PT 8.4.10

வண்டே! நாங்கள் பாட நீ துழாயை ஊது

1687 வண்டமருஞ்சோலை வயலாலிநன்னாடன் *
கண்டசீர்வென்றிக் கலியனொலிமாலை *
கொண்டல்நிறவண்ணன் கண்ணபுரத்தானை *
தொண்டரோம்பாட நினைந்தூதாய்கோல்தும்பீ! (2)
1687 ## vaṇṭu amarum colai * vayal āli nal nāṭaṉ *
kaṇṭa cīr vĕṉṟik * kaliyaṉ ŏli mālai **
kŏṇṭal niṟa vaṇṇaṉ * kaṇṇapurattāṉai *
tŏṇṭarom pāṭa * niṉaintu ūtāy-kol tumpī-10

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1687. Kaliyan, the king of rich Vayalāli surrounded with groves swarming with bees, who conquered many lands, composed ten Tamil pāsurams on the cloud-colored god of Thirukkannapuram. O kol bee, blow on the flowers as we his devotees and think of the god and sing the pāsurams of Kaliyan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு அமரும் வண்டுகள் இருக்கும்; சோலை சோலைகளையுடையவும்; வயல் வயல்களையுடையதுமான; ஆலி நல் நாடன் ஆலி நாட்டின் தலைவருமான; கண்ட சீர் பெரும் செல்வமுடைய; வென்றி எதிரிகளை வெற்றி பெரும்; கலியன் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; ஒலி மாலை ஒலி மாலையான இப்பாசுரங்களை; கொண்டல் நிற மேகம் போன்ற; வண்ணன் நிறமுடையவனை; கண்ணபுரத்தானை திருக்கண்ணபுரத்து எம்பெருமானை; தொண்டரோம் தொண்டர்களான நாங்கள்; பாட நினந்து பாட வேண்டும் என்று நினந்து நீ; ஊதாய் கோல் தும்பீ! ஊதவேண்டும்