Chapter 6
Thirumāl took residence in Thirukkadithānam in order to erase Āzhvār's suffering - (எல்லியும் காலையும்)
ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)
Bhagavān did indeed crave to be with Āzhvār and was unhappy about not coming to his aid. He was concerned that if He did materialize in front of Āzhvār out of the blue, raptured by His presence, Āzhvār might succumb to harm; He decided to restrain the deluge of Āzhvār’s bliss little by little and then interact with him. With that decision in mind, Bhagavān + Read more
உண்மையில் ஆழ்வாரைப் பெறவேண்டும் என்ற பெருவிடாய் பகவானுக்கே இருந்தது. ஆழ்வாருக்கு உதவவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு இருந்தது. திடீரென்று எதிரில் வந்தால் ,பெருமகிழ்வு கொண்டிருக்கும் ஆழ்வாருக்கு ஏதேனும் தீங்கு நேரிடும் என்று அவன் நினைத்தான்; ஆழ்வாரது மகிழ்ச்சி வெள்ளத்தின் வேகத்தைச் + Read more
Verses: 3618 to 3628
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: வியந்தம்
Recital benefits: will go to Vaikuntam and be happy
- TVM 8.6.1
3618 ## எல்லியும் காலையும் * தன்னை நினைந்து எழ *
நல்ல அருள்கள் * நமக்கே தந்து அருள் செய்வான் **
அல்லி அம் தண் அம் துழாய் * முடி அப்பன் ஊர் *
செல்வர்கள் வாழும் * திருக்கடித்தானமே (1) - TVM 8.6.2
3619 திருக்கடித்தானமும் * என்னுடையச் சிந்தையும் *
ஒருக்கடுத்து உள்ளே * உறையும் பிரான் கண்டீர் **
செருக் கடுத்து அன்று * திகைத்த அரக்கரை *
உருக் கெட வாளி * பொழிந்த ஒருவனே (2) - TVM 8.6.3
3620 ஒருவர் இருவர் ஓர் * மூவர் என நின்று *
உருவு கரந்து ** உள்ளும்தோறும் தித்திப்பான் **
திரு அமர் மார்வன் * திருக்கடித்தானத்தை *
மருவி உறைகின்ற * மாயப் பிரானே (3) - TVM 8.6.4
3621 மாயப் பிரான் * என வல்வினை மாய்ந்து அற *
நேசத்தினால் நெஞ்சம் * நாடு குடிகொண்டான் **
தேசத்து அமரர் * திருக்கடித்தானத்தை *
வாசப் பொழில் மன்னு * கோயில் கொண்டானே (4) - TVM 8.6.5
3622 கோயில் கொண்டான் தன் * திருக்கடித்தானத்தை *
கோயில் கொண்டான் * அதனோடும் என் நெஞ்சகம்; **
கோயில்கொள் * தெய்வம் எல்லாம் தொழ * வைகுந்தம்
கோயில் கொண்ட * குடக்கூத்த அம்மானே (5) - TVM 8.6.6
3623 கூத்த அம்மான் * கொடியேன் இடர் முற்றவும் *
மாய்த்த அம்மான் * மதுசூத அம்மான் உறை **
பூத்த பொழில் தண் * திருக்கடித்தானத்தை *
ஏத்த நில்லா * குறிக்கொள்மின் இடரே (6) - TVM 8.6.7
3624 கொள்மின் இடர் கெட * உள்ளத்துக் கோவிந்தன் *
மண் விண் முழுதும் * அளந்த ஒண் தாமரை **
மண்ணவர் தாம் தொழ * வானவர் தாம் வந்து *
நண்ணு திருக்கடித்தான நகரே (7) - TVM 8.6.8
3625 தான நகர்கள் * தலைச்சிறந்து எங்கெங்கும் *
வான் இந் நிலம் கடல் * முற்றும் எம் மாயற்கே **
ஆனவிடத்தும் என் நெஞ்சும் * திருக்கடித்
தான நகரும் * தன தாயப் பதியே (8) - TVM 8.6.9
3626 தாயப் பதிகள் * தலைச்சிறந்து எங்கெங்கும் *
மாயத்தினால் மன்னி * வீற்றிருந்தான் உறை **
தேசத்து அமரர் * திருக்கடித்தானத்துள் *
ஆயர்க்கு அதிபதி * அற்புதன் தானே (9) - TVM 8.6.10
3627 அற்புதன் நாராயணன் * அரி வாமனன் *
நிற்பது மேவி * இருப்பது என் நெஞ்சகம் **
நல் புகழ் வேதியர் * நான்மறை நின்று அதிர் *
கற்பகச் சோலைத் * திருக்கடித்தானமே (10) - TVM 8.6.11
3628 ## சோலைத் திருக்கடித்தானத்து * உறை திரு
மாலை * மதிள் குருகூர்ச் சடகோபன் சொல் **
பாலோடு அமுது அன்ன * ஆயிரத்து இப் பத்தும் *
மேலை வைகுந்தத்து * இருத்தும் வியந்தே (11)