8

Thiru Kudalur

திருக்கூடலூர்

Thiru Kudalur

Āduturai Perumāl Koil

ஸ்ரீ பத்மாஸநவல்லீ ஸமேத ஸ்ரீ வையங்காத்த ஸ்வாமிநே நமஹ

In this sthalam, all the devas along with Nandhagarishi were given the prathyaksham of Sriman Narayanan. Since all of them gathered (koodi) together, this sthalam is called as "Thirukkoodaloor".

After coming to this sthalam only, the River Kaveri regained its speciality and holyness. Koodal + oor = Koodaloor. Koodal means joining (merging) together

+ Read more
ஸ்தல வரலாறு

திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம் தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கைஆழ்வாரின் பாசுரத்தில் நாம் காணலாம். வராஹம் பூமியை இங்கே உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து ஸ்ரீதேவி தாயாரோடு அங்கு காட்சி அளிக்கிறார்.

அம்பரிஷன் + Read more
Thayar: Sri Padmāasani (Pushpa Valli)
Moolavar: Jagathrakshakan, Uyyavandār
Utsavar: Vaiyam Kātha Perumāl
Vimaanam: Suthtasthava
Pushkarani: Chakra Theertham, Cauveri
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Kumbakkonam
State: TamilNadu
Aagamam: Vaikānasam
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 10:00 a.m. 5:00 p.m. to 7:00 p.m. (Please go after calling to the contact person.)
Search Keyword: Kudalur
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 5.2.1

1358 தாம்தம்பெருமையறியார் * தூது
வேந்தர்க்காய வேந்தரூர்போல் *
காந்தள்விரல் மென்கலைநன்மடவார் *
கூந்தல்கமழும் கூட லூரே. (2)
1358 ## தாம் தம் பெருமை அறியார் * தூது
வேந்தர்க்கு ஆய * வேந்தர் ஊர்போல் * -
காந்தள் விரல் * மென் கலை நல் மடவார் *
கூந்தல் கமழும் * -கூடலூரே-1
1358 ## tām tam pĕrumai aṟiyār * tūtu
ventarkku āya * ventar ūrpol * -
kāntal̤ viral * mĕṉ kalai nal maṭavār *
kūntal kamazhum * -kūṭalūre-1

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1358. Kudalur where beautiful girls with fingers as lovely as kāndal (flame lily) buds wear soft dresses and spread the fragrance from their hair everywhere is the place of the god who does not know his own greatness and went as a messenger for the Pāndavās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாம் தம் பெருமை தம் பெருமையை; அறியார் தாம் அறியாதவரும்; வேந்தர்க்கு ஆய பாண்டவர்களுக்கு; தூது தூது சென்றவருமான; வேந்தர் ஊர் போல் எம்பெருமானின் ஊர்; காந்தள் காந்தள் மலர் போல்; விரல் விரல்களையுடையவரும்; மென் மென்மையான; கலை ஆடைகளை அணிந்தவர்களுமான; நன் மடவார் நல்ல பெண்களின்; கூந்தல் கமழும் மணம் மிக்க கூந்தலையுடைய; கூடலூரே திருக்கூடலூராகும்

PT 5.2.2

1359 செறுந்திண்திமிலேறுடைய * பின்னை
பெறும்தண்கோலம் பெற்றாரூர்போல் *
நறுந்தண்தீந்தேன் உண்டவண்டு *
குறிஞ்சிபாடும் கூட லூரே.
1359 செறும் திண் * திமில் ஏறு உடைய * பின்னை
பெறும் தண் கோலம் * பெற்றார் ஊர்போல் ** -
நறும் தண் தீம் * தேன் உண்ட வண்டு *
குறிஞ்சி பாடும் * -கூடலூரே-2
1359 cĕṟum tiṇ * timil eṟu uṭaiya * piṉṉai
pĕṟum taṇ kolam * pĕṟṟār ūrpol ** -
naṟum taṇ tīm * teṉ uṇṭa vaṇṭu *
kuṟiñci pāṭum * -kūṭalūre-2

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1359. Kudalur where bees drink sweet fragrant honey and sing kurinji songs is the place of the beautiful god who fought with the seven humped bulls and married Nappinnai, the daughter of a fisherman.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செறும் திண் மேல்விழும் திண்மையான; திமில் முசுப்புக்களையுடைய; ஏறு உடைய ரிஷபங்களை பந்தயமாக உடையவளான; தண் கண்டவர் கண்குளிரும்; பெறும் பெறும்; கோலம் அழகியான; பின்னை நப்பின்னையை; பெற்றார் ஊர்போல் பெற்றவரின் ஊர்; நறும் மணம்மிக்க; தண் தீம் குளிர்ந்த இனிய தேனை; தேன் உண்ட வண்டு பருகின வண்டுகள்; குறிஞ்சி பாடும் குறிஞ்சிப் பண்ணைப்பாடும்; கூடலூரே கூடலூராகும்

