PTM 10.38 2750 மற்று இவை தான் என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்? * மன்னு மலை அரையன் பொன் பாவை * 40
PTM 10.39 2751 வாள் நிலா மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும் * அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் * பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல * தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து * ஆங்கு அன்ன அருந் தவத்தின் ஊடு போய் * 41
PTM 10.40 2752 ஆயிரம் தோள் மன்னு கரதலங்கள் மட்டித்து * மாதிரங்கள் மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் * பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப * மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும் * தன்னின் உடனே சுழலச் சுழன்று ஆடும் * கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி * அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே? * பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் * 42
PTM 10.41 2753 பாவியேற்கு என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் * இரும் பொழில் சூழ் மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல் * பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு * என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் * 43
PTM 10.42 2754 நோக்குதலும் மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் * பன்னு கரதலமும் கண்களும் * பங்கயத்தின் 44
PTM 10.43 2755 பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல் * மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும் * மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் * துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப * மன்னு மரதகக் குன்றின் மருங்கே * ஓர் இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான் * 45