Chapter 6

Thirukkurungudi 2 - (அக்கும் புலியின்)

திருக்குறுங்குடி 2
Thirukkurungudi 2 - (அக்கும் புலியின்)
The presiding deity of Thirukkurungudi is known as Vaishnava Nambi, and the Thayar is Kurungudivalli. Scholars say that it was by the grace of Vaishnava Nambi that Nammalvar incarnated. Assuming the role of the heroine, the āzhvār sings to Vaishnava Nambi of Thirukkurungudi, pleading to be united with Him. The āzhvār praises the Lord's quality of giving + Read more
திருக்குறுங்குடி எம்பெருமானின் திருநாமம் வைஷ்ணவநம்பி. தாயார் குறுங்குடிவல்லி. வைஷ்ணவ நம்பியின் அருளால்தான் நம்மாழ்வார் திருவவதாரம் செய்தார் என்பர் அறிஞர். ஆழ்வார் தம்மைத் தலைவியாக பாவித்துக்கொண்டு, குறுங்குடிப் பெருமானிடம் தம்மைச் சேர்த்துவிடுமாறு ஈண்டுப் பாடியுள்ளார். தேவதாந்தரத்திற்கும் + Read more
Verses: 1798 to 1807
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will not get affected by the results of karma
  • PT 9.6.1
    1798 ## அக்கும் புலியின் * அதளும் உடையார் * அவர் ஒருவர்
    பக்கம் நிற்க நின்ற * பண்பர் ஊர்போலும் **
    தக்க மரத்தின் தாழ் சினை ஏறி * தாய் வாயில்
    கொக்கின் பிள்ளை * வெள் இறா உண்ணும் குறுங்குடியே 1
  • PT 9.6.2
    1799 துங்க ஆர் அரவத் * திரை வந்து உலவ * தொடு கடலுள்
    பொங்கு ஆர் அரவில் துயிலும் * புனிதர் ஊர்போலும் **
    செங் கால் அன்னம் * திகழ் தண் பணையில் பெடையோடும் *
    கொங்கு ஆர் கமலத்து * அலரில் சேரும் குறுங்குடியே 2
  • PT 9.6.3
    1800 வாழக் கண்டோம் * வந்து காண்மின் தொண்டீர்காள்! *
    கேழல் செங்கண் * மா முகில் வண்ணர் மருவும் ஊர் **
    ஏழைச் செங்கால் * இன் துணை நாரைக்கு இரை தேடி *
    கூழைப் பார்வைக் * கார் வயல் மேயும் குறுங்குடியே 3
  • PT 9.6.4
    1801 சிரம் முன் ஐந்தும் ஐந்தும் * சிந்தச் சென்று * அரக்கன்
    உரமும் கரமும் துணித்த * உரவோன் ஊர்போலும் **
    இரவும் பகலும் * ஈன் தேன் முரல * மன்று எல்லாம்
    குரவின் பூவே தான் * மணம் நாறும் குறுங்குடியே 4
  • PT 9.6.5
    1802 கவ்வைக் களிற்று மன்னர் மாள * கலி மான் தேர்
    ஐவர்க்கு ஆய் * அன்று அமரில் உய்த்தான் ஊர்போலும் **
    மை வைத்து இலங்கு * கண்ணார் தங்கள் மொழி ஒப்பான் *
    கொவ்வைக் கனி வாய்க் * கிள்ளை பேசும் குறுங்குடியே 5
  • PT 9.6.6
    1803 தீ நீர் வண்ண * மா மலர் கொண்டு விரை ஏந்தி *
    தூ நீர் பரவித் * தொழுமின் எழுமின் தொண்டீர்காள்! **
    மா நீர் வண்ணர் * மருவி உறையும் இடம் * வானில்
    கூன் நீர் மதியை * மாடம் தீண்டும் குறுங்குடியே 6
  • PT 9.6.7
    1804 வல்லிச் சிறு நுண் இடையாரிடை * நீர் வைக்கின்ற *
    அல்லல் சிந்தை தவிர * அடைமின் அடியீர்காள்! **
    சொல்லில் திருவே அனையார் * கனி வாய் எயிறு ஒப்பான் *
    கொல்லை முல்லை * மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே 7
  • PT 9.6.8
    1805 நார் ஆர் இண்டை * நாள் மலர் கொண்டு நம் தமர்காள் *
    ஆரா அன்போடு * எம்பெருமான் ஊர அடைமின்கள் **
    தாரா ஆரும் * வார் புனல் மேய்ந்து வயல் வாழும் *
    கூர் வாய் நாரை * பேடையொடு ஆடும் குறுங்குடியே 8
  • PT 9.6.9
    1806 நின்ற வினையும் துயரும் கெட * மா மலர் ஏந்தி *
    சென்று பணிமின் எழுமின் தொழுமின் * தொண்டீர்காள் **
    என்றும் இரவும் பகலும் * வரி வண்டு இசை பாட *
    குன்றின் முல்லை * மன்றிடை நாறும் குறுங்குடியே 9
  • PT 9.6.10
    1807 ## சிலையால் இலங்கை செற்றான் * மற்று ஓர் சின வேழம் *
    கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய * குறுங்குடிமேல் **
    கலை ஆர் பனுவல் வல்லான் * கலியன் ஒலி மாலை *
    நிலை ஆர் பாடல் பாடப் * பாவம் நில்லாவே 10