Chapter 9

Usha, Vānan’s daughter and Māyavan - (சூழ் கடலுள்)

உஷா, வானனின் மகள் மற்றும் மாயவன்
Verses: 2747 to 2749
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
  • PTM 9.35
    2747 சூழ் கடலுள்
    பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் *
    மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் *
    தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும் *
    கன்னியரை இல்லாத காட்சியாள் * 37
  • PTM 9.36
    2748 தன்னுடைய
    இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய் *
    மன்னு மணி வரைத் தோள் மாயவன் * 38
  • PTM 9.37
    2749 பாவியேன்
    என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள் *
    மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய் *
    கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர் *
    மன்னிய பேர் இன்பம் எய்தினாள் * 39