Chapter 4

Thirukkannapuram 4 - (விண்ணவர்-தங்கள் பெருமான்)

திருக்கண்ணபுரம் 4
Thirukkannapuram 4 - (விண்ணவர்-தங்கள் பெருமான்)
The āzhvār implores the bee, "O bee! Go and circle around the sacred Tulasi garland on the divine head of Sowriraja Perumal, who resides in Thirukannapuram, and return to hum near me." This section is referred to as "Kol Thumbi," where "Thumbi" denotes a type of bee.
வண்டே! திருக்கண்ணபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் சவுரிராஜப் பெருமாளின் திருமுடியின்மீதுள்ள திருத்துழாய் மாலையைச் சுற்றிச் சுற்றி வந்து ஊது என்று ஆழ்வார் வண்டினை வேண்டுகிறார். கோல்தும்பி என்று இப்பகுதி குறிப்பிடப்படும். தும்பி என்பது வண்டினங்களுள் ஒரு வகை.
Verses: 1678 to 1687
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 8.4.1

1678 விண்ணவர்தங்கள்பெருமான் திருமார்வன் *
மண்ணவரெல்லாம்வணங்கும் மலிபுகழ்சேர் *
கண்ணபுரத்தெம்பெருமான் கதிர்முடிமேல் *
வண்ணநறுந்துழாய் வந்தூதாய்கோல்தும்பீ! (2)
1678 ## விண்ணவர் தங்கள் பெருமான் * திருமார்வன் *
மண்ணவர் எல்லாம் வணங்கும் * மலி புகழ் சேர் **
கண்ணபுரத்து எம் பெருமான் * கதிர் முடிமேல் *
வண்ண நறுந் துழாய் * வந்து ஊதாய் கோல் தும்பீ 1
1678 ## viṇṇavar-taṅkal̤ pĕrumāṉ * tirumārvaṉ *
maṇṇavar ĕllām vaṇaṅkum * mali pukazh cer **
kaṇṇapurattu ĕm pĕrumāṉ * katir muṭimel *
vaṇṇa naṟun tuzhāy * vantu ūtāy-kol tumpī-1

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

l678. She says, “ O kol bee, come and blow on the pollen of the beautiful fragrant thulasi garland in the hair of the god of the gods in the sky who embraces beautiful Lakshmi on his chest. He stays in famous Thirukkannapuram where the whole world come and worships him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்ற வண்டே!; விண்ணவர் தங்கள் தேவர்களுக்கு; பெருமான் தலைவனும்; திருமார்வன் திருமகளை மார்பில் கொண்டவனும்; மண்ணவர் எல்லாம் உலகத்தவர்கள் எல்லாரும்; வணங்கும் வணங்குபவனும்; மலி புகழ் சேர் நிறைந்த கீர்த்தியை உடையவனுமான; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமானின்; கதிர் முடிமேல் ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள; வண்ண நறுந் அழகிய மணமுள்ள; துழாய் வந்து துளசியை கொண்டு வந்து; ஊதாய் நீ ஊதுவாய்

PT 8.4.2

1679 வேதமுதல்வன் விளங்குபுரிநூலன் *
பாதம்பரவிப் பலரும்பணிந்தேத்தி *
காதன்மைசெய்யும் கண்ணபுரத்தெம்பெருமான் *
தாதுநறுந்துழாய் தாழ்ந்தூதாய்கோல்தும்பீ!
1679 வேத முதல்வன் * விளங்கு புரி நூலன் *
பாதம் பரவிப் * பலரும் பணிந்து ஏத்தி **
காதன்மை செய்யும் * கண்ணபுரத்து எம் பெருமான் *
தாது நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 2
1679 veta mutalvaṉ * vil̤aṅku puri nūlaṉ *
pātam paravip * palarum paṇintu etti **
kātaṉmai cĕyyum * kaṇṇapurattu ĕm pĕrumāṉ *
tātu naṟun tuzhāy * tāzhntu ūtāy-kol tumpī-2

