Badrināth
Your browser does not support the audio element.
audio
399 வடதிசைமதுரைசாளக்கிராமம்
வைகுந்தம்துவரைஅயோத்தி *
இடமுடைவதரியிடவகையுடைய
எம்புருடோ த்தமனிருக்கை *
தடவரையதிரத்தரணிவிண்டிடியத்
தலைப்பற்றிக்கரைமரஞ்சாடி *
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே. (2)
968 முற்றமூத்துக்கோல்துணையா*
முன்னடிநோக்கிவளைந்து *
இற்றகால்போல்தள்ளிமெள்ள*
இருந்துஅங்குஇளையாமுன் **
பெற்றதாய்போல்வந்தபேய்ச்சி*
பெருமுலையூடு *
உயிரை வற்றவாங்கியுண்டவாயான்*
வதரிவணங்குதுமே (2)
969 முதுகுபற்றிக்கைத்தலத்தால் *
முன்னொருகோலூன்றி *
விதிர்விதிர்த்துக்கண்சுழன்று *
மேற்கிளைகொண்டிருமி **
இதுவென்னப்பர்மூத்தவாறென்று *
இளையவரேசாமுன் *
மதுவுண்வண்டுபண்கள்பாடும் *
வதரிவணங்குதுமே
970 உறிகள்போல்மெய்ந்நரம்பெழுந்து *
ஊன்தளர்ந்துள்ளமெள்கி *
நெறியைநோக்கிக்கண்சுழன்று *
நின்றுநடுங்காமுன் **
அறிதியாகில்நெஞ்சம்! அன்பாய் *
ஆயிரநாமஞ்சொல்லி *
வெறிகொள்வண்டுபண்கள்பாடும் *
971 பீளைசோரக்கண்ணிடுங்கிப் *
பித்தெழமூத்துஇருமி *
தாள்கள்நோவத்தம்மில்முட்டித் *
தள்ளிநடவாமுன் **
காளையாகிக்கன்றுமேய்த்துக் *
குன்றெடுத்துஅன்றுநின்றான் *
வாளைபாயும்தண்தடம்சூழ் *
972 பண்டுகாமரான வாறும் *
பாவையர்வாயமுதம் உண்டவாறும் *
வாழ்ந்தவாறும் *
ஒக்கவுரைத்திருமி **
தண்டுகாலாவூன்றியூன்றித் *
தள்ளிநடவாமுன் *
வண்டுபாடும்தண்டுழாயான் *
973 எய்த்தசொல்லோடுஈளையேங்கி *
இருமியிளைத்து *
உடலம் பித்தர்போலச்சித்தம்வேறாய்ப் *
பேசியயராமுன் **
அத்தன்எந்தைஆதிமூர்த்தி *
ஆழ்கடலைக்கடைந்த *
மைத்தசோதியெம்பெருமான் *
974 பப்பவப்பர்மூத்தவாறு *
பாழ்ப்பதுசீத்திரளையொப்ப *
ஐக்கள்போதவுந்த *
உன்தமர்காண்மினென்று **
செப்புநேர்மென்கொங்கைநல்லார் *
தாம்சிரியாதமுன்னம் *
வைப்பும்நங்கள்வாழ்வுமானான் *
975 ஈசிபோமின்ஈங்குஇரேன்மின் *
இருமியிளைத்தீர் *
உள்ளம் கூசியிட்டீரென்றுபேசும் *
குவளையங்கண்ணியர்பால் **
நாசமானபாசம்விட்டு *
நல்நெறிநோக்கலுறில் *
வாசம்மல்குதண்துழாயான் *
976 புலன்கள்நையமெய்யில்மூத்துப் *
போந்திருந்துள்ளமெள்கி *
கலங்கஐக்கள்போதவுந்திக் *
கண்டபிதற்றாமுன் **
அலங்கலாயதண்துழாய்கொண்டு *
ஆயிரநாமம்சொல்லி *
வலங்கொள்தொண்டர்பாடியாடும் *
977 வண்டு தண்டேனுண்டுவாழும் *
வதரிநெடுமாலை *
கண்டல்வேலிமங்கைவேந்தன் *
கலியனொலிமாலை **
கொண்டுதொண்டர்பாடியாடக் *
கூடிடில் நீள்விசும்பில் *
அண்டமல்லால்மற்றுஅவர்க்கு *
ஓராட்சி அறியோமே (2)
978 ஏனமுனாகி இருநிலமிடந்து *
அன்று இணையடி இமையவர் வணங்க *
தானவனாகம் தரணியில் புரளத் *
தடஞ்சிலை குனித்தவென்தலைவன் **
தேனமர்சோலைக் கற்பகம் பயந்த *
தெய்வநல்நறுமலர் கொணர்ந்து *
வானவர்வணங்கும் கங்கையின் கரைமேல் *
வதரியாச்சிராமத்துள்ளானே (2)
979 கானிடையுருவைச் சுடுசரம் துரந்து *
கண்டுமுன்கொடுந்தொழிலுரவோன் *
ஊனுடையகலத்து அடுகணைகுளிப்ப *
உயிர்க்கவர்ந்துகந்தஎம்ஒருவன் **
தேனுடைக்கமலத்தயனொடுதேவர் *
