Chapter 11

She describes Lakshmi - (அன்னம் ஆய்)

பார்வதி லட்சுமியை விவரிக்கிறார்
Verses: 2756 to 2763
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
  • PTM 11.44
    2756 அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே *
    மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய் *
    முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய் *
    அன்ன திரு உருவம் நின்றது அறியாதே *
    என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் *
    பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு *
    மன்னு மறிகடலும் ஆர்க்கும் * மதி உகுத்த
    இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும் *
    தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ? * 44
  • PTM 11.45
    2757 தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து *
    மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் *
    இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே *
    முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து *
    பின்னும் அவ் அன்றில் பேடை வாய்ச் சிறு குரலும் *
    என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்? 45
  • PTM 11.46
    2758 கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய *
    கொல் நவிலும் பூங் கணைகள் கோத்துப் பொத அணைந்து *
    தன்னுடைய தோள் கழிய வாங்கி * தமியேன்மேல்
    என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் *
    பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே 48
  • PTM 11.47
    2759 பேதையேன்
    கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின் *
    நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே *
    மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் *
    என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் *
    மன்னும் மலர் மங்கை மைந்தன் * கணபுரத்துப் 49
  • PTM 11.48
    2760 பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல் *
    என் இவைதான்? வாளா எனக்கே பொறை ஆகி *
    முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர் *
    மன்னு மருந்து அறிவீர் இல்லையே? 50
  • PTM 11.49
    2761 மால் விடையின்
    துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு
    வன் தொடரால் * கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு * 51
  • PTM 11.50
    2762 மாலைவாய்த் தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின் *
    இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே *
    கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும் *
    என் இதனைக் காக்குமா? சொல்லீர் 52
  • PTM 11.51
    2763 இது விளைத்த
    மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் * மா மதிகோள்
    முன்னம் விடுத்த முகில் வண்ணன் * 53