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1679. She says, “O kol bee, come and blow on the fragrant thulasi garland of the ancient god who created the Vedās, and is adorned with a shining thread on his chest. He stays in Thirukkannapuram as his devotees praise his feet, worship and love him. has not come to see me. What can I do? The hot sun that burned me has gone to sleep and I am pitiful. My long eyes do not close and this dark night is longer than an eon. When will it pass? I do not know. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேத முதல்வன் வேத முதல்வனாய்; விளங்கு புரி நூலன் பூணூல் தரித்தவனாய்; பலரும் பாதம் பரவி எல்லாரும் உன் திருவடிகளை; பணிந்து ஏத்தி வணங்கித் துதித்து; காதன்மை பக்தி; செய்யும் பண்ணுவதற்கு உரியனான; கண்ணபுரத்து கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமானின்; தாது நறும் தாதுக்களையுடைய மணம் மிக்க; துழாய் துளசியில்; தாழ்ந்து படிந்துள்ள நறுமணத்தை கொண்டு வந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்

PT 8.4.3

1680 விண்டமலரெல்லாம் ஊதிநீஎன்பெறுதி? *
அண்டமுதல்வன் அமரர்களெல்லாரும் *
கண்டுவணங்கும் கண்ணபுரத்தெம்பெருமான் *
வண்டுநறுந்துழாய் வந்தூதாய்கோல்தும்பீ!
1680 விண்ட மலர் எல்லாம் * ஊதி நீ என் பெறுதி? *
அண்ட முதல்வன் * அமரர்கள் எல்லாரும் **
கண்டு வணங்கும் * கண்ணபுரத்து எம் பெருமான் *
வண்டு நறுந் துழாய் * வந்து ஊதாய் கோல் தும்பீ 3
1680 viṇṭa malar ĕllām * ūti nī ĕṉ pĕṟuti? *
aṇṭa mutalvaṉ * amararkal̤ ĕllārum **
kaṇṭu vaṇaṅkum * kaṇṇapurattu ĕm pĕrumāṉ *
vaṇṭu naṟun tuzhāy * vantu ūtāy-kol tumpī-3

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1680. She says, “ O kol bee, come and blow on the fragrant thulasi garland swarming with bees of the lord who is the first one on the earth. He stays in Thirukkannapuram, and all the gods in the sky come there and worship him. What is the use of your blowing on flowers that have already opened?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்ட மலர் மலர்ந்த மலர்களிலெல்லாம்; ஊதி நீ ஊதி ஒலிசெய்து நீ; என் பெறுதி? என்ன பேறு பெறுகின்றாய்?; அண்ட முதல்வன் அண்டத்துக்கு முதல்வனாய்; அமரர்கள் எல்லாரும் தேவர்கள் எல்லாரும்; கண்டு கண்ணாரக் கண்டு; வணங்கும் வணங்கும்; கண்ணபுரத்து கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமானின்; வண்டு வண்டுகள் படிந்த; நறும் பரிமளம் மிக்க; துழாய் திருத்துழாயை; வந்து கொண்டு வந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்

PT 8.4.4

1681 நீர்மலிகின்றது ஓர்மீனாய்ஓராமையுமாய் *
சீர்மலிகின்றது ஓர்சிங்கவுருவாகி *
கார்மலிவண்ணன் கண்ணபுரத்தெம்பெருமான் *
தார்மலிதண்துழாய் தாழ்ந்தூதாய்கோல்தும்பீ!
1681 நீர் மலிகின்றது ஓர் * மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய் *
சீர் மலிகின்றது ஓர் * சிங்க உரு ஆகி **
கார் மலி வண்ணன் * கண்ணபுரத்து எம் பெருமான் *
தார் மலி தண் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 4
1681 nīr malikiṉṟatu or * mīṉ āy or āmaiyum āy *
cīr malikiṉṟatu or * ciṅka uru āki **
kār mali vaṇṇaṉ * kaṇṇapurattu ĕm pĕrumāṉ *
tār mali taṇ tuzhāy * tāzhntu ūtāy-kol tumpī-4

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1681. She says, “Oh kol bee, the dark cloud-colored lord who took the form of a fish, a turtle and a famed man-lion stays in Thirukkannapuram. Oh bee, come, taste the pollen of his cool, fragrant thulasi garland. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீர் மலிகின்றது கடலில் தோன்றிய; ஓர் மீன் ஆய் மத்ஸ்யாவதாரமாய்; ஓர் ஆமையும் ஆய் ஒப்பற்ற கூர்மாவதாரமுமாய்; சீர் மலிகின்றது சீர்மை மிகுந்த; ஓர் சிங்க உரு ஆகி நரசிம்ம அவதாரமுமாய்; கார் மலி மேகம் போன்ற; வண்ணன் வண்ணமுடையவனுமான; கண்ணபுரத்து கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமான்; தார் மலி மாலையிலிருக்கும்; தண் துழாய் குளிர்ந்த துளசியில்; தாழ்ந்து தாமதித்திருந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்

