Chapter 6

Thirukkurungudi 2 - (அக்கும் புலியின்)

திருக்குறுங்குடி 2
Thirukkurungudi 2 - (அக்கும் புலியின்)
The presiding deity of Thirukkurungudi is known as Vaishnava Nambi, and the Thayar is Kurungudivalli. Scholars say that it was by the grace of Vaishnava Nambi that Nammalvar incarnated. Assuming the role of the heroine, the āzhvār sings to Vaishnava Nambi of Thirukkurungudi, pleading to be united with Him. The āzhvār praises the Lord's quality of giving + Read more
திருக்குறுங்குடி எம்பெருமானின் திருநாமம் வைஷ்ணவநம்பி. தாயார் குறுங்குடிவல்லி. வைஷ்ணவ நம்பியின் அருளால்தான் நம்மாழ்வார் திருவவதாரம் செய்தார் என்பர் அறிஞர். ஆழ்வார் தம்மைத் தலைவியாக பாவித்துக்கொண்டு, குறுங்குடிப் பெருமானிடம் தம்மைச் சேர்த்துவிடுமாறு ஈண்டுப் பாடியுள்ளார். தேவதாந்தரத்திற்கும் + Read more
Verses: 1798 to 1807
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will not get affected by the results of karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 9.6.1

1798 அக்கும்புலியினதளும் உடையார்அவரொருவர் *
பக்கம்நிற்கநின்ற பண்பரூர்போலும் *
தக்கமரத்தின் தாழ்சினையேறி * தாய்வாயில்
கொக்கின்பிள்ளை வெள்ளிறவுண்ணும்குறுங்குடியே. (2)
1798 ## அக்கும் புலியின் * அதளும் உடையார் * அவர் ஒருவர்
பக்கம் நிற்க நின்ற * பண்பர் ஊர்போலும் **
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி * தாய் வாயில்
கொக்கின் பிள்ளை * வெள் இறா உண்ணும் குறுங்குடியே 1
1798 ## akkum puliyiṉ * atal̤um uṭaiyār- * avar ŏruvar
pakkam niṟka niṉṟa * paṇpar ūrpolum- **
takka marattiṉ tāzh ciṉai eṟi * tāy vāyil
kŏkkiṉ pil̤l̤ai * vĕl̤ iṟā uṇṇum kuṟuṅkuṭiye 1

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1798. The good-natured god who has with him Shivā wearing a garland of skulls and a tiger skin around his waist stays in Thirukkurungudi where a heron fledgling climbs on the small branch of a tree, takes a vellira fish from its mother and eats.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கொக்கின் பிள்ளை கொக்கின் குஞ்சு; தக்க மரத்தின் தனக்கு தகுந்த மரத்தின்; தாழ் தாழ்ந்த; சினை ஏறி கிளை ஏறி; தாய் வாயில் தாய் வாயிலிருக்கும்; வெள் இறா ‘வெள் இறா’ என்னும் மீனை; உண்ணும் உண்ணும்; குறுங்குடியே திருக்குறுங்குடி என்னும் ஊர்; அக்கும் எலும்பையும்; புலியின் அதளும் புலிதோலையும்; உடையார் தரித்தவரான; அவர் ஒருவர் சிவன்; பக்கம் அருகில் நிற்க; நிற்க அவருக்கும் இடம் கொடுத்த; பண்பர் நற்குணங்களுடையவரான; நின்ற பெருமான் நின்ற; ஊர் போலும் ஊர் போலும்

PT 9.6.2

1799 துங்காராரவத்திரைவந்துலவத் தொடுகடலுள் *
பொங்காரரவில்துயிலும் புனிதரூர்போலும் *
செங்காலன்னம் திகழ்தண்பணையில்பெடையோடும் *
கொங்கார்கமலத்தலரில்சேரும்குறுங்குடியே.
1799 துங்க ஆர் அரவத் * திரை வந்து உலவ * தொடு கடலுள்
பொங்கு ஆர் அரவில் துயிலும் * புனிதர் ஊர்போலும் **
செங் கால் அன்னம் * திகழ் தண் பணையில் பெடையோடும் *
கொங்கு ஆர் கமலத்து * அலரில் சேரும் குறுங்குடியே 2
1799 tuṅka ār aravat * tirai vantu ulava * tŏṭu kaṭalul̤
pŏṅku ār aravil tuyilum * puṉitar ūrpolum- **
cĕṅ kāl aṉṉam * tikazh taṇ paṇaiyil pĕṭaiyoṭum *
kŏṅku ār kamalattu * alaril cerum kuṟuṅkuṭiye 2