PT 5.2.3

1360 பிள்ளையுருவாய்த் தயிருண்டு * அடியே
னுள்ளம்புகுந்த ஒருவரூர்போல் *
கள்ளநாரை வயலுள் * கயல்மீன்
கொள்ளைகொள்ளும் கூட லூரே.
1360 பிள்ளை உருவாய்த் * தயிர் உண்டு * அடியேன்
உள்ளம் புகுந்த * ஒருவர் ஊர்போல் ** -
கள்ள நாரை * வயலுள் * கயல்மீன்
கொள்ளை கொள்ளும் * -கூடலூரே-3
1360 pil̤l̤ai uruvāyt * tayir uṇṭu * aṭiyeṉ
ul̤l̤am pukunta * ŏruvar ūrpol ** -
kal̤l̤a nārai * vayalul̤ * kayalmīṉ
kŏl̤l̤ai kŏl̤l̤um * -kūṭalūre-3

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1360. Kudalur where the cheating cranes steal kāyal fish in the fields is the place of the god who ate yogurt when he was a child and now has entered heart of me, his devotee.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிள்ளை சிறுபிள்ளையாய்; உருவாய் இருந்த போது; தயிர் உண்டு தயிரை உண்டவனும்; அடியேன் அடியேனின்; உள்ளம் புகுந்த உள்ளத்தில் புகுந்தவனுமான; ஒருவர் ஊர் போல் ஒரு எம்பெருமானின் ஊர்; கள்ள நாரை வஞ்ச நெஞ்சுடைய நாரைகள்; வயலுள் கயல்மீன் வயல்களிலே கயல்மீன்களை; கொள்ளை கொள்ளும் அபகரிக்கும்; கூடலூரே கூடலூராகும்

PT 5.2.4

1361 கூற்றேருருவின் குறளாய் * நிலம்நீர்
ஏற்றான் எந்தைபெருமானூர்போல் *
சேற்றேருழவர் கோதைப்போதூண் *
கோல்தேன்முரலும் கூட லூரே.
1361 கூற்று ஏர் உருவின் * குறள் ஆய் * நிலம் நீர்
ஏற்றான் எந்தை * பெருமான் ஊர்போல் * -
சேற்று ஏர் உழவர் * கோதைப் போது ஊண் *
கோல் தேன் முரலும் * -கூடலூரே-4
1361 kūṟṟu er uruviṉ * kuṟal̤ āy * nilam nīr
eṟṟāṉ ĕntai * pĕrumāṉ ūrpol * -
ceṟṟu er uzhavar * kotaip potu ūṇ *
kol teṉ muralum * -kūṭalūre-4

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1361. Kudalur where the kol bees sing and drink honey from the flowers that adorn the hair of the farmers plowing the wet lands is the place of our father who, as if he were Yama, went as a dwarf, took three feet of land from king Mahabali and measured the earth and the sky at the sacrifice of the king.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூற்று ஏர் கொண்டாடத் தகுந்த; உருவின் உருவத்தையுடைய; குறளாய் வாமந மூர்த்தியாக; நிலம் நீர் நீர் ஏற்று பூமி தானம்; ஏற்றான் எந்தை பெற்ற என் தந்தையான; பெருமான் ஊர் போல் எம்பெருமானனின் ஊர்; சேற்று ஏர் சேறுகளிலே ஏர்கட்டி; உழவர் உழுகின்றவர்களது; கோதை தலையிலே வைத்திருந்த; போது பூக்களிலுள்ள; ஊண் தேனை உணவாக உடைய வண்டுகள்; கோல் சோலைகளில்; முரலும் ரீங்காரம் பண்ணும்; கூடலூரே கூடலூராகும்

PT 5.2.5

1362 தொண்டர்பரவச் சுடர்சென்றணவ *
அண்டத்துஅமரும் அடிகளூர்போல் *
வண்டலலையுள் கெண்டைமிளிர *
கொண்டலதிரும் கூட லூரே.
1362 தொண்டர் பரவச் * சுடர் சென்று அணவ *
அண்டத்து அமரும் * அடிகள் ஊர்போல் ** -
வண்டல் அலையுள் * கெண்டை மிளிர *
கொண்டல் அதிரும் * -கூடலூரே-5
1362 tŏṇṭar paravac * cuṭar cĕṉṟu aṇava *
aṇṭattu amarum * aṭikal̤ ūrpol ** -
vaṇṭal alaiyul̤ * kĕṇṭai mil̤ira *
kŏṇṭal atirum * -kūṭalūre-5

