PT 8.4.5

மலர்களை ஊதி என்ன பயன்? துழாயை ஊது

1682 ஏரார்மலரெல்லாம் ஊதிநீஎன்பெறுதி? *
பாராருலகம் பரவ, பெருங்கடலுள் *
காராமையான கண்ணபுரத்தெம்பெருமான் *
தாரார்நறுந்துழாய் தாழ்ந்தூதாய்கோல்தும்பீ!
1682 er ār malar ĕllām * ūti nī ĕṉ pĕṟuti? *
pār ār ulakam * parava pĕruṅ kaṭalul̤ **
kār āmai āṉa * kaṇṇapurattu ĕm pĕrumāṉ *
tār ār naṟun tuzhāy * tāzhntu ūtāy-kol tumpī-5

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1682. She says, “O kol bee, what do you gain by blowing on all these beautiful flowers? Come, blow on the pollen of the cool, fragrant thulasi garland of the lord of Thirukkannapuram praised by the whole world who took the form of a dark turtle in the large ocean. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏர் ஆர் அழகு நிரம்பிய; மலர் எல்லாம் புஷ்பங்களிலெல்லாம்; ஊதி நீ ஒலி செய்து நீ; என் பெறுதி? என்ன பேறு பெறுவாய்?; பார் ஆர் இப்பூமியில் இருக்கும்; உலகம் உயிரினங்களெல்லாம்; பரவ பெருங் கடலுள் வணங்குமாறு பெரிய கடலில்; கார் ஆமை ஆன பெரிய ஆமையாக அவதரித்த; கண்ணபுரத்து கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமானின்; தார் ஆர் மாலையில் இருக்கும்; நறுந் துழாய் மணம் மிக்க துளசியில்; தாழ்ந்து தாமதித்திருந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்