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1799. Our pure lord resting on Adisesha on the ocean where the waves never cease rolling stays in Thirukkurungudi where male red-legged swans live with their mates on the beautiful lotuses that drip with honey in cool flourishing fields.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
செங் கால் சிவந்தகால்களையுடைய; அன்னம் அன்னம்; திகழ் தண் அழகிய குளிர்ந்த; பணையில் நீர் நிலைகளின்; பெடையோடும் பெடையோடு; கொங்கு ஆர் மணம்மிக்க; கமலத்து அலரில் தாமரைப்பூவில்; சேரும் சேர்ந்துவாழுமிடமான; குறுங்குடியே திருக்குறுங்குடி என்னும் ஊர்; துங்கம் ஆர் ஓங்கிய; அரவ பெரும் ஆரவாரமுள்ள; திரை அலைகள்; வந்து உலவ வந்து உலாவ; தொடு கடலுள் ஆழ்ந்த கடலில்; பொங்கு ஆர் பெரிய சரீரமுடைய; அரவில் ஆதிசேஷன் மீது; துயிலும் துயிலும்; புனிதர் எம்பெருமானின்; ஊர் போலும் ஊர் போலும்

PT 9.6.3

1800 வாழக்கண்டோம்வந்துகாண்மின்தொண்டீர்காள்! *
கேழல் செங்கண்மாமுகில்வண்ணர்மருவுமூர் *
ஏழைச்செங்கால் இன்துணைநாரைக்குஇரைதேடி *
கூழைப்பார்வைக் கார்வயல்மேயும்குறுங்குடியே.
1800 வாழக் கண்டோம் * வந்து காண்மின் தொண்டீர்காள்! *
கேழல் செங்கண் * மா முகில் வண்ணர் மருவும் ஊர் **
ஏழைச் செங்கால் * இன் துணை நாரைக்கு இரை தேடி *
கூழைப் பார்வைக் * கார் வயல் மேயும் குறுங்குடியே 3
1800 vāzhak kaṇṭom * vantu kāṇmiṉ tŏṇṭīrkāl̤! *
kezhal cĕṅkaṇ * mā mukil vaṇṇar maruvum ūr **
ezhaic cĕṅkāl * iṉ tuṇai nāraikku irai teṭi *
kūzhaip pārvaik * kār vayal meyum kuṟuṅkuṭiye-3

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1800. We have found the way to be saved. Thirumāl O devotees, come and see! Our lord with a dark cloud-color and beautiful eyes who took the form of a boar to save the earth goddess from the underworld stays in Thirukkurungudi where a heron searches for food in the flourishing paddy fields to take to his beloved red-legged mate.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தொண்டீர்காள்! தொண்டர்களே!; வாழக் கண்டோம் வாழ வழி கண்டோம்; வந்து காண்மின் வந்து பாருங்கள்; ஏழை மிருதுவான; செங்கால் சிவந்தகால்களுயுடைய; இன் துணை நாரைக்கு இனிய ஆண் நாரைக்கு; இரை தேடி உணவு கொண்டு வந்து கொடுக்கும்; கூழை க்ருத்ரிமமான; பார்வை பார்வையையுடைய பெண் நாரை; கார் வயல் செழித்த வயல்களிலே; மேயும் மேய்ந்து நிற்கும்; கேழல் வராஹமாக வந்த பெருமான்; செங்கண் சிவந்த கண்களுடையவராய்; மா முகில் வண்ணர் மேக வண்ணராய்; மருவும் ஊர் விரும்பி வாழும் ஊர்; குறுங்குடியே திருக்குறுங்குடியே!