PT 8.4.5

1682 ஏரார்மலரெல்லாம் ஊதிநீஎன்பெறுதி? *
பாராருலகம் பரவ, பெருங்கடலுள் *
காராமையான கண்ணபுரத்தெம்பெருமான் *
தாரார்நறுந்துழாய் தாழ்ந்தூதாய்கோல்தும்பீ!
1682 ஏர் ஆர் மலர் எல்லாம் * ஊதி நீ என் பெறுதி? *
பார் ஆர் உலகம் * பரவ பெருங் கடலுள் **
கார் ஆமை ஆன * கண்ணபுரத்து எம் பெருமான் *
தார் ஆர் நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 5
1682 er ār malar ĕllām * ūti nī ĕṉ pĕṟuti? *
pār ār ulakam * parava pĕruṅ kaṭalul̤ **
kār āmai āṉa * kaṇṇapurattu ĕm pĕrumāṉ *
tār ār naṟun tuzhāy * tāzhntu ūtāy-kol tumpī-5

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1682. She says, “O kol bee, what do you gain by blowing on all these beautiful flowers? Come, blow on the pollen of the cool, fragrant thulasi garland of the lord of Thirukkannapuram praised by the whole world who took the form of a dark turtle in the large ocean. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏர் ஆர் அழகு நிரம்பிய; மலர் எல்லாம் புஷ்பங்களிலெல்லாம்; ஊதி நீ ஒலி செய்து நீ; என் பெறுதி? என்ன பேறு பெறுவாய்?; பார் ஆர் இப்பூமியில் இருக்கும்; உலகம் உயிரினங்களெல்லாம்; பரவ பெருங் கடலுள் வணங்குமாறு பெரிய கடலில்; கார் ஆமை ஆன பெரிய ஆமையாக அவதரித்த; கண்ணபுரத்து கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமானின்; தார் ஆர் மாலையில் இருக்கும்; நறுந் துழாய் மணம் மிக்க துளசியில்; தாழ்ந்து தாமதித்திருந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்

PT 8.4.6

1683 மார்வில்திருவன் வலனேந்துசக்கரத்தன் *
பாரைப்பிளந்த பரமன்பரஞ்சோதி *
காரில்திகழ் காயாவண்ணன்கதிர்முடிமேல் *
தாரில்நறுந்துழாய் தாழ்ந்தூதாய்கோல்தும்பீ!
1683 மார்வில் திருவன் * வலன் ஏந்து சக்கரத்தன் *
பாரைப் பிளந்த * பரமன் பரஞ்சோதி **
காரில் திகழ் * காயா வண்ணன் கதிர் முடிமேல் *
தாரில் நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 6
1683 mārvil tiruvaṉ * valaṉ entu cakkarattaṉ *
pāraip pil̤anta * paramaṉ parañcoti **
kāril tikazh * kāyā vaṇṇaṉ katir muṭimel *
tāril naṟun tuzhāy * tāzhntu ūtāy-kol tumpī-6

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1683. She says, “O kol bee, the lord at kannapuram with a discus in his right hand, the highest light who embraces Lakshmi on his chest split open the earth when he took the form of a boar. He has a dark cloud-like body that shines like a kāya flower. O kol bee, come and blow on the pollen of the fragrant thulasi garland that decorates his shining crown. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மார்வில் மார்பிலே; திருவன் திருமகளையுடையவனும்; வலன் ஏந்து வலக்கையில்; சக்கரத்தன் சக்கரத்தை உடையவனும்; பாரை பிளந்த பூமியை பிளந்த மேன்மை உடைய; பரமன் பரஞ்சோதியும்; பரஞ்சோதி நிகரற்ற சோதிஸ்வரூபனும்; காரில் திகழ் கருத்த பிரகாசமான; காயா வண்ணன் காயாம்பூ போன்றவனும்; கதிர் முடி மேல் ஒளியுடைய திருமுடிமீதுள்ள; தாரில் மாலையில்; நறுந் துழாய் மணம் மிக்க துளசியில்; தாழ்ந்து தங்கியிருந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்

