Chapter 2

Āzhvār advises others to seek the Lord through untainted devotion - (வீடுமின் முற்றவும்)*

உலகிற்கு உபதேசம்

Knowing this body is not permanent or stable, do surrender one’s mind, speech/vows and all actions to Bhagavān alone; Āzhvār earnestly requests us to remove ego, attachments and the like, then pay obeisance and servitude to the divine feet of Sriman Narayanan whose glory is unexplainable and immeasurable.


***Exposition on the Avatārikās to the

+ Read more

உடல் நிலையானது அன்று என்றறிந்து, மனம், வாக்கு, செயல்களை பகவானுக்கே இட்டு, அகங்காரம் பற்று முதலியவற்றை நீக்கி, உயர்வற உயர் நலமுடைய ஸ்ரீமந்நாராயணனின் திருவடிகளை ஆச்ரயிங்கள் என்று ஆழ்வார் ஈண்டு உபதேசிக்கிறார்.

முதல் பத்து -இரண்டாம் திருவாய்மொழி-வீடுமின் முற்றவும்- பிரவேசம்

தத்வ

+ Read more
Verses: 2802 to 2812
Grammar: Vaṉjiththuṟai** / வஞ்சித்துறை
Pan: முதிர்ந்த குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: If you constantly think of only Him when you're alive on this earth, then, when you leave your body you will join Him
  • TVM 1.2.1
    2802 ## வீடுமின் முற்றவும் வீடு செய்து * உம் உயிர்
    வீடு உடையானிடை * வீடு செய்ம்மினே (1)
  • TVM 1.2.2
    2803 மின்னின் நிலை * இல மன் உயிர் ஆக்கைகள் **
    என்னும் இடத்து * இறை உன்னுமின் நீரே (2)
  • TVM 1.2.3
    2804 நீர் நுமது என்று இவை * வேர்முதல் மாய்த்து ** இறை
    சேர்மின் உயிர்க்கு * அதன் நேர் நிறை இல்லே (3)
  • TVM 1.2.4
    2805 இல்லதும் உள்ளதும் * அல்லது அவன் உரு **
    எல்லை இல் அந் நலம் ** புல்கு பற்று அற்றே (4)
  • TVM 1.2.5
    2806 அற்றது பற்று எனில் * உற்றது வீடு உயிர் **
    செற்ற அது மன் உறில் * அற்று இறை பற்றே (5)
  • TVM 1.2.6
    2807 பற்று இலன் ஈசனும் * முற்றவும் நின்றனன் **
    பற்று இலையாய் * அவன் முற்றில் அடங்கே (6)
  • TVM 1.2.7
    2808 அடங்கு எழில் சம்பத்து ** அடங்கக் கண்டு ** ஈசன்
    அடங்கு எழில் அஃது என்று * அடங்குக உள்ளே (7)
  • TVM 1.2.8
    2809 உள்ளம் உரை செயல் * உள்ள இம் மூன்றையும் **
    உள்ளிக் கெடுத்து * இறை உள்ளில் ஒடுங்கே (8)
  • TVM 1.2.9
    2810 ஒடுங்க அவன்கண் * ஒடுங்கலும் எல்லாம் **
    விடும் பின்னும் ஆக்கை * விடும்பொழுது எண்ணே (9)
  • TVM 1.2.10
    2811 எண் பெருக்கு அந் நலத்து * ஒண் பொருள் ஈறு இல **
    வண் புகழ் நாரணன் * திண் கழல் சேரே (10)
  • TVM 1.2.11
    2812 ## சேர்த்தடத் * தென் குரு கூர்ச் சடகோபன் சொல் **
    சீர்த் தொடை ஆயிரத்து * ஓர்த்த இப் பத்தே (11)