Chapter 7

Āzhvār expresses his joy on the Lord seated in his heart - (இருத்தும் வியந்து)

தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்
Āzhvār expresses how he spends time relishing the boon bestowed upon him by Bhagavān in this Thiruvāymozhi.
ஆழ்வார் பேறு பெற்றுக் களிக்கும் திருவாய்மொழி இது.

எட்டாம் பத்து ஏழாம் திருவாய் மொழி -இருத்தும் -பிரவேசம்

கீழ் அடைய இத் திருவாய் மொழியில் பேற்றுக்கு கிருஷி செய்தபடி – மேல் இப் பேற்றுக்கு வேலியாய் இருக்கிறது- இத் திருவாய்மொழியில் செய்கிறது என் என்னில் –

தாம் அநாதி காலம் புத்தி + Read more
Verses: 3629 to 3639
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will be removed of all karma
  • TVM 8.7.1
    3629 ## இருத்தும் வியந்து என்னைத் * தன் பொன் அடிக்கீழ் என்று *
    அருத்தித்து எனைத்து ஓர் * பல நாள் அழைத்தேற்கு **
    பொருத்தம் உடை * வாமனன் தான் புகுந்து * என் தன்
    கருத்தை உற * வீற்றிருந்தான் கண்டு கொண்டே (1)
  • TVM 8.7.2
    3630 இருந்தான் கண்டுகொண்டு * எனது ஏழை நெஞ்சு ஆளும் *
    திருந்தாத ஓர் ஐவரைத் * தேய்ந்து அற மன்னி **
    பெரும் தாள் களிற்றுக்கு * அருள்செய்த பெருமான் *
    தரும் தான் அருள் தான் * இனி யான் அறியேனே (2)
  • TVM 8.7.3
    3631 அருள் தான் இனி யான் அறியேன் * அவன் என் உள் *
    இருள் தான் அற * வீற்றிருந்தான் இது அல்லால் **
    பொருள் தான் எனில் * மூவுலகும் பொருள் அல்ல *
    மருள் தான் ஈதோ? * மாய மயக்கு மயக்கே? (3)
  • TVM 8.7.4
    3632 மாய மயக்கு மயக்கான் * என்னை வஞ்சித்து *
    ஆயன் அமரர்க்கு * அரிஏறு எனது அம்மான் **
    தூய சுடர்ச்சோதி * தனது என் உள் வைத்தான் *
    தேசம் திகழும் * தன் திருவருள் செய்தே (4)
  • TVM 8.7.5
    3633 திகழும் தன் திருவருள் செய்து * உலகத்தார்
    புகழும் புகழ் * தான் அது காட்டித் தந்து ** என் உள்
    திகழும் * மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் *
    புகழும் புகழ் * மற்று எனக்கும் ஓர் பொருளே? (5)
  • TVM 8.7.6
    3634 பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் * சீர்க்கத்
    தருமேல் * பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் **
    கரு மாணிக்கக் குன்றத்துத் * தாமரைபோல் *
    திரு மார்பு கால் கண் கை * செவ்வாய் உந்தியானே? (6)
  • TVM 8.7.7
    3635 செவ்வாய் உந்தி * வெண் பல் சுடர்க் குழை தம்மோடு *
    எவ்வாய்ச் சுடரும் * தம்மில் முன் வளாய்க்கொள்ள **
    செவ்வாய் முறுவலோடு * எனது உள்ளத்து இருந்த **
    அவ்வாய் அன்றி * யான் அறியேன் மற்று அருளே (7)
  • TVM 8.7.8
    3636 அறியேன் மற்று அருள் * என்னை ஆளும் பிரானார் *
    வெறிதே அருள்செய்வர் * செய்வார்கட்கு உகந்து **
    சிறியேனுடைச் * சிந்தையுள் மூவுலகும் * தன்
    நெறியா வயிற்றில் கொண்டு * நின்றொழிந்தாரே (8)
  • TVM 8.7.9
    3637 வயிற்றில் கொண்டு * நின்றொழிந்தாரும் எவரும் *
    வயிற்றில் கொண்டு * நின்று ஒரு மூவுலகும் ** தம்
    வயிற்றில் கொண்டு * நின்றவண்ணம் நின்ற மாலை *
    வயிற்றில் கொண்டு * மன்ன வைத்தேன் மதியாலே (9)
  • TVM 8.7.10
    3638 வைத்தேன் மதியால் * எனது உள்ளத்து அகத்தே *
    எய்த்தே ஒழிவேன் அல்லேன் * என்றும் எப்போதும் **
    மொய்த்து ஏய் திரை * மோது தண் பாற்கடலுளால் *
    பைத்து ஏய் சுடர்ப் பாம்பு அணை * நம் பரனையே (10)
  • TVM 8.7.11
    3639 ## சுடர்ப் பாம்பு அணை நம் பரனைத் * திருமாலை *
    அடிச் சேர்வகை * வண் குருகூர்ச் சடகோபன் **
    முடிப்பான் சொன்ன ஆயிரத்து * இப் பத்தும் சன்மம்
    விடத் * தேய்ந்து அற நோக்கும் * தன் கண்கள் சிவந்தே (11)