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1362. Kudalur where the clouds thunder and kendai fish frolic and glisten in the water in the flourishing fields is the place of the god where devotees praised him as the moon and the shining sun went around him when he grew to the sky at the sacrifice of Mahābali.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டர் தொண்டர்கள்; பரவ துதிக்கும்படியாக; சுடர் ஸூர்ய மண்டலத்தைத்; சென்று தொடுமளவு; அணவ திருமேனியுடையவனும்; அண்டத்து ஆகாசமெல்லாம்; அமரும் வியாபித்திருப்பவனுமான; அடிகள் ஊர் போல் எம்பெருமானின் ஊர்; வண்டல் வண்டல் பாய்ந்த; அலையுள் அலைகளையுடைய நீர்நிலங்களிலே; கெண்டை கெண்டை மீன்கள் தமது; மிளிர ஒளியாலே மின்னுவதை; கொண்டல் மேகங்கள் மின்னலென; அதிரும் நினைத்து கர்ஜிக்கும்; கூடலூரே கூடலூராகும்

PT 5.2.6

1363 தக்கன்வேள்வி தகர்த்ததலைவன் *
துக்கம்துடைத்த துணைவரூர்போல் *
எக்கலிடு நுண்மணல்மேல் * எங்கும்
கொக்கின்பழம்வீழ் கூட லூரே.
1363 தக்கன் வேள்வி * தகர்த்த தலைவன் *
துக்கம் துடைத்த * துணைவர் ஊர்போல் ** -
எக்கல் இடு * நுண் மணல்மேல் * எங்கும்
கொக்கின் பழம் வீழ் * -கூடலூரே-6
1363 takkaṉ vel̤vi * takartta talaivaṉ *
tukkam tuṭaitta * tuṇaivar ūrpol ** -
ĕkkal iṭu * nuṇ maṇalmel * ĕṅkum
kŏkkiṉ pazham vīzh * -kūṭalūre-6

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1363. Kudalur where mangoes fall from their trees everywhere onto mounds of sand is the place of the god who aided Shivā, the destroyer of the sacrifice of Daksha, removing his pain.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தக்கன் தக்ஷப்ரஜாபதியின்; வேள்வி யாகத்தை; தகர்த்த அழித்தவனான; தலைவன் சிவனுடைய; துக்கம் துயரத்தை; துடைத்த போக்கின; துணைவர் ஆபத்தில் துணை நிற்கும்; ஊர் போல் எம்பெருமானின் ஊர்; எக்கல் இடு வண்டல் படிந்த; நுண் நுட்பமான; மணல் மேல் மணல் மேடுகள்; எங்கும் எங்கும்; கொக்கின் பழம் மாம்பழங்கள்; வீழ் கூடலூரே விழுந்திருக்கும் கூடலூராகும்

PT 5.2.7

1364 கருந்தண்கடலும் மலையும்உலகும் *
அருந்தும்அடிகள் அமரும்ஊர்போல் *
பெருந்தண்முல்லைப் பிள்ளையோடி *
குருந்தம்தழுவும் கூட லூரே.
1364 கருந் தண் கடலும் * மலையும் உலகும் *
அருந்தும் அடிகள் * அமரும் ஊர்போல ** -
பெருந் தண் முல்லைப் * பிள்ளை ஓடி *
குருந்தம் தழுவும் * -கூடலூரே-7
1364 karun taṇ kaṭalum * malaiyum ulakum *
aruntum aṭikal̤ * amarum ūrpola ** -
pĕrun taṇ mullaip * pil̤l̤ai oṭi *
kuruntam tazhuvum * -kūṭalūre-7

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1364. Kudalur where cool tender jasmine plants grow abundantly and embrace kurundam trees is the place of him who swallowed the world, the mountains and the cool dark oceans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருந் தண் கறுத்துக் குளிர்ந்த; கடலும் கடல்களையும்; மலையும் மலைகளையும்; உலகும் உலகங்களையும்; அருந்தும் பிரளயத்தில் அமுது செய்த; அடிகள் அமரும் எம்பெருமான்; ஊர் போல் இருக்கும் ஊர்; பெருந் தண் பெரிய குளிர்ந்த; முல்லைப்பிள்ளை ஓடி முல்லைக் கொடி படர்ந்து; குருந்தம் தழுவும் குருந்த மரத்தை தழுவும்; கூடலூரே கூடலூராகும்