PT 9.6.4

1801 சிரமுனைந்துமைந்தும் சிந்தச்சென்று * அரக்கன்
உரமும்கரமும்துணித்த உரவோனூர்போலும் *
இரவும்பகலும் ஈன்தேன் முரல * மன்றெல்லாம்
குரவின்பூவேதான் மணம்நாறும்குறுங்குடியே.
1801 சிரம் முன் ஐந்தும் ஐந்தும் * சிந்தச் சென்று * அரக்கன்
உரமும் கரமும் துணித்த * உரவோன் ஊர்போலும் **
இரவும் பகலும் * ஈன் தேன் முரல * மன்று எல்லாம்
குரவின் பூவே தான் * மணம் நாறும் குறுங்குடியே 4
1801 ciram muṉ aintum aintum * cintac cĕṉṟu * arakkaṉ
uramum karamum tuṇitta * uravoṉ ūrpolum- **
iravum pakalum * īṉ teṉ murala * maṉṟu ĕllām
kuraviṉ pūve-tāṉ * maṇam nāṟum kuṟuṅkuṭiye 4

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1801. The heroic god who went to Lankā fought and pierced the chest of the ten-headed Rakshasā Rāvana and cut off his hands - stays in Thirukkurungudi where bees that make honey swarm night and day in the mandram and kuravam blossoms spread their fragrance everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
இரவும் பகலும் இரவும் பகலும்; ஈன் தேன் வண்டுகள் இனிமையாக; முரல பாடும்; மன்று எல்லாம் இங்கே இத்தலத்தில்; குரவின் பூவே தான் குரவ மர பூக்களில்; மணம் நாறும் மணம் மிக்க; சிரம் ஐந்தும் ஐந்தும் பத்துத் தலைகளும்; சிந்த வீழ; சென்று இலங்கை சென்று; முன் அரக்கன் முன்பு அரக்கன் ராவணனின்; உரமும் மார்பையும்; கரமும் கைகளையும்; துணித்த துணித்த; உரவோன் எம்பெருமானின் ஊர்; குறுங்குடியே திருக்குறுங்குடி; ஊர் போலும் ஊர் போலும்

PT 9.6.5

1802 கவ்வைக்களிற்றுமன்னர்மாளக் கலிமான்தேர்
ஐவர்க்காய் * அன்றுஅமரில் உய்த்தான்ஊர்போலும் *
மைவைத்திலங்குகண்ணார்தங்கள் மொழியொப்பான் *
கொவ்வைக்கனிவாய்க் கிள்ளைபேசும்குறுங்குடியே.
1802 கவ்வைக் களிற்று மன்னர் மாள * கலி மான் தேர்
ஐவர்க்கு ஆய் * அன்று அமரில் உய்த்தான் ஊர்போலும் **
மை வைத்து இலங்கு * கண்ணார் தங்கள் மொழி ஒப்பான் *
கொவ்வைக் கனி வாய்க் * கிள்ளை பேசும் குறுங்குடியே 5
1802 kavvaik kal̤iṟṟu maṉṉar māl̤a * kali māṉ ter
aivarkku āy * aṉṟu amaril uyttāṉ ūrpolum- **
mai vaittu ilaṅku * kaṇṇār-taṅkal̤ mŏzhi ŏppāṉ *
kŏvvaik kaṉi vāyk * kil̤l̤ai pecum kuṟuṅkuṭiye 5

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1802. The lord who drove the chariot in Bhārathā war for the five Pāndavās and destroyed the heroic Kauravā kings fighting as they rode their strong elephants - stays in Thirukkurungudi where parrots with mouths like sweet kovvai fruits speak like beautiful women with eyes that are bright and darkened with kohl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மை வைத்து இலங்கு மையிட்ட ஒளியுள்ள; கண்ணார் தங்கள் பெண்களின்; மொழி ஒப்பான் வார்த்தை போல; கொவ்வை கோவை; கனி பழம் போல் சிவந்த; வாய்க் கிள்ளை அலகையுடைய கிளிகள்; பேசும் பேசும்; கவ்வை பேரொலிகொண்ட; களிற்று யானைகளை யுடைய; மன்னர் மாள மன்னர்கள் மாள; ஐவர்க்கு ஆய் பஞ்சபாண்டவர்களுக்காக; அன்று முன்பு ஒரு சமயம்; அமரில் பாரதயுத்தத்தில்; கலி மாத் தேர் திடமான பெரிய தேரை; உய்த்தான் நடத்தின பெருமானுடைய ஊர்; குறுங்குடியே திருக்குறுங்குடி; ஊர் போலும் ஊர் போலும்

