Nadu Nādu·Temple 42 of 108

Thirukkovalur

திருக்கோவலூர்

ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார் ஸமேத ஸ்ரீ த்ரிவிக்ரமாய நமஹ
Image 1
42
Presiding Deities
MoolavarTrivikraman
ThāyārSri PoongOvai Nāchiyār
UtsavarAayanār, Kovalan (Gopālan)
Nindra (Standing)Faces East Directions
VimānamSrikara
PushkaraniPennaiyāru, Krishna Theertham, Chakra Theertham
ThirukolamNindra (Standing)
DirectionEast
Location
MandalamNadu Nādu
AreaCuddalore
StateTamilNadu
Tradition
ĀgamamPāncharāthram
SampradāyamThenkalai
Recitation
Translation

PT 2.10.2

1139 கொந்தலர்ந்தநறுந்துழாய்சாந்தம்தூபம்

தீபம்கொண்டுஅமரர்தொழப்பணங்கொள் பாம்பில் *

சந்தணிமென்முலைமலராள்தரணிமங்கை

தாமிருவர்அடிவருடும்தன்மையானை *

வந்தனைசெய்துஇசையேழ்ஆறங்கம் ஐந்து

வளர்வேள்விநான்மறைகள்மூன்றுதீயும் *

சிந்தனைசெய்துஇருபொழுதுமொன்றும்செல்வத்

திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.

PT 2.10.3

1140 கொழுந்தலரும்மலர்ச்சோலைக்குழாங்கொள்பொய்கைக்

கோள்முதலைவாளெயிற்றுக்கொண்டற்குஎள்கி *

அழுந்தியமாகளிற்றினுக்குஅன்றுஆழியேந்தி

அந்தரமேவரத்தோன்றி அருள்செய்தானை *

எழுந்தமலர்க்கருநீலம்இருந்தில்காட்ட

இரும்புன்னைமுத்தரும்பிச்செம்பொன்காட்ட *

செழுந்தடநீர்க்கமலம்தீவிகைபோல்காட்டும்

திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.

PT 2.10.4

1141 தாங்கரும்போர்மாலிபடப்பறவையூர்ந்து

தராதலத்தோர்குறைமுடித்ததன்மையானை *

ஆங்கரும்பிக்கண்ணீர்சோர்ந்துஅன்புகூரும்

அடியவர்கட்குஆரமுதமானான்தன்னை *

கோங்கரும்புசுரபுன்னைகுரவார்சோலைக்

குழாவரிவண்டுஇசைபாடும்பாடல்கேட்டு

தீங்கரும்புகண்வளரும்கழனிசூழ்ந்த

திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.

PT 2.10.6

1143 உறியார்ந்தநறுவெண்ணெய்ஒளியால்சென்றுஅங்கு

உண்டானைக்கண்டுஆய்ச்சிஉரலோடுஆர்க்க *

தறியார்ந்தகருங்களிறேபோலநின்று

தடங்கண்கள்பனிமல்கும்தன்மையானை *

வெறியார்ந்தமலர்மகள்நாமங்கையோடு *

வியன்கலைஎண்தோளினாள்விளங்கு * செல்வச்

செறியார்ந்தமணிமாடம்திகழ்ந்துதோன்றும்

திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.

PT 2.10.7

1144 இருங்கைம்மாகரிமுனிந்துபரியைக்கீறி

இனவிடைகளேழடர்த்துமருதம்சாய்த்து *

வரும்சகடம்இறவுதைத்துமல்லையட்டு

வஞ்சகஞ்செய்கஞ்சனுக்குநஞ்சானானை *

கருங்கமுகுபசும்பாளைவெண்முத்துஈன்று

காயெல்லாம்மரகதமாய்ப்பவளம்காட்ட *

செருந்திமிகமொட்டலர்த்தும்தேன்கொள்சோலைத்

திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.

PT 2.10.8

1145 பாரேறுபெரும்பாரந்தீரப் பண்டு

பாரதத்துத்தூதியங்கி * பார்த்தன்செல்வத்

தேரேறுசாரதியாய்எதிர்ந்தார்சேனை

செருக்களத்துத்திறலழியச்செற்றான்தன்னை *

போரேறொன்றுடையானும்அளகைக்கோனும்

புரந்தரனும்நான்முகனும்பொருந்தும்ஊர்போல் *

சீரேறுமறையாளர்நிறைந்த செல்வத்

திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே. (2)

TNT 1.6

2057 அலம்புரிந்தநெடுந்தடக்கைஅமரர்வேந்தன்

அஞ்சிறைப்புள்தனிப்பாகன், அவுணர்க்கு என்றும் *

சலம்புரிந்தங்கருளில்லாத்தன்மையாளன்

தானுகந்தஊரெல்லாம்தன்தாள்பாடி *

நிலம்பரந்துவரும்கலுழிப்பெண்ணையீர்த்த

நெடுவேய்கள்படுமுத்தமுந்தவுந்தி *

புலம்பரந்தபொன்விளைக்கும்பொய்கைவேலிப்

பூங்கோவலூர்த்தொழுதும்போதுநெஞ்சே!

TNT 2.17

2068 பொங்கார்மெல்லிளங்கொங்கைபொன்னேபூப்பப்

பொருகயல்கண்ணீரரும்பப்போந்துநின்று *

செங்காலமடப்புறவம்பெடைக்குப்பேசும்

சிறுகுரலுக்குஉடலுருகிச்சிந்தித்து * ஆங்கே

தண்காலும்தண்குடந்தைநகரும்பாடித்

தண்கோவலூர்பாடியாடக்கேட்டு *

நங்காய்! நங்குடிக்குஇதுவோநன்மை? என்ன

நறையூரும்பாடுவாள்நவில்கின்றாளே.