PTM 10.39

சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்

2751 வாள்நிலா மின்னுமணிமுறுவல் செவ்வாயுமையென்னும் *
அன்னநடைய அணங்கு நுடங்கிடைசேர் *
பொன்னுடம்புவாடப் புலனைந்தும்நொந்தகல *
தன்னுடையகூழைச் சடாபாரம்தாம்தரித்து * ஆங்கு
அன்னவருந்தவத்தினூடுபோய் * -
2751 vāl̤ nilā miṉṉum aṇi muṟuval cĕv vāy umai ĕṉṉum *
aṉṉa naṭaiya aṇaṅku nuṭaṅku iṭai cer *
pŏṉ uṭampu vāṭa pulaṉ aintum nŏntu akala *
taṉṉuṭaiya kūzhaic caṭāpāram tāṉ tarittu * āṅku
aṉṉa arun tavattiṉ ūṭu poy * 41

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2750

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாள் நிலா ஒளியுடைய நிலாப்போல்; மின்னும் விளங்கும்; அணி முறுவல் அழகிய புன்னகையோடு கூடின; செவ்வாய் சிவந்த அதரத்தையுடையவளான; உமை என்னும் உமை என்பவள்; அன்ன நடைய அன்ன நடையுடையவளான; அணங்கு தெய்வப்பெண்ணான பார்வதி; நுடங்கு இடை சேர் துவண்ட இடையோடு; பொன் உடம்பு வாட அழகிய உடம்பு வாடவும்; தன்னுடைய கூழை தன்னுடைய கூந்தலை; சடாபாரம் தான் ஜடையாகும்படி; தரித்து ஆங்கு தரித்து; புலன் ஐந்தும் ஐம்புலன்களையும்; நொந்து அகல வருந்தி நீக்கவும்; அன்ன அருந் தவத்தின் அத்தகைய கடுமையான; ஊடு போய் தவம் செய்து என்ன பெற்றாள் என்றால்
vāl̤ nilā minnu maṇi muṛuval sem vāy having a reddish mouth, with a beautiful smile matching the radiant moon; umai ennum having the name umā; annam nadaiya aṇangu the divine lady (pārvathi) who has the gait of a swan; nudangu idai sĕr pon udambnu vāda her beautiful form with the quivering waist, withering; pulan aindhum nondhu agala her five senses getting distressed and leaving her; thannudaiya kūzhai her tresses; sadābāram thān thariththu she made it into matted hair and wore it; anna aru thavaththinūdu ŏy completing that great penance (when asked what benefit she derived)