2752 ஆயிரம் தோள் மன்னு கரதலங்கள் மட்டித்து *
மாதிரங்கள் மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் *
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப *
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும் *
தன்னின் உடனே சுழலச் சுழன்று ஆடும் *
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி *
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே? *
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் * 42
2752 āyiram tol̤ maṉṉu karatalaṅkal̤ maṭṭittu *
mātiraṅkal̤ miṉṉi ĕri vīca mel ĕṭutta cūzh kazhal kāl *
pŏṉ ulakam ezhum kaṭantu umpar mel cilumpa *
maṉṉu kula varaiyum mārutamum tārakaiyum *
taṉṉiṉ uṭaṉe cuzhalac cuzhaṉṟu āṭum *
kŏl navilum mūvilai vel kūttaṉ pŏṭi āṭi *
aṉṉavaṉ taṉ pŏṉ akalam cĕṉṟu āṅku aṇaintilal̤e? *
paṉṉi uraikkuṅkāl pāratam ām * 42