PT 9.6.6

1803 தீநீர்வண்ணமாமலர்கொண்டுவிரையேந்தி *
தூநீர்பரவித் தொழுமின்எழுமின்தொண்டீர்காள்! *
மாநீர்வண்ணர் மருவியுறையுமிடம் * வானில்
கூனீர்மதியை மாடம்தீண்டும்குறுங்குடியே.
1803 தீ நீர் வண்ண * மா மலர் கொண்டு விரை ஏந்தி *
தூ நீர் பரவித் * தொழுமின் எழுமின் தொண்டீர்காள்! **
மா நீர் வண்ணர் * மருவி உறையும் இடம் * வானில்
கூன் நீர் மதியை * மாடம் தீண்டும் குறுங்குடியே 6
1803 tī nīr vaṇṇa * mā malar kŏṇṭu virai enti *
tū nīr paravit * tŏzhumiṉ ĕzhumiṉ tŏṇṭīrkāl̤!- **
mā nīr vaṇṇar * maruvi uṟaiyum iṭam * vāṉil
kūṉ nīr matiyai * māṭam tīṇṭum kuṟuṅkuṭiye 6

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1803. O devotees, come, take lamps, water, beautiful flowers and fragrances, sprinkle pure water and worship the lord. The ocean-colored god wishes to stay in Thirukkurungudi where the palaces touch the crescent moon in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தொண்டீர்காள்! தொண்டர்களே!; தூ நீர் தூய்மையையுடைய நீங்கள்; தீ தூப தீபங்களுக்காக அக்னியையும்; நீர் அர்க்கியத்துக்காக நீரையும்; வண்ண மா பல வண்ண; மலர் மலர்களையும்; விரை மணமுள்ள பொருள்களையும்; ஏந்தி கொண்டு எடுத்துக்கொண்டு; பரவி எம்பெருமானை வாயால் பாடி; தொழுமின் கைகளைக்கூப்பி தொழுது; எழுமின் உய்வு அடையுங்கள்; வானில் வானில்; கூன் நீர் வளைந்த இயற்கையாக உடைய; மதியை தீண்டும் சந்திரனை தொடுமளவு; மாடம் உயர்ந்த மாடங்களையுடைய; குறுங்குடியே திருக்குறுங்குடி; மா நீர் கடல் போன்ற; வண்ணர் நிறமுடையவன்; மருவி விரும்பி; உறையும் வாழும் பெருமான்; இடம் இருக்குமிடம் திருக்குறுங்குடி

PT 9.6.7

1804 வல்லிச் சிறுநுண்ணிடையாரிடை நீர்வைக்கின்ற *
அல்லல்சிந்தைதவிர அடைமின் அடியீர்காள்! *
சொல்லில்திருவேயனையார் கனிவாயெயிறொப்பான் *
கொல்லைமுல்லை மெல்லரும்பீனும்குறுங்குடியே.
1804 வல்லிச் சிறு நுண் இடையாரிடை * நீர் வைக்கின்ற *
அல்லல் சிந்தை தவிர * அடைமின் அடியீர்காள்! **
சொல்லில் திருவே அனையார் * கனி வாய் எயிறு ஒப்பான் *
கொல்லை முல்லை * மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே 7
1804 vallic ciṟu nuṇ iṭaiyāriṭai * nīr vaikkiṉṟa *
allal cintai tavira * aṭaimiṉ aṭiyīrkāl̤!- **
cŏllil tiruve aṉaiyār * kaṉi vāy ĕyiṟu ŏppāṉ *
kŏllai mullai * mĕl arumpu īṉum kuṟuṅkuṭiye 7

