ShOlinghur
Your browser does not support the audio element.
audio
1731 மிக்கானை மறையாய்விரிந்தவிளக்கை * என்னுள்
புக்கானைப் புகழ்சேர்பொலிகின்றபொன்மலையை *
தக்கானைக் கடிகைத்தடங்குன்றின்மிசையிருந்த *
அக்காரக்கனியை அடைந்துய்ந்துபோனேனே. (2)
1736 கண்ணார்கண்ணபுரம் கடிகைகடிகமழும் *
தண்ணார்தாமரைசூழ் தலைச்சங்கமேல்திசையுள் *
விண்ணோர்நாண்மதியை விரிகின்றவெஞ்சுடரை *
கண்ணாரக்கண்டுகொண்டு களிக்கின்றதுஇங்குஎன்றுகொலோ. (2)
2342 பண்டெல்லாம்வேங்கடம் பாற்கடல்வைகுந்தம் *
கொண்டங்குறைவார்க்குக்கோயில்போல் * - வண்டு
வளங்கிளரும்நீள்சோலை வண்பூங்கடிகை *
இளங்குமரன்தன்விண்ணகர். (2)
2706 ## காரார்திருமேனி காணுமளவும்போய் *
சீரார் திருவேங்கடமே திருக்கோவ (2)
லூரே * - மதிட்கச்சியூரகமே பேரகமே *
பேராமருதிறுத்தான் வெள்ளறையேவெஃகாவே *
பேராலிதண்கால் நறையூர்திருப்புலியூர் *
ஆராமம்சூழ்ந்த அரங்கம் * - கணமங்கை (2)