PT 5.2.3

அடியேனுள்ளம் புகுந்தவர் ஊர் இது

1360 பிள்ளையுருவாய்த் தயிருண்டு * அடியே
னுள்ளம்புகுந்த ஒருவரூர்போல் *
கள்ளநாரை வயலுள் * கயல்மீன்
கொள்ளைகொள்ளும் கூட லூரே.
PT.5.2.3
1360 pil̤l̤ai uruvāyt * tayir uṇṭu * aṭiyeṉ
ul̤l̤am pukunta * ŏruvar ūrpol ** -
kal̤l̤a nārai * vayalul̤ * kayalmīṉ
kŏl̤l̤ai kŏl̤l̤um * -kūṭalūre-3

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1360. Kudalur where the cheating cranes steal kāyal fish in the fields is the place of the god who ate yogurt when he was a child and now has entered heart of me, his devotee.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிள்ளை சிறுபிள்ளையாய்; உருவாய் இருந்த போது; தயிர் உண்டு தயிரை உண்டவனும்; அடியேன் அடியேனின்; உள்ளம் புகுந்த உள்ளத்தில் புகுந்தவனுமான; ஒருவர் ஊர் போல் ஒரு எம்பெருமானின் ஊர்; கள்ள நாரை வஞ்ச நெஞ்சுடைய நாரைகள்; வயலுள் கயல்மீன் வயல்களிலே கயல்மீன்களை; கொள்ளை கொள்ளும் அபகரிக்கும்; கூடலூரே கூடலூராகும்