PTM 10.40

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2752 ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து *
மாதிரங்கள் மின்னியெரிவீச மேலெடுத்தசூழ்கழற்கால் *
பொன்னுலகமேழும்கடந்தும்பர்மேற்சிலும்ப *
மன்னுகுலவரையும் மாருதமும்தாரகையும் *
தன்னினுடனே சுழலச்சுழன்றாடும் *
கொல்நவிலும் மூவிலைவேல் கூத்தன்பொடியாடி *
அன்னவன்தன் பொன்னகலம் சென்றாங்கணைந்திலளே? *
பன்னியுரைக்குங்கால் பாரதமாம் * -
2752 āyiram tol̤ maṉṉu karatalaṅkal̤ maṭṭittu *
mātiraṅkal̤ miṉṉi ĕri vīca mel ĕṭutta cūzh kazhal kāl *
pŏṉ ulakam ezhum kaṭantu umpar mel cilumpa *
maṉṉu kula varaiyum mārutamum tārakaiyum *
taṉṉiṉ uṭaṉe cuzhalac cuzhaṉṟu āṭum *
kŏl navilum mūvilai vel kūttaṉ pŏṭi āṭi *
aṉṉavaṉ taṉ pŏṉ akalam cĕṉṟu āṅku aṇaintilal̤e? *
paṉṉi uraikkuṅkāl pāratam ām * 42

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2750

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயிரம் தோள் ஆயிரம் தோள்கள்; மன்னு பொருந்திய; கரதலங்கள் கைகளை எல்லாத் திசைகளிலும்; மட்டித்து வியாபிக்கச்செய்து; மாதிரங்கள் மின்னி திக்குகள் மின்னி; எரி வீச நெருப்புப் பொறி கிளம்பும்படி; மேல் எடுத்து மேற்புறமாகத் தூக்கின; சூழ் கழல் கால் வீரக்கழலணிந்த ஒரு பாதம்; பொன் உலகம் மேலுலகங்களை; ஏழும் கடந்து எல்லாம் ஆக்கிரமித்து; உம்பர் மேல் மேலே மேலே ஒற்றைக்காலை; சிலும்ப உயரத் தூக்கி; மன்னு நிலையாக நிற்கிற; குல வரையும் குல பர்வதங்களும்; மாருதமும் காற்றும்; தாரகையும் நக்ஷத்திரங்களும்; தன்னின் தன்னோடு; உடனே சுழல கூடவே சுழன்று வர; சுழன்று ஆடும் தானும் சுழன்று ஆடுகின்றவனும்; கொல் நவிலும் மிகவும் கூர்மையான; மூவிலை மூன்று இலைகளையுடைய; வேல் சூலத்தை உடையவனும்; கூத்தன் கூத்தாடி என்று பெயர் பெற்றவனும்; பொடி ஆடி பஸ்மத்தைத் தரித்தவனும்; அன்னவன் தன் ஆகிய சிவபெருமானின்; பொன் அகலம் சென்று ஆங்கு அழகிய மார்பை பார்வதி; அணைந்திலளே? தழுவிக்கொள்ளவில்லையோ?; பன்னி இது மாதிரி உதாரணங்கள்; உரைக்குங்கால் கூறப் போனால்; பாரதமாம் அது இன்னொரு மகாபாரதம் போல விரியும்
āyiram thŏl̤ mannu karathalangal̤ mattiththu (ṣiva) spreading his hands with thousands of shoulders in all directions; mādhirangal̤ directions; minni eri vīsa such that fire and smoke got emitted; mĕl eduththa lifted in the top direction; kazhal sūzh kāl one foot with a valorous anklet; pon ulagam ĕzhum kadandhu going past the beautiful worlds above; umbar mĕl silumba extending (the single foot) more and more, high above; mannu kulam varaiyum mārudhamum thāragaiyum thannudanĕ suzhala the firmly standing kula parvathams (mountains which sustain earth), wind and stars spinning with him; suzhanṛu ādum one who was himself dancing with a spin; kol navilum mū ilai vĕl one who has the weapon sūlam (spear), which has three leaves [sharp edges], which indulges in the occupation of killing; kūththan one who is famously called as a dancer; podiyādi one who is famous for applying ash all over his body; annavan than sivapirān (rudhra) who is like that; pon agalam āngu senṛu aṇaindhilal̤ĕ did she not go to him and embrace his beautiful chest?; pāviyĕṛku for me, the sinful person; panni uraikkum kāl if ī have to say more expansively (citing more examples); bāradhamam ām it will end just like mahābāradham [will be so huge]