PT 8.4.1

வண்டே! நறுந்துழாயை ஊது

1678 விண்ணவர்தங்கள்பெருமான் திருமார்வன் *
மண்ணவரெல்லாம்வணங்கும் மலிபுகழ்சேர் *
கண்ணபுரத்தெம்பெருமான் கதிர்முடிமேல் *
வண்ணநறுந்துழாய் வந்தூதாய்கோல்தும்பீ! (2)
1678 ## viṇṇavar-taṅkal̤ pĕrumāṉ * tirumārvaṉ *
maṇṇavar ĕllām vaṇaṅkum * mali pukazh cer **
kaṇṇapurattu ĕm pĕrumāṉ * katir muṭimel *
vaṇṇa naṟun tuzhāy * vantu ūtāy-kol tumpī-1

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

l678. She says, “ O kol bee, come and blow on the pollen of the beautiful fragrant thulasi garland in the hair of the god of the gods in the sky who embraces beautiful Lakshmi on his chest. He stays in famous Thirukkannapuram where the whole world come and worships him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்ற வண்டே!; விண்ணவர் தங்கள் தேவர்களுக்கு; பெருமான் தலைவனும்; திருமார்வன் திருமகளை மார்பில் கொண்டவனும்; மண்ணவர் எல்லாம் உலகத்தவர்கள் எல்லாரும்; வணங்கும் வணங்குபவனும்; மலி புகழ் சேர் நிறைந்த கீர்த்தியை உடையவனுமான; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமானின்; கதிர் முடிமேல் ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள; வண்ண நறுந் அழகிய மணமுள்ள; துழாய் வந்து துளசியை கொண்டு வந்து; ஊதாய் நீ ஊதுவாய்