PT 8.4.9

கண்ணபிரான் சூடிய நறுந்துழாயை ஊது

1686 நந்தன்மதலை நிலமங்கைநல்துணைவன் *
அந்தமுதல்வன் அமரர்கள்தம்பெருமான் *
கந்தம்கமழ் காயாவண்ணன்கதிர்முடிமேல் *
கொந்துநறுந்துழாய் கொண்டூதாய்கோல்தும்பீ!
1686 nantaṉ matalai * nila maṅkai nal tuṇaivaṉ *
antam mutalvaṉ * amararkal̤-tam pĕrumāṉ **
kantam kamazh * kāyā vaṇṇaṉ katir muṭimel *
kŏntu naṟun tuzhāy * kŏṇṭu ūtāy-kol tumpī-9

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1686. She says, “O kol bee, the ancient god of the gods in the sky (kannapuram) who has the dark color of a fragrant kāyā flower, the beloved husband of the earth goddess, was raised as the son of Nandan. Blow on the pollen of the flowers of the fragrant thulasi garland that adorns his shining hair. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நந்தன் மதலை நந்தகோப குமாரனும்; நில மங்கை பூமாதேவியின்; நல் துணைவன் இனிய துணைவனும்; அந்தம் முதல்வன் உலகத்துக்கு முதல்வனும்; அமரர்கள் தம் நித்யஸூரிகளின்; பெருமான் தலைவனும்; கந்தம் கமழ் மணம் கமழும்; காயா காயாம்பூப்போன்ற; வண்ணன் வண்ணமுடையவனின்; கதிர் ஒளிபொருந்திய; முடி மேல் திருமுடியின் மீதுள்ள; கொந்து கொத்துக் கொத்தான; துழாய் கொண்டு துளசியின்; நறும் மணத்தைக் கொண்டு வந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்