PTM 10.41

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2753 பாவியேற்கு என்னுறுநோய் யானுரைப்பக்கேண்மின் *
இரும்பொழில்சூழ் மன்னுமறையோர் திருநறையூர்மாமலைபோல் *
பொன்னியலுமாடக் கவாடம்கடந்துபுக்கு *
என்னுடையகண்களிப்ப நோக்கினேன் * -
2753 pāviyeṟku ĕṉ uṟu noy yāṉ uraippak kel̤miṉ *
irum pŏzhil cūzh maṉṉum maṟaiyor tirunaṟaiyūr mā malai pol *
pŏṉ iyalum māṭak kavāṭam kaṭantu pukku *
ĕṉṉuṭaiya kaṇ kal̤ippa nokkiṉeṉ * 43

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2753. I will tell how I suffer from love—listen. I entered the golden door of the palace studded with diamonds, as large as the mountain in Thirunaraiyur surrounded with thick groves where good Vediyars recite the Vedās and I saw the lord there and my eyes rejoiced. His divine chest, mouth, feet, beautiful hands and eyes shone like flowers blooming in a forest on a golden mountain. His chest is adorned with a long thread and he wears arm bracelets, shining earrings, chains, a tall crown studded with gems that shines like the bright sun as he shines like an emerald hill. (43-45)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாவியேற்கு பாவியான; என் உறுநோய் எனக்கு நேர்ந்த நோயை; யான் உரைப்ப நானே சொல்ல; கேள்மின் கேளுங்கள்; இரும் விசாலமான; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; மன்னு மறையோர் வைதிகர்கள் வாழும்; திரு நறையூர் திருநறையூரின்; மா மலை போல் பெரிய மலை போன்றதும்; பொன் இயலும் தங்கமயமான; மாடக் கவாடம் ஸந்நிதியின் கதவை; கடந்து புக்கு திறந்து கொண்டு போய்; என்னுடைய கண் என் கண்கள்; களிப்ப களிக்கும்படி; நோக்கினேன் உற்றுப்பார்த்தேன்
en uṛu nŏy the disease which happened to me; yān uraippak kĕṇmin please listen to it, as ī narrate it.; iru pozhil sūzh surrounded by huge orchards; maṛaiyŏr mannum place inhabited by vaidhikas (those who follow vĕdhas); thirunaṛaiyūr at thirunaṛaiyūr; mā malaipŏl pon iyalum mādam kavādam kadandhu pukku managing to cross the divine door of the sannidhi (place inside a temple where emperumān’s divine form resides), which is like a huge mountain and which is like gold; ennudaiya kaṇ kal̤ippa nŏkkinĕn ī saw such that my eyes rejoiced.