PT 8.4.7

1684 வாமனன்கற்கி மதுசூதன்மாதவன் *
தார்மன்னுதாசரதியாய தடமார்வன் *
காமன்தன்தாதை கண்ணபுரத்தெம்பெருமான் *
தாமநறுந்துழாய் தாழ்ந்தூதாய்கோல்தும்பீ!
1684 வாமனன் கற்கி * மதுசூதன் மாதவன் *
தார் மன்னு * தாசரதி ஆய தடமார்வன் **
காமன் தன் தாதை * கண்ணபுரத்து எம் பெருமான் *
தாம நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 7
1684 vāmaṉaṉ kaṟki * matucūtaṉ mātavaṉ *
tār maṉṉu * tācarati āya taṭamārvaṉ **
kāmaṉ-taṉ tātai * kaṇṇapurattu ĕm pĕrumāṉ *
tāma naṟun tuzhāy * tāzhntu ūtāy-kol tumpī-7

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1684. She says, “O kol bee, our dear lord, the father of Kāma, Madhusudanan, Madhavan who was born as the son of Dasaratha adorned with garlands on his wide chest, who went to king Mahabali's sacrifice as a dwarf and who will take the form of Kalki stays in Thirukkannapuram. O bee, blow on the pollen of the fragrant thulasi garland that adorns the lord’s chest. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாமனன் கல்கி வாமநனாய் கல்கியாய்; மதுசூதன் மாதவன் மதுசூதனனாய் மாதவனாய்; தார் மன்னு மாலை அணிந்த; தடமார்வன் விசாலமான மார்பையுடையவனும்; தாசரதி ஆய தசரத குமாரனான ராமனும்; காமன் தன் மன்மதனுக்கு; தாதை தந்தையுமான; கண்ணபுரத்து கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமானின்; தாம மாலையிலுள்ள; நறுந் துழாய் மணம் மிக்க துளசியில்; தாழ்ந்து தங்கியிருந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்

PT 8.4.8

1685 நீலமலர்கள் நெடுநீர்வயல்மருங்கில் *
சாலமலரெல்லாம் ஊதாதே * வாளரக்கர்
காலன் கண்ணபுரத்தெம்பெருமான்கதிர்முடிமேல் *
கோலநறுந்துழாய் கொண்டூதாய்கோல்தும்பீ!
1685 நீல மலர்கள் * நெடு நீர் வயல் மருங்கில் *
சால மலர் எல்லாம் * ஊதாதே ** வாள் அரக்கர்
காலன் * கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல் *
கோல நறுந் துழாய் * கொண்டு ஊதாய் கோல் தும்பீ 8
1685 nīla malarkal̤ * nĕṭu nīr vayal maruṅkil *
cāla malar ĕllām * ūtāte ** vāl̤ arakkar
kālaṉ * kaṇṇapurattu ĕm pĕrumāṉ katir muṭimel *
kola naṟun tuzhāy * kŏṇṭu ūtāy-kol tumpī-8

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1685. She says, “ O kol bee, do not blow on the neelam flowers and other beautiful blossoms that bloom on the banks of the long fields filled with abundant water. Blow on the pollen of the lovely fragrant thulasi garland on the shining crown of the dear lord of Thirukkannapuram who is Yama to the Rakshasās. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெடு நீர் அதிகமான ஜலத்தையுடைய; வயல் வயல்களிலுண்டான; நீல மலர்கள் நீல மலர்களிலும்; மருங்கில் சால அருகிலிருக்கும் மற்ற; மலர் எல்லாம் எல்லா மலர்களிலும்; ஊதாதே ஒலிசெய்வதை தவிர்த்து; வாள் வாட்படையையுடைய; அரக்கர் காலன் அரக்கர்களின் காலன்; கண்ணபுரத்து கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமானின்; கதிர் முடி மேல் ஒளி பொருந்திய திருமுடி மீதுள்ள; கோல நறுந் அழகிய மணம் மிக்க; துழாய் கொண்டு துளசியைக்கொண்டு; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்