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1804. O devotees, if you want to remove the desires that you have for women with vine-like waists, go to Thirukkurungudi and worship the lord where the mullai buds blooming slowly in the backyard of the houses are as beautiful as the teeth of the women with mouths as sweet as fruits and with beauty like that of Lakshmi.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அடியீர்காள்! பக்தர்களே!; வல்லிச் கொடிபோன்ற; சிறு நுண் நுண்ணிய; இடையாரிடை இடையுடைய பெண்களிடத்தில்; நீர் நீங்கள்; வைக்கின்ற வைத்த; அல்லல் துன்பம் தரும்; சிந்தை தவிர ஆசையைத் தவிர்த்து; அடைமின் குறுங்குடியை அடையுங்கள்; அனையார் அங்குள்ள பெண்களின் அழகை; சொல்லில் சொல்லப் பார்க்கில்; திருவே மஹா லக்ஷ்மியை ஒத்திருக்கின்ற; கனி கோவைக்கனிபோன்ற பெண்களின்; வாய் வாயிலுள்ள; எயிறு ஒப்பான் முத்துப் பல்வரிசைப்போல்; கொல்லை கொல்லையிலுள்ள; முல்லை முல்லைக் கொடி; ஈனும் கொடுக்கும்; மெல் அழகிய; அரும்பு அரும்புகளையுடைய; குறுங்குடியே திருக்குறுங்குடியை; அடைமின் அடையுங்கள்

PT 9.6.8

1805 நாராரிண்டை நாண்மலர்கொண்டுநம்தமர்காள்! *
ஆராஅன்போடு எம்பெருமானூரடைமின்கள் *
தாராவாரும் வார்புனல்மேய்ந்துவயல்வாழும் *
கூர்வாய்நாரை பேடையொடாடும்குறுங்குடியே.
1805 நார் ஆர் இண்டை * நாள் மலர் கொண்டு நம் தமர்காள் *
ஆரா அன்போடு * எம்பெருமான் ஊர அடைமின்கள் **
தாரா ஆரும் * வார் புனல் மேய்ந்து வயல் வாழும் *
கூர் வாய் நாரை * பேடையொடு ஆடும் குறுங்குடியே 8
1805 nār ār iṇṭai * nāl̤ malar kŏṇṭu nam tamarkāl̤ *
ārā aṉpoṭu * ĕmpĕrumāṉ ūra-aṭaimiṉkal̤- **
tārā ārum * vār puṉal meyntu vayal vāzhum *
kūr vāy nārai * peṭaiyŏṭu āṭum kuṟuṅkuṭiye 8

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1805. O friends, take fresh flowers strung together into garlands and go lovingly to Thirukkurungudi and worship the highest lord there where male herons with sharp beaks live with their mates in the fields and eat fish from the water while sharp-beaked nārai birds play with their mates.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நம் தமர்காள்! பக்தர்களே! நீங்கள்; நார் ஆர் நாரால் தொடுத்த; இண்டை மாலைகளையும்; நாள் அப்போதலர்ந்த; மலர் பூக்களையும்; கொண்டு எடுத்துக் கொண்டு; ஆரா அன்போடு பரம பக்தியோடு; தாரா அங்கு தாரா என்னும்; ஆரும் பறவைகள்; வார் புனல் நீர் நிலங்களில்; மேய்ந்து மேய்ந்து; வயல் வாழும் வயல்களில் வாழும்; கூர் வாய் கூரிய அலகையுடைய; நாரை நாரை; பேடையோடு ஆடும் பெடையோடு ஆடும்; எம் பெருமான் எம்பெருமானின்; ஊர் ஊரான; குறுங்குடியே திருக்குறுங்குடியை; அடைமின்கள் அடையுங்கள்