PT 5.2.8

1365 கலைவாழ்பிணையோடு அணையும் * திருநீர்
மலைவாழ்எந்தை மருவும்ஊர்போல் *
இலைதாழ்தெங்கின் மேல்நின்று * இளநீர்க்
குலைதாழ்கிடங்கின் கூட லூரே.
1365 கலை வாழ் * பிணையோடு அணையும் * திருநீர்-
மலை வாழ் எந்தை * மருவும் ஊர்போல் ** -
இலை தாழ் தெங்கின் * மேல்நின்று * இளநீர்க்
குலை தாழ் கிடங்கின் * -கூடலூரே-8
1365 kalai vāzh * piṇaiyoṭu aṇaiyum * tirunīr-
malai vāzh ĕntai * maruvum ūrpol ** -
ilai tāzh tĕṅkiṉ * melniṉṟu * il̤anīrk
kulai tāzh kiṭaṅkiṉ * -kūṭalūre-8

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1365. Kudalur where trees with tender coconuts bend down to the earth is where the god of Thiruneermalai stays and stags embrace their lovely does and live happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கலை வாழ் ஆண்மான்கள்; பிணையோடு பெண் மான்களோடு; அணையும் சேர்ந்து வாழும்; திருநீர் மலை திருநீர்மலையில்; வாழ் எந்தை வாழும் என் தந்தையான; மருவும் எம்பெருமான்; ஊர் போல் இருக்கும் இடம்; தாழ் தழைத்திருக்கும்; இலை இலைகளையுடைய; தெங்கின் தென்னைமரங்களின்; மேல்நின்று மேலிருக்கும்; இளநீர் குலை இளநீர்க் குலைகள்; தாழ் தாழ்ந்திருக்கும்; கிடங்கின் வெற்றிலைத் தோட்டங்களையுடைய; கூடலூரே கூடலூராகும்

PT 5.2.9

1366 பெருகுகாதல் அடியேனுள்ளம் *
உருகப்புகுந்த ஒருவரூர்போல் *
அருகு கைதைமலர * கெண்டை
குருகென்றஞ்சும் கூட லூரே.
1366 பெருகு காதல் அடியேன் * உள்ளம்
உருகப் புகுந்த * ஒருவர் ஊர் போல் ** -
அருகு கைதை மலர * கெண்டை
குருகு என்று அஞ்சும் * -கூடலூரே-9
1366 pĕruku kātal aṭiyeṉ * ul̤l̤am
urukap pukunta * ŏruvar ūr pol ** -
aruku kaitai malara * kĕṇṭai
kuruku ĕṉṟu añcum * -kūṭalūre-9

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1366. Kudalur where a kendai fish goes near a thazhai flower and is frightened that it might be a crane is the place of the matchless lord who came and entered this slave’s heart and melts it with abundant love for him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெருகு வளர்ந்துவரும்; காதல் ஆசையையுடைய; அடியேன் என்னுடைய; உள்ளம் மனமானது; உருக கரையும்படி என் உள்ளே; புகுந்த பிரவேசித்திருக்கும்; ஒருவர் எம்பெருமான்; ஊர் போல் இருக்கும் ஊர்; அருகு ஸமீபத்திலே; கைதை மலர தாழைகள் மலர்ந்திருக்க; கெண்டை கெண்டை மீன்கள்; குருகு தம்மைப் பிடித்து உண்ண; என்று வந்திருக்கும் நாரை என்று; அஞ்சும் நினைத்து பயப்படும்; கூடலூரே கூடலூராகும்

PT 5.2.10

1367 காவிப்பெருநீர்வண்ணன் * கண்ணன்
மேவித்திகழும் கூடலூர்மேல் *
கோவைத்தமிழால் கலியன்சொன்ன *
பாவைப்பாடப் பாவம்போமே (2)
1367 ## காவிப் பெருநீர் வண்ணன் * கண்ணன்
மேவித் திகழும் * கூடலூர்மேல் **
கோவைத் தமிழால் * கலியன் சொன்ன *
பாவைப் பாட பாவம் போமே-10
1367 ## kāvip pĕrunīr vaṇṇaṉ * kaṇṇaṉ
mevit tikazhum * kūṭalūrmel **
kovait tamizhāl * kaliyaṉ cŏṉṉa *
pāvaip pāṭa pāvam pome-10

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1367. Kaiyan composed ten pāsurams in Tamil on Kudalur where Kannan, colored like the ocean or a kāvi flower, stays and shines. If devotees learn and recite these pāsurams the results of their karmā will not come to them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காவி கருநெய்தற் பூப்போலவும்; பெருநீர் நீர் நிறைந்த கடல்போலவும்; வண்ணன் நிறமுடைய; கண்ணன் கண்ணன்; மேவித் திகழும் இருக்கும்; கூடலூர்மேல் கூடலூரைக் குறித்து; கோவைத் தமிழால் செந்தமிழால்; கலியன் திருமங்கை ஆழ்வார்; சொன்ன அருளிச் செய்த; பாவைப் பாட இப்பாசுரங்களைப் பாட; பாவம் போமே பாவங்கள் தொலையும்