PT 8.4.9

1686 நந்தன்மதலை நிலமங்கைநல்துணைவன் *
அந்தமுதல்வன் அமரர்கள்தம்பெருமான் *
கந்தம்கமழ் காயாவண்ணன்கதிர்முடிமேல் *
கொந்துநறுந்துழாய் கொண்டூதாய்கோல்தும்பீ!
1686 நந்தன் மதலை * நில மங்கை நல் துணைவன் *
அந்தம் முதல்வன் * அமரர்கள் தம் பெருமான் **
கந்தம் கமழ் * காயா வண்ணன் கதிர் முடிமேல் *
கொந்து நறுந் துழாய் * கொண்டு ஊதாய் கோல் தும்பீ 9
1686 nantaṉ matalai * nila maṅkai nal tuṇaivaṉ *
antam mutalvaṉ * amararkal̤-tam pĕrumāṉ **
kantam kamazh * kāyā vaṇṇaṉ katir muṭimel *
kŏntu naṟun tuzhāy * kŏṇṭu ūtāy-kol tumpī-9

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1686. She says, “O kol bee, the ancient god of the gods in the sky (kannapuram) who has the dark color of a fragrant kāyā flower, the beloved husband of the earth goddess, was raised as the son of Nandan. Blow on the pollen of the flowers of the fragrant thulasi garland that adorns his shining hair. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நந்தன் மதலை நந்தகோப குமாரனும்; நில மங்கை பூமாதேவியின்; நல் துணைவன் இனிய துணைவனும்; அந்தம் முதல்வன் உலகத்துக்கு முதல்வனும்; அமரர்கள் தம் நித்யஸூரிகளின்; பெருமான் தலைவனும்; கந்தம் கமழ் மணம் கமழும்; காயா காயாம்பூப்போன்ற; வண்ணன் வண்ணமுடையவனின்; கதிர் ஒளிபொருந்திய; முடி மேல் திருமுடியின் மீதுள்ள; கொந்து கொத்துக் கொத்தான; துழாய் கொண்டு துளசியின்; நறும் மணத்தைக் கொண்டு வந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்

PT 8.4.10

1687 வண்டமருஞ்சோலை வயலாலிநன்னாடன் *
கண்டசீர்வென்றிக் கலியனொலிமாலை *
கொண்டல்நிறவண்ணன் கண்ணபுரத்தானை *
தொண்டரோம்பாட நினைந்தூதாய்கோல்தும்பீ! (2)
1687 ## வண்டு அமரும் சோலை * வயல் ஆலி நல் நாடன் *
கண்ட சீர் வென்றிக் * கலியன் ஒலி மாலை **
கொண்டல் நிற வண்ணன் * கண்ணபுரத்தானை *
தொண்டரோம் பாட * நினைந்து ஊதாய் கோல் தும்பீ 10
1687 ## vaṇṭu amarum colai * vayal āli nal nāṭaṉ *
kaṇṭa cīr vĕṉṟik * kaliyaṉ ŏli mālai **
kŏṇṭal niṟa vaṇṇaṉ * kaṇṇapurattāṉai *
tŏṇṭarom pāṭa * niṉaintu ūtāy-kol tumpī-10

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1687. Kaliyan, the king of rich Vayalāli surrounded with groves swarming with bees, who conquered many lands, composed ten Tamil pāsurams on the cloud-colored god of Thirukkannapuram. O kol bee, blow on the flowers as we his devotees and think of the god and sing the pāsurams of Kaliyan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு அமரும் வண்டுகள் இருக்கும்; சோலை சோலைகளையுடையவும்; வயல் வயல்களையுடையதுமான; ஆலி நல் நாடன் ஆலி நாட்டின் தலைவருமான; கண்ட சீர் பெரும் செல்வமுடைய; வென்றி எதிரிகளை வெற்றி பெரும்; கலியன் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; ஒலி மாலை ஒலி மாலையான இப்பாசுரங்களை; கொண்டல் நிற மேகம் போன்ற; வண்ணன் நிறமுடையவனை; கண்ணபுரத்தானை திருக்கண்ணபுரத்து எம்பெருமானை; தொண்டரோம் தொண்டர்களான நாங்கள்; பாட நினந்து பாட வேண்டும் என்று நினந்து நீ; ஊதாய் கோல் தும்பீ! ஊதவேண்டும்