PT 8.4.7

வண்டே! துழாய் மாலையையே ஊது

1684 வாமனன்கற்கி மதுசூதன்மாதவன் *
தார்மன்னுதாசரதியாய தடமார்வன் *
காமன்தன்தாதை கண்ணபுரத்தெம்பெருமான் *
தாமநறுந்துழாய் தாழ்ந்தூதாய்கோல்தும்பீ!
1684 vāmaṉaṉ kaṟki * matucūtaṉ mātavaṉ *
tār maṉṉu * tācarati āya taṭamārvaṉ **
kāmaṉ-taṉ tātai * kaṇṇapurattu ĕm pĕrumāṉ *
tāma naṟun tuzhāy * tāzhntu ūtāy-kol tumpī-7

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1684. She says, “O kol bee, our dear lord, the father of Kāma, Madhusudanan, Madhavan who was born as the son of Dasaratha adorned with garlands on his wide chest, who went to king Mahabali's sacrifice as a dwarf and who will take the form of Kalki stays in Thirukkannapuram. O bee, blow on the pollen of the fragrant thulasi garland that adorns the lord’s chest. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாமனன் கல்கி வாமநனாய் கல்கியாய்; மதுசூதன் மாதவன் மதுசூதனனாய் மாதவனாய்; தார் மன்னு மாலை அணிந்த; தடமார்வன் விசாலமான மார்பையுடையவனும்; தாசரதி ஆய தசரத குமாரனான ராமனும்; காமன் தன் மன்மதனுக்கு; தாதை தந்தையுமான; கண்ணபுரத்து கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமானின்; தாம மாலையிலுள்ள; நறுந் துழாய் மணம் மிக்க துளசியில்; தாழ்ந்து தங்கியிருந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்