PT 9.6.9

1806 நின்றவினையும்துயரும்கெட மாமலரேந்தி *
சென்றுபணிமின்எழுமின் தொழுமின்தொண்டீர்காள்! *
என்றும்இரவும்பகலும் வரிவண்டுஇசைபாட *
குன்றின்முல்லை மன்றிடைநாறும்குறுங்குடியே.
1806 நின்ற வினையும் துயரும் கெட * மா மலர் ஏந்தி *
சென்று பணிமின் எழுமின் தொழுமின் * தொண்டீர்காள் **
என்றும் இரவும் பகலும் * வரி வண்டு இசை பாட *
குன்றின் முல்லை * மன்றிடை நாறும் குறுங்குடியே 9
1806 niṉṟa viṉaiyum tuyarum kĕṭa * mā malar enti *
cĕṉṟu paṇimiṉ ĕzhumiṉ tŏzhumiṉ * tŏṇṭīrkāl̤ **
ĕṉṟum iravum pakalum * vari vaṇṭu icai pāṭa *
kuṉṟiṉ mullai * maṉṟiṭai nāṟum kuṟuṅkuṭiye 9

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1806. O devotees, if you want to be rid of the results of your bad karmā and the troubles of your lives, carry fresh flowers and worship the lord in Thirukkurungudi where night and day the lined bees sing and the fragrance of the mullai flowers from the hills spreads everywhere in the mandram.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தொண்டீர்காள்! தொண்டர்களே!; நின்ற வினையும் செய்த பாபங்களும்; துயரும் செய்யும் பாபங்களும்; கெட கெட வேண்டுமானால்; மா மலர் சிறந்த புஷ்பங்களை; ஏந்தி எடுத்துக் கொண்டு எப்போதும்; இரவும் பகலும் இரவும் பகலும்; என்றும் என்றும் எப்போதும்; வரி வண்டு வரி வண்டுகள்; இசை பாட இசை பாட; குன்றின் குன்றிலுள்ள; முல்லை முல்லைப் பூக்கள்; மன்றிடை எல்லா இடங்களிலும்; நாறும் மணம் வீச; குறுங்குடியே திருக்குறுங்குடியை; சென்று அடைந்து; தொழுமின் தொழுது; பணிமின் வணங்குங்கள்; எழுமின் உய்வடையுங்கள்

PT 9.6.10

1807 சிலையால்இலங்கைசெற்றான் மற்றோர்சினவேழம் *
கொலையார்கொம்புகொண்டான்மேய குறுங்குடிமேல் *
கலையார்பனுவல்வல்லான் கலியனொலிமாலை *
நிலையார்பாடல்பாடப் பாவம்நில்லாவே. (2)
1807 ## சிலையால் இலங்கை செற்றான் * மற்று ஓர் சின வேழம் *
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய * குறுங்குடிமேல் **
கலை ஆர் பனுவல் வல்லான் * கலியன் ஒலி மாலை *
நிலை ஆர் பாடல் பாடப் * பாவம் நில்லாவே 10
1807 ## cilaiyāl ilaṅkai cĕṟṟāṉ * maṟṟu or ciṉa vezham *
kŏlai ār kŏmpu kŏṇṭāṉ meya * kuṟuṅkuṭimel **
kalai ār paṉuval vallāṉ * kaliyaṉ ŏli mālai *
nilai ār pāṭal pāṭap * pāvam nillāve 10

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1807. The good poet Kaliyan composed a musical garland of beautiful pāsurams on the lord of Thirukkurungudi who shot arrows, destroying Lankā and who killed the angry elephant Kuvalayābeedam with murderous tusks. If devotees learn and sing this musical garland of pāsurams, their karmā will disappear.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
சிலையால் அம்புகளால்; இலங்கை இலங்கையை; செற்றான் அழித்தவனும்; மற்று ஓர் மேலும்; கொலையார் துன்புறுத்திக் கொண்டிருந்த; சின சீற்றங்கொண்ட; வேழம் ஒப்பற்ற ஒரு யானையின்; கொம்பு கொம்பை முறித்த; கொண்டான் மேய பெருமானிருக்குமிடமான; குறுங்குடிமேல் திருக்குறுங்குடியைக் குறித்து; கலை ஆர் பனுவல் கலை மிகுந்த கவி பாட; வல்லான் கலியன் வல்ல திருமங்கை ஆழ்வார்; ஒலி மாலை அருளிச்செய்த; நிலை ஆர் நிலைநிற்கும் பாசுரங்களாகிய; பாடல் பாட இவைகளைப் பாடுபவர்களுக்கு; பாவம் நில்லாவே பாவம் ஏற்படாது