சென்றுசென்றிறைஞ்சிட *
பெருகு வானிடைமுதுநீர்க்கங்கையின்கரைமேல் *
வதரியாச்சிராமத்துள்ளானே
980 இலங்கையும்கடலும்அடலருந்துப்பின் *
இருநிதிக்கிறைவனும் *
அரக்கர் குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த கொற்றவன் * கொழுஞ்சுடர்சுழன்ற **
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில் *
வெண்துகிற்கொடியெனவிரிந்து *
வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல் *
981 துணிவுஇனிஉனக்குச்சொல்லுவன்மனமே! *
தொழுதெழுதொண்டர்கள்தமக்கு *
பிணியொழித்துஅமரர்பெருவிசும்பருளும் *
பேரருளாளன்எம்பெருமான் *
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் *
ஆரமும்வாரிவந்து *
அணிநீர் மணிகொழித்திழிந்தகங்கையின்கரைமேல் *
982 பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன் *
பெருமுலைசுவைத்திட *
பெற்ற தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட * வளர்ந்தஎன்தலைவன் **
சேய்முகட்டுச்சியண்டமும்சுமந்த *
செம்பொன்செய்விலங்கலிலிலங்கு *
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் *
983 தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி
திறத்துஒருமறத்தொழில் புரிந்து *
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த
பனிமுகில்வண்ணன் எம்பெருமான் *
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த
கருவரைபிளவெழக்குத்தி *
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
984 வெந்திறல்களிறும்வேலைவாயமுதும்
விண்ணொடுவிண்ணவர்க்கரசும் *
இந்திரற்கருளியெமக்குமீந்தருளும்
எந்தைஎம்மடிகள்எம்பெருமான் *
அந்தரத்தமரரடியிணைவணங்க
ஆயிரமுகத்தினாலருளி *
மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல்
985 மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த
மன்னவன் பொன்னிறத்து உரவோன் *
ஊன்முனிந்துஅவனதுடல் இருபிளவா
உகிர்நுதிமடுத்து * அயன்அரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம்
தவிர்த்தவன் * தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல்
986 கொண்டல்மாருதங்கள் குலவரைதொகுநீர்க்
குரைகடலுலகுடன் அனைத்தும் *
உண்டமாவயிற்றோன் ஒண்சுடரேய்ந்த
உம்பரும் ஊழியும் ஆனான் *
அண்டமூடறுத்துஅன்று அந்தரத்துஇழிந்து
அங்குஅவனியாள் அலமர * பெருகும்
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்
987 வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை *
கருங்கடல்முந்நீர்வண்ணனை எண்ணிக்
கலியன்வாயொலி செய்தபனுவல் *
வரஞ்செய்தவைந்துமைந்தும் வல்லார்கள்
வானவருலகுடன்மருவி *
இருங்கடலுலகம்ஆண்டு வெண்குடைக்கீழ்
இமையவராகுவர்தாமே. (2)
2706 ## காரார்திருமேனி காணுமளவும்போய் *
சீரார் திருவேங்கடமே திருக்கோவ (2)
லூரே * - மதிட்கச்சியூரகமே பேரகமே *
பேராமருதிறுத்தான் வெள்ளறையேவெஃகாவே *
பேராலிதண்கால் நறையூர்திருப்புலியூர் *
ஆராமம்சூழ்ந்த அரங்கம் * - கணமங்கை (2)