெஃகணைக்கிடந்தது என்னநீர்மையே?
815 நின்றதெந்தையூரகத்து இருந்ததெந்தைபாடகத்து *
அன்றுவெஃக ணைக்கிடந்தது என்னிலாதமுன்னெலாம் *
அன்றுநான்பிறந்திலேன் பிறந்தபின்மறந்திலேன் *
நின்றதும்இருந்ததும் கிடந்ததும்என்நெஞ்சுளே.
1541 கல்லார்மதிள்சூழ்கச்சிநகருள்நச்சிப், பாடகத்துள் *
எல்லாவுலகும்வணங்க இருந்தஅம்மான் * இலங்கைக்கோன்
வல்லாளாகம் வில்லால்முனிந்தஎந்தை * விபீடணற்கு
நல்லானுடையநாமம்சொல்லில் நமோநாராயணமே.
2275 உற்றுவணங்கித்தொழுமின் * உலகேழும்
முற்றும்விழுங்கும் முகில்வண்ணன் * - பற்றிப்
பொருந்தாதான்மார்பிடந்து பூம்பாடகத்துள்
இருந்தானை * ஏத்தும்என்நெஞ்சு.
2311 சேர்ந்ததிருமால் கடல்குடந்தைவேங்கடம்
நேர்ந்தவென்சிந்தை நிறை விசும்பும் * - வாய்ந்த
மறைபாடகமனந்தன் வண்டுழாய்க்கண்ணி *
இறைபாடியாயவிவை.
2619 நின்றுமிருந்தும் கிடந்தும்திரிதந்தும் *
ஒன்றுமோவாற்றான் என்நெஞ்சகலான் * - அன்றங்கை
வன்புடையால்பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான் *
அன்புடையனன்றேயவன்?
2779 கோட்டியூர் அன்னவுருவினரியை * திருமெய்யத்து
இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை *
மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை *
மன்னியபாடகத்து எம்மைந்தனை * -